தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2697

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

பெண்களுக்கு ஸலாம் கூறுதல்.

2697. பெண்களில் சிறுகூட்டத்தினர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களுக்கு ஸலாம் கூறி தன்னுடைய கைகளை அசைத்தார்கள்.

அறிவிப்பவர் : (ரலி)

அஸ்மா பின்த் யஸீத் (ரலி)

أسماء بنت يزيد بن السكن

இறப்பு: ஹிஜ்ரி 63, திமிஷ்க்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அஸ்மா அல்லது ஃபுகைஹா பின்த் யஸீத்

தந்தை பெயர்: யஸீத் பின் அஸ்ஸகன்

வம்சம்: பனூ அப்துல் அஷ்ஹல்

புனைப்பெயர்: உம்மு ஆமிர், உம்மு ஸலமா

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, திமிஷ்க்

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 63, திமிஷ்க்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அஸ்மா பின்த் யஸீத் ரலி அவர்கள் சிறந்த அறிவும், நாவன்மையும் கொண்ட நபித்தோழியாவார். அவர்கள் "பெண்களின் பேச்சாளர்" என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் 81 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள்.

மக்கா வெற்றியின்போது நபி (ஸல்) அவர்களுடன் சென்றார்கள். யர்மூக் போரில் கலந்துகொண்டு, தனது கூடாரத்தின் கம்பத்தால் ஒன்பது எதிரி வீரர்களைக் கொன்றார்கள். அவர்கள் திமிஷ்க் நகரில் வாழ்ந்தார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): மஹ்மூத் பின் அம்ர் பின் யஸீத் பின் அஸ்ஸகன், ஷஹ்ர் பின் ஹவ்ஷப், முஹாஜிர் பின் அபூ முஸ்லிம், இஸ்ஹாக் பின் ராஷித், முஜாஹித், அபூ ஸுஃப்யான் மவ்லா இப்னு அபீ அஹ்மத், அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் அஸ்ஸாமித்

வேறு பெயர்கள்: ஃபுகைஹா பின்த் யஸீத், உம்மு ஆமிர், உம்மு ஸலமா


ஆதாரம்: muslimscholars.info (84) · Should verify


بَابُ مَا جَاءَ فِي التَّسْلِيمِ عَلَى النِّسَاءِ

حَدَّثَنَا سُوَيْدٌ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الحَمِيدِ بْنُ بَهْرَامَ، أَنَّهُ سَمِعَ شَهْرَ بْنَ حَوْشَبٍ، يَقُولُ: سَمِعْتُ أَسْمَاءَ بِنْتَ يَزِيدَ، تُحَدِّثُ

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ فِي المَسْجِدِ يَوْمًا وَعُصْبَةٌ مِنَ النِّسَاءِ قُعُودٌ، فَأَلْوَى بِيَدِهِ بِالتَّسْلِيمِ»

وَأَشَارَ عَبْدُ الحَمِيدِ بِيَدِهِ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ» قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ: «لَا بَأْسَ بِحَدِيثِ عَبْدِ الحَمِيدِ بْنِ بَهْرَامَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ» وقَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ: «شَهْرٌ حَسَنُ الحَدِيثِ وَقَوَّى أَمْرَهُ» وقَالَ: «إِنَّمَا تَكَلَّمَ فِيهِ ابْنُ عَوْنٍ» ثُمَّ رَوَى عَنْ هِلَالِ بْنِ أَبِي زَيْنَبَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، عَنْ ابْنِ عَوْنٍ، قَالَ: «إِنَّ شَهْرًا نَزَكُوهُ» قَالَ أَبُو دَاوُدَ: قَالَ النَّضْرُ: «نَزَكُوهُ أَيْ طَعَنُوا فِيهِ وَإِنَّمَا طَعَنُوا فِيهِ لِأَنَّهُ وَلِيَ أَمْرَ السُّلْطَانِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2621.
Tirmidhi-Shamila-2697.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2640.



இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-27561 , 27589 , தாரிமீ-2679 , அல்அதபுல் முஃப்ரத்-1047 , 1048 , இப்னு மாஜா-3701 , அபூதாவூத்-5204 , திர்மிதீ-2697 ,

…

2 comments on Tirmidhi-2697

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹூ

    ஆய்வில் உள்ள ஹதீஸ்களுக்கு எத்தனை கால அளவிற்குள் விடை தருவீர்கள் என்பதை தெரிவியுங்கள் இன்ஷா அல்லாஹ்

    1. வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு.

      குறிப்பிட்ட ஆய்வுச் செய்திகளின் அறிவிப்பாளர்தொடர்கள் எண்ணிக்கை, அறிவிப்பாளர்கள் பற்றிய விமர்சனம், அந்த ஹதீஸ் குறித்த பிற தகவலுக்கு ஏற்றவாறு காலம் தேவைப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.