தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-960

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இறையில்லமான கஅபாவைச் சுற்றி வரும்போது பேசுவது குறித்து வந்துள்ளவை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறையில்லமான) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவது தொழுகையைப் போன்றதாகும். என்றாலும் நீங்கள் தவாஃப் செய்யும்போது பேசிக்கொள்ளலாம். அப்படி ஒருவர் பேசுவதாக இருந்தால் அவர் நல்லதைத் தவிர வேறு எதையும் பேசவேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி இப்னு தாவூஸ் அவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் தாவூஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நபியின் சொல்லாக, அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) அவர்களின் வழியாகவே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.

இந்தச் செய்தியின் அடிப்படையில், கஅபாவைச் சுற்றி வருபவர் ஏதேனும் அவசியமான பேச்சுகள், அல்லாஹ்வை திக்ரு செய்தல், கல்வி சார்ந்த விசயங்கள் தவிர மற்றவற்றை பேசாமலிருப்பது நல்லது என்று கல்வியாளர்களில் அதிகமானோர் கருதுகின்றனர்.

(திர்மிதி: 960)

بَابُ مَا جَاءَ فِي الكَلَامِ فِي الطَّوَافِ

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الطَّوَافُ حَوْلَ البَيْتِ مِثْلُ الصَّلَاةِ، إِلَّا أَنَّكُمْ تَتَكَلَّمُونَ فِيهِ، فَمَنْ تَكَلَّمَ فِيهِ فَلَا يَتَكَلَّمَنَّ إِلَّا بِخَيْرٍ»

وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ، عَنْ ابْنِ طَاوُسٍ وَغَيْرِهِ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ مَوْقُوفًا، وَلَا نَعْرِفُهُ مَرْفُوعًا إِلَّا مِنْ حَدِيثِ عَطَاءِ بْنِ السَّائِبِ وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ العِلْمِ: يَسْتَحِبُّونَ أَنْ لَا يَتَكَلَّمَ الرَّجُلُ فِي الطَّوَافِ إِلَّا لِحَاجَةٍ، أَوْ بِذِكْرِ اللَّهِ تَعَالَى، أَوْ مِنَ العِلْمِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-960.
Tirmidhi-Alamiah-883.
Tirmidhi-JawamiulKalim-881.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . குதைபா பின் ஸயீத்

3 . ஜரீர் பின் அப்துல்ஹமீத்

4 . அதாஉ பின் ஸாயிப்

5 . தாவூஸ் பின் கைஸான்

6 . இப்னு அப்பாஸ் (ரலி)


ஆய்வின் சுருக்கம்:

இந்தச் செய்தியை சிலர் நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர். சிலர் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
முன்திரீ, நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
போன்ற அறிஞர்கள் நபித்தோழரின் சொல்லாக வந்துள்ள செய்திகளுக்கு முன்னுரிமை தந்துள்ளனர்.

வேறு சில அறிஞர்களான இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்றோர் நபியின் சொல்லாக வந்துள்ள செய்திகளும், குறிப்பாக மேற்கண்ட செய்தியும் சரியானவை என்று கூறியுள்ளனர்.


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (13/ 162)
3044- وسئل عن حديث طاووس، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم، قال الطواف بالبيت صلاة، فأقلوا فيه الكلام.
فقال: اختلف فيه على طاووس؛
فرواه حنظلة بن أبي سفيان، عن طاووس، واختلف عنه؛
فرواه الثوري، عن حنظلة، عن طاووس، عن ابن عمر.
رفعه أبو حذيفة، عن الثوري، ووقفه مؤمل.
وكذلك رواه ابن وهب، وأبو عاصم، وإسحاق بن سليمان الرازي، عن حنظلة، موقوفا.

ورواه الحسن بن مسلم، عن طاووس، عن رجل أدرك النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ يُسَمِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

وَرَوَاهُ عطاء بن السائب، عن طاووس، عن ابن عباس، واختلف عنه في رفعه: فرفعه فضيل بن عياض، وجرير، وموسى بن أعين بن أبي جعفر.
ورواه إبراهيم بن ميسرة، عن طاووس.
وقول من قال: عن ابن عمر، أشبه.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، قال حدثنا حاجب بن سليمان، ومحمد بن مصعب الصوري، قالا: حدثنا مؤمل، قال: حدثنا سفيان، عن حنظلة، عن طاووس، عن ابن عمر، قال: الطواف بالبيت صلاة، فأقلوا فيه الكلام.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، قال حدثنا أحمد بن منصور، قال: حدثنا أبو حذيفة، قال: حدثنا سفيان، عن حنظلة بن أبي سفيان، عن طاووس، عن ابن عمر لَا أَعْلَمُهُ إِلَّا رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى الله عليه وسلم: الطواف بالبيت صلاة، فأقلوا فيه الكلام

இந்தச் செய்தியின் பல வகையான அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவற்றில், இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்தியே மிகச் சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-3044)


இந்தச் செய்தியை அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் சிலர் நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர். சிலர் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

அதாஉ பின் ஸாயிப் அவர்கள் இறுதிக் காலத்தில் மூளைக் குழம்பியவர் ஆவார். இவரிடமிருந்து ஆரம்பத்தில் கேட்டவர்களான ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
(இவ்வாறே இப்னு உயைனா) ஆகியோர் அறிவிக்கும் செய்திகள் சரியானவையாகும்.

இதனடிப்படையில் இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து இருவகையான அறிவிப்பாளர்தொடர்களை அதாவது நபியின் சொல்லாகவும், நபித்தோழரின் சொல்லாகவும் அறிவித்துள்ளார். அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு உயைனா அவர்களும் இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். எனவே முக்கியமான பலமான அறிவிப்பாளர்களும் இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர் என்பதால் அதாஉ பின் ஸாயிப் வழியாக வரும் செய்திகளும் சரியானவையே என்று இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: அத்தல்கீஸ்-1/225, அல்மின்ஹாஜ்-8/368…)


 

 


1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • தாவூஸ் பின் கைஸான் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, தாரிமீ-, திர்மிதீ-960 , முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-, …


  • ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: ஹாகிம்-3056 , குப்ரா பைஹகீ-,


2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: நஸாயீ-2923 .


3 . பெயர் குறிப்பிடப்படாதவர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-15423 .


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.