தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22433

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔

22433. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நடுநிலையோடு (நற்)செயல் புரியுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாக (நற்)செயல் புரியுங்கள்.

நற்செயல்களைச் செய்யுங்கள்; உங்கள் செயல்களில் மிகச் சிறந்தது தொழுகையாகும். மேலும், முஃமினை (முழுமையான இறைநம்பிக்கையாளரை)த் தவிர வேறு எவரும் உளூவை வழமையாக்கிக் கொள்வதில்லை.

அறிவிப்பவர்: (ரலி)

ஸவ்பான் (ரலி)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.


حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، حَدَّثَنِي حَسَّانُ بْنُ عَطِيَّةَ، أَنَّ أَبَا كَبْشَةَ السَّلُولِيَّ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ ثَوْبَانَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«سَدِّدُوا وَقَارِبُوا وَاعْمَلُوا، وخَيْرَ أَعْمَالِكُمُ الصَّلَاةُ، وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21397.
Musnad-Ahmad-Shamila-22433.
Musnad-Ahmad-Alamiah-21397.
Musnad-Ahmad-JawamiulKalim-21844.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்

2 . வலீத் பின் முஸ்லிம்-அபுல்அப்பாஸ்

3 . இப்னு ஸவ்பான்-அப்துர்ரஹ்மான் பின் ஸாபித்

4 . ஹஸ்ஸான் பின் அதிய்யா

5 . ஜிப்ரீல் பின் யஸார்-அபூகப்ஷா

6 . ஸவ்பான் (ரலி)


ஆய்வின் சுருக்கம்:

இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகளில் மேற்கண்ட ஹஸ்ஸான் பின் அதிய்யா அவர்கள் வழியாக வரும் செய்தி, இப்னு ஸவ்பான் அவர்கள் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதால் ஹஸன் தர செய்தியாகும்.

பார்க்க: ராவிபெயர்-21626-அப்துர்ரஹ்மான் பின் ஸாபித்-இப்னு ஸவ்பான்.


1 . இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . ஹஸ்ஸான் பின் அதிய்யா —> அபூகப்ஷா —> ஸவ்பான் (ரலி)

பார்க்க: அஹ்மத்-22433, தாரிமீ-682, இப்னு ஹிப்பான்-1037, அல்முஃஜமுல் கபீர்- 1444, …


2 . அஃமஷ், மன்ஸூர், யஸீத் பின் அபூஸியாத் —> ஸாலிம் பின் அபுல்ஜஃத் —> ஸவ்பான் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1089, அஹ்மத்-22378, 22436, தாரிமீ-681, இப்னு மாஜா-277, முஸ்னத் ரூயானீ-614, 615, 616, 619, அல்முஃஜமுல் அவ்ஸத்-7019, ஹாகிம்-447, 448, 449, …


  • முஸ்னத் ரூயானீ-614, 615, 616, 619…

مسند الروياني (1/ 406)
619 – نا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ، نا ابْنُ فُضَيْلٍ، عَنِ الْأَعْمَشِ وَيَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ: «اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا، وَاعْلَمُوا أَنَّ أَفْضَلَ أَعْمَالِكُمُ الصَّلَاةُ، وَلَنْ يُحَافِظَ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»

…


3 . ஹரீஸ் பின் உஸ்மான் —> அப்துர்ரஹ்மான் பின் மைஸரா —> ஸவ்பான் (ரலி)

பார்க்க: அஹ்மத்-22414, முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1078, …


…


2 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-278.


3 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-279.


4 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-72.


5 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-450.


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-5428,

அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் ஸவ்பான்

عبد الرحمن بن ثابت بن ثوبان

பிறப்பு: ஹி 75, இறப்பு: ஹி 165. வயது சுமார் 90

தரம்: ஸதூக்-நடுத்தரமானவர். சில அறிவிப்புகளை தவறாக அறிவித்துள்ளார்.


இயற்பெயர்: அப்துர்ரஹ்மான்

தந்தை பெயர்: ஸாபித் பின் ஸவ்பான்

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்

ஊர், வமிசம்: ஷாம், திமிஷ்க், அல்அன்ஸீ

பிறப்பு: ஹிஜ்ரீ-75

இறப்பு: ஹிஜ்ரீ-165

கால கட்டம்: 7.


அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் ஸவ்பான் அவர்களைப் பற்றி சிலர் பாராட்டியும் உள்ளனர். சிலர் விமர்சித்தும் உள்ளனர்.

துஹைம், அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ், அபூஹாதிம் ராஸீ, அபூஹாதிம் (இப்னு ஹிப்பான்), அப்துர்ரஹ்மான் பின் இப்ராஹீம் ஆகியோர் இவரை பலமானவர் என்று கூறியுள்ளனர்.

இப்னு மயீன், இப்னுல் மதீனீ, இஜ்லீ, யஃகூப் பின் ஷைபா, அபூதாவூத், ஸாலிஹ் பின் முஹம்மத், அபூஸுர்ஆ, இப்னு ஷாஹீன், அபூபக்ர் கதீப் பக்தாதீ ஆகியோர் இவரிடம் குறையில்லை-சுமாரானவர், ஸதூக்-நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.

அபூதாவூத் அவர்கள், இவர் நல்லமனிதர்; இவர் துஆ செய்தால் அல்லாஹ்வால் ஏற்கப்படும் நிலையில் உள்ள மனிதர் என்று கூறியுள்ளார்.

(அபூஸுர்ஆ அவர்கள், இவரிடம் சிறிது பலவீனம் உள்ளது என்று கூறியதாக வந்துள்ள தகவல் தவறானது. அஸல் பிரதிகளில் இந்தக் கருத்து இல்லை)

கத்ரிய்யா, காரிஜிய்யா கொள்கையுடையவர்.

கத்ரிய்யா, காரிஜிய்யா கொள்கையுடைவர்களின் கொள்கையான அநியாயக்கார ஆட்சியாளர்கள் பின்னால் தொழக்கூடாது என்பதின்படி இவர் நடந்துள்ளார். இவர் கடமையான தொழுகைகளிலும், ஜுமுஆவிலும் கலந்துக் கொள்ளாமல் இருந்ததால் இவரின் தந்தையின் நண்பரான அவ்ஸாயீ இமாம் அவர்கள், இவருக்கு உபதேசம் செய்து எழுதிய கடிதத்தின் மூலம் இது தெரிகிறது.

(நூல்: அல்மஃரிஃபது வத்தாரீக்-2/391, 392).

எனவே தான் இவர் கத்ரிய்யா கொள்கையுடையவர் என்று துஹைம், அபூஹாதிம், ஸாலிஹ் பின் முஹம்மத் ஆகியோர் கூறியுள்ளனர்.

(அபூதாவூத் அவர்கள், இவர் கத்ரிய்யா கொள்கையுடையவர் என்ற கருத்தை மறுத்துள்ளார்)

(என்றாலும் பித்அத் கொள்கையுடையவர்கள் நம்பகமானவராக இருந்து அவர் பித்அத்திற்கு அழைக்காதவர் என்றால் அவரின் செய்திகளை ஏற்கலாம் என்பதே யஹ்யா பின் ஸயீத், இப்னுல் மதீனீ, கதீப் பக்தாதீ போன்ற பல அறிஞர்களின் கருத்தாக உள்ளது. அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் ஆரம்பத்தில் இதை ஏற்காதவராக இருந்தாலும் கடைசி காலத்தில் இந்த வகையினரிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். எனவே தான் புகாரீ இமாம் அவர்களும் இது போன்ற பித்அத் கொள்கையுடையவர்கள் இடம்பெறும் ஹதீஸ்களையும் அறிவித்துள்ளார்.)

கடைசி காலத்தில் மூளைக் குழம்பியவர்.

அபூஹாதிம் அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியிருப்பதுடன் கடைசி காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்றும் இவரின் செய்திகள் சரியானவையே என்றும் கூறியுள்ளார். (எனவே இதன் மூலம் இவர் மூளை குழம்பியபின் ஹதீஸை அறிவிக்கவில்லை என்று தெரிகிறது என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்).

பலவீனமானவர்.

இமாம் இஜ்லீ அவர்கள், இவரை சுமாரானவர் என்று கூறியிருப்பதுடன் சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இவ்வாறே அப்துர்ரஹ்மான் பின் யூஸுஃப் பின் கிராஷ், அபூஸுர்ஆ ஆகியோரும் கூறியுள்ளனர்.

