தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-278

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

278. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (நேர்மையாகவும் உறுதியாகவும்) நிலைத்திருங்கள்; உங்களால் (அதன் நன்மைகளை முழுமையாக) கணக்கிட்டு விட முடியாது.

உங்கள் நற்செயல்களில் மிகச் சிறந்தது தொழுகை என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும், முஃமினை (முழுமையான இறைநம்பிக்கையாளரை)த் தவிர வேறு எவரும் உளூவை வழக்கமாக்கிக் கொள்வதில்லை.

அறிவிப்பவர்: (ரலி)

ஸவ்பான் (ரலி)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.


حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبِ قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«اسْتَقِيمُوا، وَلَنْ تُحْصُوا، وَاعْلَمُوا أَنَّ مِنْ أَفْضَلِ أَعْمَالِكُمُ الصَّلَاةَ، وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-274.
Ibn-Majah-Shamila-278.
Ibn-Majah-Alamiah-274.
Ibn-Majah-JawamiulKalim-274.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34781-லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

பார்க்க: ராவிபெயர்-34781-லைஸ் பின் அபூஸுலைம்.


2 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-278, முஸ்னத் பஸ்ஸார்-2367, ஷுஅபுல் ஈமான்-2546, …


மேலும் பார்க்க: அஹ்மத்-22433.

லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன்

லைஸ் பின் அபூஸுலைம்-الليث بن أبي سليم القرشي

இறப்பு: ஹி-138.

தரம்: பலவீனமானவர். தனித்து அறிவித்தால் ஏற்கக்கூடாது. சிலர் இவரின் செய்திகளை துணைச் சான்றாக குறிப்பிடலாம் என்று கூறியுள்ளனர்.


இயற்பெயர்: லைஸ்

வமிசம்: அல்குரஷீ, அல்கூஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூபக்ர், அபூபுகைர்.

ஊர் பெயர்: கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி-138.

கால கட்டம்: 6.


5685- الليث ابن أبي سليم ابن زنيم بالزاي والنون مصغر واسم أبيه أيمن وقيل أنس وقيل غير ذلك صدوق اختلط جدا ‌ولم ‌يتميز ‌حديثه ‌فترك من السادسة مات سنة ثمان وأربعين خت م


* [5685] الليث بن أبي سليم بن زنيم بالزاي والنون مصغر واسم أبيه أيمن وقيل أنس وقيل غير ذلك صدوق اختلط جدا ‌ولم ‌يتميز ‌حديثه ‌فترك من السادسة مات سنة ثمان وأربعين خت م 4

قلت: صالح الحديث: قال أحمد بن حنبل "مضطرب الحديث" وأبو حاتم وأبو زرعة "لا يشتغل به هو مضطرب الحديث" وأبو زرعة "لين الحديث لا تقوم به الحجة عند أهل العلم بالحديث" وابن عدي "له أحاديث صالحة وقد روى عنه شعبة والثوري ومع الضعف الذي فيه يكتب حديثه" (تهذيب التهذيب 8/ 465) وابن حجر "ضعيف الحفظ يعتبر به ويستشهد به" (فتح الباري 1/ 349). واختلفت أقوال ابن معين فيه بين توثيق وتضعيف فالقول لأحمد بن حنبل.


லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

இப்னு மயீன், அபூஹாதிம், அபூஸுர்ஆ ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இவர் குளறுபடியாக அறிவிப்பவர் என அஹ்மத் இமாம் கூறியுள்ளார்.

இவருடைய செய்தியை எழுதிக்கொள்ளலாம். ஆனால் தனி ஆதாரமாக ஏற்க முடியாது என இப்னு அதீ கூறியுள்ளார்.

இப்னு ஹஜர் அவர்கள் இவர் மூளைக்குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை; எனவே இவர் கைவிடப்பட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721, தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப்-5685)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.