தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-277

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

உளூவை வழமையாகச் செய்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (நேர்மையாகவும் உறுதியாகவும்) நிலைத்திருங்கள்; உங்களால் (அதன் நன்மைகளை முழுமையாக) கணக்கிட்டு விட முடியாது.

உங்கள் நற்செயல்களில் மிகச் சிறந்தது தொழுகை என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும், முஃமினை (முழுமையான இறைநம்பிக்கையாளரை)த் தவிர வேறு எவரும் உளூவை வழக்கமாக்கிக் கொள்வதில்லை.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

(இப்னுமாஜா: 277)

بَابُ الْمُحَافَظَةِ عَلَى الْوُضُوءِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«اسْتَقِيمُوا، وَلَنْ تُحْصُوا، وَاعْلَمُوا أَنَّ خَيْرَ أَعْمَالِكُمُ الصَّلَاةَ، وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-273.
Ibn-Majah-Shamila-277.
Ibn-Majah-Alamiah-273.
Ibn-Majah-JawamiulKalim-273.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


 

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16717-ஸாலிம் பின் அபுல் ஜஃத் அவர்கள் பலமானவர் என்றாலும் ஸவ்பான் (ரலி) அவர்களிடம் இவர் ஹதீஸ்களை நேரடியாக செவியேற்கவில்லை என அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.
  • மேலும் இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் ஸாலிமுக்கும், ஸவ்பான் (ரலி) அவர்களுக்கும் இடையில் மஃதான் பின் அபூதல்ஹா இடம்பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-10/130…)

எனவே இந்த வகை அறிவிப்பாளர்தொடர் முன்கதிஃ  என்பதால் பலவீனமான அறிவிப்பாளர் தொடர்களாகும். என்றாலும் இந்தக் கருத்தில் வேறு சரியான செய்தி வந்துள்ளது.


மேலும் பார்க்க: அஹ்மத்-22433.

6 comments on Ibn-Majah-277

  1. ஸவ்பான் (ரலி) மூலம் அறிவிக்கும் ஸாலிம் இப்னு அபில்ஜஃது என்பவர் ஸவ்பான் காலத்தவர் அல்ல என்பதால் இது அறிவிப்பாளர் வரிசை தொடர்பற்ற ஹதீஸாகும். அதனால் இது முன்க்திஉ செய்தி

    இதன் மூன்றாவது அறிவிப்பாளரான அபு சயீத் என்பவர் இடம் பெறுகிறார்

    இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இவரை பலவீனமானவர் என்று விமர்சனம் செய்கிறார்கள்

    நூல்-தர்கீப் அல் தஹ்தீப்-211

    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நான் இப்னுமாஜா ஹதீஸ் தொடர் பதிவாக பதிவிட்டு கொண்டிருக்கின்றேன் 493 வரை கிடைத்தது மேற்கொண்டு எனக்கு கிடைக்கவில்லை எனக்கு தொடர்ந்து ஹதீஸ் அனுப்ப முடியுமா

      1. ஹதீஸ்கள் தமிழில் வேண்டுமா அல்லது தரம் ஆராய வேண்டுமா? சகோதரு

    2. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இந்த செய்தி மேலும் பல வழிகளில் வந்துள்ளது. அதைப்பற்றி இன்ஷா அல்லாஹ் பிறகு பதிவு செய்கிறோம். அனைத்தையும் இணைத்து சரியான செய்தி என சிலர் கூறுகின்றனர். எனவே அதில் கூடுதல் தகவல் சேர்க்கவேண்டியுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.