தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1505

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1505. அதாஉ பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் குர்பானி எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒருவர் தன் சார்பாகவும், தன் குடும்பத்தார் சார்பாகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் (இதன் மூலம்) பெருமையடித்துக்கொள்வதை நீங்கள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது” என்று விடையளித்தார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதில் இடம்பெறும் உமாரா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் மதீனாவைச் சேர்ந்தவர் ஆவார். இவரிடமிருந்து மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் (ஹதீஸ்களை) அறிவித்துள்ளார்.

அறிஞர்களில் சிலரின் செயல்பாடு இதன் மீதே அமைந்துள்ளது. இதுவே அஹ்மத் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரின் கருத்துமாகும். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுத்துவிட்டு, “இது எனது சமுதாயத்தில் குர்பானி கொடுக்காதவர்களின் சார்பாக ஆகும்” என்று கூறிய ஹதீஸை இவர்கள் இருவரும் ஆதாரமாகக் கொள்கின்றனர்.

வேறு சில அறிஞர்களோ, “ஒரு ஆடு ஒரு நபருக்கு மட்டுமே போதுமானதாகும்” என்று கூறுகின்றனர். இது அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) போன்ற பிற அறிஞர்களின் கருத்தாகும்.


حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الحَنَفِيُّ قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنِي عُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ عَطَاءَ بْنَ يَسَارٍ يَقُولُ:

سَأَلْتُ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ: كَيْفَ كَانَتِ الضَّحَايَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «كَانَ الرَّجُلُ يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ، فَيَأْكُلُونَ وَيُطْعِمُونَ حَتَّى تَبَاهَى النَّاسُ، فَصَارَتْ كَمَا تَرَى»

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَعُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ مَدِينِيٌّ، وَقَدْ رَوَى عَنْهُ مَالِكُ بْنُ أَنَسٍ وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ العِلْمِ، وَهُوَ قَوْلُ أَحْمَدَ، وَإِسْحَاقَ، وَاحْتَجَّا بِحَدِيثِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ضَحَّى بِكَبْشٍ، فَقَالَ: «هَذَا عَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي»، وَقَالَ بَعْضُ أَهْلِ العِلْمِ: لَا تُجْزِي الشَّاةُ إِلَّا عَنْ نَفْسٍ وَاحِدَةٍ، وَهُوَ قَوْلُ عَبْدِ اللَّهِ بْنِ المُبَارَكِ، وَغَيْرِهِ مِنْ أَهْلِ العِلْمِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1425.
Tirmidhi-Shamila-1505.
Tirmidhi-Alamiah-1425.
Tirmidhi-JawamiulKalim-1421.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்-முஹம்மத் பின் ஈஸா (3. பலமானவர்).

2 . யஹ்யா பின் மூஸா-அல்ஹதானீ (3. பலமானவர்).

3 . அப்துல்கபீர் பின் அப்துல்மஜீத்-அபூபக்ர் அல்ஹனஃபீ (3. பலமானவர்).

4 . ளஹ்ஹாக் பின் உஸ்மான்-அபூஉஸ்மான் (4. நடுத்தரமானவர்).

5 . உமாரா பின் அப்துல்லாஹ் பின் ஸய்யாத் (3. பலமானவர்).

6 . அதாஉ பின் யஸார்-அல்ஹிலாலீ (3. பலமானவர்).

7 . அபூஅய்யூப் (ரலி)-அல்அன்ஸாரீ (1. நபித்தோழர்).


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19943-ளஹ்ஹாக் பின் உஸ்மான் அவர்களை சிலர் பலமானவர் என்றும் சிலர் சுமாரானவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்ற கருத்திலும் கூறியுள்ளனர். இந்தச் செய்தியின் கருத்தை உமாரா அவர்களிடமிருந்து மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அவர்களும் அறிவித்துள்ளார். (பார்க்க: மாலிக்-1396)

எனவே இதன் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரம்… வேறு பலமான அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தி வந்திருப்பதால் இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தை அடைகிறது. இதையே திர்மிதீ இமாம் அவர்கள் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

…


மேலும் பார்க்க: மாலிக்-1396.

