தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-419

 

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களைத் தவிர வேறு தொழுகை இல்லை என்பது குறித்த வந்துள்ளவை.

419. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு இரண்டு ஸஜ்தாக்களைத் தவிர வேறு இல்லை.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஹஃப்ஸா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

இப்னு உமர் (ரலி) அவர்களின் இந்தச் செய்தி “ஃகரீப்-அரிதானது” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதை குதாமா பின் மூஸா என்பவர் வழியாகவே நாம் அறிகிறோம். இதை இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியின் கருத்தை அறிஞர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு, ஃபஜ்ரின் (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களைத் தவிர வேறு தொழுகைகளைத் தொழுவதை அவர்கள் வெறுக்கின்றனர்.

இந்தச் செய்தியின் (சரியான) கருத்து: “ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு ஃபஜ்ரின் (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களைத் தவிர வேறு தொழுகை இல்லை” என்பதாகும்.

(திர்மிதி: 419)

بَابُ مَا جَاءَ لَا صَلَاةَ بَعْدَ طُلُوعِ الفَجْرِ إِلَّا رَكْعَتَيْنِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ قُدَامَةَ بْنِ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ الحُصَيْنِ، عَنْ أَبِي عَلْقَمَةَ، عَنْ يَسَارٍ، مَوْلَى ابْنِ عُمَرَ، عَنْ ابْنِ عُمَرَ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا صَلَاةَ بَعْدَ الفَجْرِ إِلَّا سَجْدَتَيْنِ»،

وَفِي البَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَحَفْصَةَ، حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ قُدَامَةَ بْنِ مُوسَى، وَرَوَى عَنْهُ غَيْرُ وَاحِدٍ، وَهُوَ مَا اجْتَمَعَ عَلَيْهِ أَهْلُ العِلْمِ: كَرِهُوا أَنْ يُصَلِّيَ الرَّجُلُ بَعْدَ طُلُوعِ الفَجْرِ إِلَّا رَكْعَتَيِ الفَجْرِ، وَمَعْنَى هَذَا الحَدِيثِ: إِنَّمَا يَقُولُ: لَا صَلَاةَ بَعْدَ طُلُوعِ الفَجْرِ، إِلَّا رَكْعَتَيِ الفَجْرِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-419.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.



 


இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் விமர்சனம் உள்ளது.

 


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஅல்கமா —> யஸார் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) 

பார்க்க: அஹ்மத்-5811, அபூதாவூத்-1278, திர்மிதீ-419, …


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.