இப்னு மயீன் அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியதாக உஸ்மான் தாரிமீ அவர்களும்; இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியதாக இப்னு அபூகைஸமா அவர்களும் அறிவித்துள்ளனர். இப்னு மயீன் அவர்கள், இவர் பலவீனமானவர் என்றாலும் இவர் நல்ல மனிதர் இவரின் செய்திகளை எழுதிக்கொள்லலாம் என்று கூறியதாக முஆவியா பின் ஸாலிஹ் கூறியுள்ளார்.

இப்னு அதீ அவர்களும் இந்தக் கருத்தையே கூறியுள்ளார்.

(என்றாலும் அப்பாஸ் பின் முஹம்மத் அத்தூரீ அவர்கள், இப்னு மயீன் அவர்கள் இவரை சுமாரானவர் என்று கூறியதாக அறிவித்துள்ளார் என்பதால் அப்பாஸ் அத்தூரீ அவர்களின் கருத்துக்கே முதலிடம் கொடுக்கப்படும் என்பதின் படி இப்னு மயீன் அவர்களின் கருத்து இவர் சுமாரானவர் என்பதாகும்)


நஸாயீ, உகைலீ, இப்னுல் ஜவ்ஸீ ஆகியோரும் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். (அறிவிப்பாளகளை விமர்சிப்பதில் இவர்கள் கடினம் கொண்டவர்கள் என்பதால் மற்ற மூத்த அறிஞர்களின் கருத்திற்கே முதலிடம் தரவேண்டும்.)

இமாம் அஹ்மத் அவர்கள் இவர் பலமானவர் அல்ல என்றும், இவரின் ஹதீஸ்களை முன்கர் என்றும் கூறியுள்ளார்.

என்றாலும் இவரின் மாணவர்களான அபூதாவூத், யஃகூப் பின் ஷைபா ஆகியோர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. இப்னுல் மதீனீ அவர்களின் கருத்திற்கே முன்னுரிமை தந்துள்ளனர்.

யஃகூப் பின் ஷைபா அவர்கள், இவர் விசயத்தில் நம்முடைய தோழர்கள் (ஆசிரியர்கள்) கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இப்னு மயீன் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இப்னுல் மதீனீ அவர்கள் இவர் விசயத்தில் நல்லெண்ணம் கொண்டுள்ளார். எனவே இவர் உண்மையாளர்; இவர் விசயத்தில் குறை இல்லை (சுமாரானவர்) என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/494)


இவர் தன் தந்தையிடமிருந்து மக்ஹூல் வழியாக அறிவிக்கும் செய்திகள் முன்கரானவை என்று ஸாலிஹ் பின் முஹம்மத் அவர்கள் கூறியுள்ளார். (இந்தக் கருத்து ஏற்கத்தக்கதே)

(ஆதார நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/219 , அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/460, தாரீகுல் இஸ்லாம்-4/433, ஸியரு அஃலாமின் நுபலாஃ-7/313, அல்காஷிஃப்-3/243, தஹ்தீபுல் கமால்-17/12, தஹ்தீபுத் தஹ்தீப்-2/493, 494)

அஹ்மத் இமாம்-அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹன்பல்

இமாம் அஹ்மத்

முழுப்பெயர் : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர் : அபூஅப்தில்லாஹ்

இயற்பெயர் : அஹ்மத்

தந்தைப்பெயர் : முஹம்மது

பிறந்த ஊர் : பக்தாதில் பிறந்தார்

பிறந்த நாள் :  ஹிஜ்ரி 164ம் ஆண்டு

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற உலகில் உள்ள பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

முஸ்னத் அஹ்மத்

அஸ்ஸுஹுத்

ஃபலாயிலுஸ் ஸஹாபா (ஸஹாபாக்களின் சிறப்பு)

அல்அஷ்ரிபத்

அல்இலல்

அன்னாஸிஹ் வல்மன்ஸுஹ்

அல்மனாசிக்

கிதாபுல் ஃபிதன்

கிதாபுல் ஃபலாயிலி அஹ்லில் பைத்

முஸ்னத் அஹ்லில் பைத்

அல்அஸ்மாவு வல்குனா ( அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது)

