தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-278

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (நேர்மையாகவும் உறுதியாகவும்) நிலைத்திருங்கள்; உங்களால் (அதன் நன்மைகளை முழுமையாக) கணக்கிட்டு விட முடியாது.

உங்கள் நற்செயல்களில் மிகச் சிறந்தது தொழுகை என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும், முஃமினை (முழுமையான இறைநம்பிக்கையாளரை)த் தவிர வேறு எவரும் உளூவை வழக்கமாக்கிக் கொள்வதில்லை.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

(இப்னுமாஜா: 278)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبِ قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«اسْتَقِيمُوا، وَلَنْ تُحْصُوا، وَاعْلَمُوا أَنَّ مِنْ أَفْضَلِ أَعْمَالِكُمُ الصَّلَاةَ، وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-274.
Ibn-Majah-Shamila-278.
Ibn-Majah-Alamiah-274.
Ibn-Majah-JawamiulKalim-274.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34781-லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

பார்க்க: ராவிபெயர்-34781-லைஸ் பின் அபூஸுலைம்.


2 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-278, முஸ்னத் பஸ்ஸார்-2367, ஷுஅபுல் ஈமான்-2546, …


மேலும் பார்க்க: அஹ்மத்-22433.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.