திர்மிதீ இமாம்-முஹம்மத் பின் ஈஸா

இமாம் திர்மிதி

முழுப்பெயர்: முகம்மது இப்னு ஈஸா இப்னு ஸுரது இப்னு மூஸா இப்னுல் லிகாகுஸ்ஸில்மிய்யி (திர்மிதி என்ற ஹதீஸ் நூலை தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூஈஸா அத்திர்மிதி அல்லரீருல் ஹாஃபிழ்

இயற்பெயர்: முகம்மது

தந்தைபெயர்: ஈஸா

பிறந்த ஊர்: ஈரானின் வட எல்லையில் உள்ள ஜுஹுன் எனும் ஆற்றோரத்தில் அமைந்திருந்த திர்மிதி எனும் ஊரில் இவர் பிறந்தார். எனவே தான் இவர் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 210ல் பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானிலுள்ள குராஸான், இராக்கிலுள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஹிஜாஸ், பஸரா,  புகாரா, நைஸாபூர், மக்கா, மதினா, வாஸித், ரயீ போன்ற உலகின் பல பாகங்களுக்கும் பயணம் சென்றுள்ளார்.

ஜாமிவுத்திர்மீதி,

அல்இலலுல்கபீர் (அறிவிப்பாளர்களின் குறைகள் தொடர்பானது),

ஷமாயில்,

அஸ்மாவுஸ் ஸஹாபா  (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

அல்அஸ்மாவு வல்குனா (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

கிதாபுஸ் ஸுஹுத் போன்ற பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.

முஹம்மது இப்னு இஸ்மாயில் அல்புகாரி, இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு முன்திரில் பாஹிலியி அஸ்ஸன்ஆனி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், குதைபா இப்னு ஸயீத், மஹ்மூத் இப்னு கைலான், ஸிபாஃ இப்னு நல்ர் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

அபூபக்கர் முஹம்மது இப்னு இஸ்மாயீல் அஸ்ஸமர்கந்தி, அபூஹாமீது அஹ்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு தாவூத் அல் மரூஸி, அஹ்மத் இப்னு யூசுப் அன்நசபீ, அஸத் இப்னு ஹம்தவைஹி அன்நசபீ, ஹுசைன் இப்னு யூசுப் அல்பர்பரீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 279ல் ரஜப் மாதம் பிறை 13 திங்கள் இரவில் தமது சொந்த ஊரில் இமாம் திர்மிதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு 69 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

யஹ்யா பின் மூஸா-அல்ஹதானீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்கபீர் பின் அப்துல்மஜீத்-அபூபக்ர் அல்ஹனஃபீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ளஹ்ஹாக் பின் உஸ்மான்-அபூஉஸ்மான்

الضحاك بن عثمان الحزامي – أبو عثمان

* [2972] الضحاك بن عثمان بن عبد الله بن خالد بن حزام الأسدي الحزامي بكسر أوله وبالزاي أبو عثمان المدني صدوق يهم من السابعة م 4

قلت: حسن الحديث: ذكره ابن حبان في مشاهير علماء الأمصار (1057) وقال "كان من المتقنين" والذهبي "صدوق" (ميزان الاعتدال رقم 3938) والحاكم في حديث أحد رجاله الضحاك "هذا حديث رواته كلهم ثقات" (المستدرك 1/ 257 رقم 553) ولم يذكر ذلك صاحب التهذيب. وأيضاً قال أحمد وابن معين أبو داود وابن المديني وابن بكير ومصعب الزبيري "ثقة" وذكره ابن حبان في الثقات وروى عنه الثقات منهم ابن المبارك ويحيى القطان (تهذيب التهذيب 4/ 446) وابن المبارك ويحيى القطان لا يرويان إلا عن ثقة. وقال ابن حجر "شيخ مدني صدوق" (نتائج الأفكار 1/ 203). وأما قول أبي حاتم "لا يحتج به" وأبي زرعة "ليس بقوي" فمن الجرح المحتمل. وأما قول ابن عبد البر "كان كثير الخطأ ليس بحجة" فمدفوع بتوثيق ابن معين وأبي داود وابن المديني وبرواية ابن المبارك ويحيى القطان عنه. وبتتبع أسانيد حديثه فقد أكثر محمد بن عمر الواقدي عن الضحاك بن عثمان.

உமாரா பின் அப்துல்லாஹ் பின் ஸய்யாத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அதாஉ பின் யஸார்-அல்ஹிலாலீ

عطاء بن يسار

இறப்பு: ஹிஜ்ரி 103, எகிப்து (அலெக்ஸாண்டிரியா)

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அதாஉ பின் யஸார்

தந்தை பெயர்: யஸார்

வம்சம்: மைமூனா பின்த் அல்-ஹாரிஸ் (ரலி) அவர்களின் மவ்லா

புனைப்பெயர்: அபூ முஹம்மத், அபூ அப்துல்லாஹ் (ஷாமில்), அபூ யஸார் (எகிப்தில்)

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரி 19, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 103, எகிப்து (அலெக்ஸாண்டிரியா)

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அதாஉ பின் யஸார் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 19 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார். இவர் மைமூனா பின்த் அல்-ஹாரிஸ் ரலி அவர்களின் மவ்லா ஆவார். இவர் சுலைமான் பின் யஸார், அப்துல்லாஹ் பின் யஸார், அப்துல் மலிக் பின் யஸார் ஆகியோரின் சகோதரர்.