கிதாபுத்தாரிக்

அல்முகத்தமு வல்முதஅக்கர் (முந்தியவர்கள் பிந்தியவர்கள்)

இப்ராஹீம் இப்னு காலித் அஸ்ஸன்ஆனி, இஸ்மாயீல் இப்னு உலய்யா, அபூபக்கர் இப்னு அய்யாஷ், இஸ்ஹாக் இப்னு யூசுஃப் அல்அஸ்ரக், ரபிஃ இப்னு உலய்யா, ரவ்ஹ் இப்னு உப்பாதா, சுஃப்யான் இப்னு உஐனா, தல்க் இப்னு நகயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்புகாரி, முஸ்லிம் இப்னு  ஹஜ்ஜாஜ், அபூதாவூத், அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹ்ம்மத் இப்னு ஹானீல்பக்தாதீ, அபூஹாதம் முஹம்மத் இப்னு இத்ரீஸ், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ போன்ற அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 241ஆம் வருடம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமை அன்று மரணித்தார். அப்போது அவருக்கு 77 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

வலீத் பின் முஸ்லிம்-அபுல்அப்பாஸ்

الوليد بن مسلم القرشي

இறப்பு: ஹிஜ்ரி 195, தி அல்-மர்வா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: வலீத் பின் முஸ்லிம்

தந்தை பெயர்: முஸ்லிம்

வம்சம்: பனூ உமைய்யாவின் அடிமை, குரஷீ

புனைப்பெயர்: அபுல்அப்பாஸ்

ஊர் பெயர்: தமஸ்கஸ்

பயணித்த ஊர்கள்: தமஸ்கஸ், மக்கா

பிறப்பு: ஹிஜ்ரி 119

இறப்பு: ஹிஜ்ரி 195, தி அல்-மர்வா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

வலீத் பின் முஸ்லிம் அத்தமஷ்கீ ரஹ் அவர்கள் ஷாம் பகுதியின் அறிஞரும், ஹதீஸ் கலை வல்லுநரும் ஆவார். இவர் பனூ உமைய்யாவின் அடிமையாக இருந்தார். இவர் ஹிஜ்ரி 119 இல் பிறந்து, ஹிஜ்ரி 195 இல் தி அல்-மர்வா எனும் இடத்தில் மரணமடைந்தார்.

இவர் பலமானவர் என்றாலும், தத்லீஸ் (பலவீனமான அறிவிப்பாளர்களை நீக்கி அறிவிப்பது) அதிகம் செய்பவராக இருந்தார். இவர் அல்-அவ்ஸாயீ அவர்களின் ஹதீஸ்களை நன்கு அறிந்தவராக இருந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஹுரைஸ் பின் உஸ்மான், ஸஃப்வான் பின் அம்ர், அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, இப்னு ஜுரைஜ், முஹம்மத் பின் அஜ்லான், முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபீ திஃப், ஸயீத் பின் அப்துல் அஸீஸ், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, அப்துல்லாஹ் பின் அல்அலா, தவ்ர் பின் யஸீத், ஹன்ழலா பின் அபீ ஸுஃப்யான், ஸுஹைர் பின் முஹம்மத் அத்தமீமீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ரஹ்வாயா, அலீ பின் அல்மதீனீ, ஸுஹைர் பின் ஹர்ப், தாஊத் பின் ரஷீத், பகிய்யது பின் வலீத், ஸுலைமான் பின் அப்துர்ரஹ்மான், ஸுவைத் பின் ஸயீத், ஹாரூன் பின் அல்மஃரூஃப், ஹிஷாம் பின் அம்மார், முஹம்மத் பின் மஃரான், மஹ்மூத் பின் காலித்

வேறு பெயர்கள்: வலீத் பின் முஸ்லிம்


ஆதாரம்: muslimscholars.info (20733) · Should verify

இப்னு ஸவ்பான்-அப்துர்ரஹ்மான் பின் ஸாபித்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹஸ்ஸான் பின் அதிய்யா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஜிப்ரீல் பின் யஸார்-அபூகப்ஷா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸவ்பான் (ரலி)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.