இவர் மிகப் பலமானவர் மற்றும் தாபிஈ ஆவார். இவர் ஹிஜ்ரி 103 ஆம் ஆண்டு எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் மரணமடைந்தார். இவர் சொற்பொழிவுகளுக்கும் வணக்க வழிபாடுகளுக்கும் பெயர் பெற்றவர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஆத் பின் ஜபல், அபூ தர்ர் அல்கிஃபாரீ, அபூ தர்ரா, உபாதா பின் அஸ்ஸாமித், ஸைத் பின் ஸாபித், முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ, அபூ அய்யூப் அல்அன்ஸாரீ, அபூ கதாதா பின் ரப்ஈ, அபூ ஹுரைரா, ஸைத் பின் காலித் அல்ஜுஹ்னீ, அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ், இப்னு உமர்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், முஹம்மத் பின் அம்ர் பின் அத்தா, முஹம்மத் பின் அம்ர் பின் ஹல்ஹலா, ஹிலால் பின் அபூ மைமூனா, ஸைத் பின் அஸ்லம், ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் அபூநமிர், முஹம்மத் பின் அபூ ஹர்மலா, அம்ர் பின் தீனார், முஹம்மத் பின் இப்ராஹீம் பின் அல்ஹாரிஸ், யஸீத் பின் அப்துல்லாஹ் பின் கஸீத், ஹபீப் பின் அபூ ஸாபித், ஸஃப்வான் பின் ஸுலைம் அல்மதனீ


ஆதாரம்: muslimscholars.info (11020) · Should verify

அபூஅய்யூப்-அல்அன்ஸாரீ (1. நபித்தோழர்) (ரலி)

أبو أيوب الأنصاري

இறப்பு: ஹிஜ்ரி 52, குஸ்தன்தீனியா

தரம்: நபித்தோழர்


விபரங்கள்

இயற்பெயர்: காலித் பின் ஸைத்

தந்தை பெயர்: ஸைத் பின் குலைப்

வம்சம்: கஸ்ரஜ், பனூ மாலிக் பின் அன்நஜ்ஜார்

புனைப்பெயர்: அபூஅய்யூப்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஈராக், எகிப்து, குஸ்தன்தீனியா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 52, குஸ்தன்தீனியா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூஅய்யூப் அல்அன்ஸாரீ ரலி அவர்களின் இயற்பெயர் காலித் பின் ஸைத் ஆகும். இவர் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அன்ஸாரீ நபித்தோழர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் வந்தபோது, அபூஅய்யூப் ரலி அவர்களின் வீட்டில்தான் ஒரு மாதம் தங்கினார்கள்.

பத்ரு, உஹது, அகழ் மற்றும் அனைத்துப் போர்களிலும் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார். முஆவியா ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில் ரோமப் பகுதியில் போர் புரிந்துகொண்டிருந்தபோது ஹிஜ்ரி 52 ஆம் ஆண்டு குஸ்தன்தீனியாவில் மரணமடைந்தார். அவரது கப்ரு குஸ்தன்தீனியா கோட்டையின் சுவரருகே உள்ளது.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உபை பின் கஅப்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): பராஉ பின் ஆஸிப், ஜாபிர் பின் ஸம்ரா, ஸைத் பின் காலித் அல்ஜுஹ்னீ, இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ, மிக்ராத் பின் மஃதீகரிப், ஸயீத் பின் அல்முஸய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், மூஸா பின் தல்ஹா, அதா பின் யஸார், அப்துல்லாஹ் பின் ஹுனைன், அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா

வேறு பெயர்கள்: காலித் பின் ஸைத், அபூ அய்யூப் அல்அன்ஸாரீ


ஆதாரம்: muslimscholars.info (33) · Should verify

2 comments on Tirmidhi-1505

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    ஹதீஸ்களின் எண்களை குறிப்பிடும்போது, திர்மிதீ போன்ற சில நூல்களில் பதிவான ஹதீஸ்களுக்கு ஒரே எண் இல்லாமல், அந்தந்த நூல்களில் பதிவு செய்யப்பட்ட அடிப்படையில் ஒரு ஹதீசுக்கு பலவித எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    உதாரணமாக இந்தப் பக்கத்தில் உள்ள திர்மிதீ ஹதீசுக்கு

    Tirmidhi-Tamil-.
    Tirmidhi-TamilMisc-1425.
    Tirmidhi-Shamila-1505.
    Tirmidhi-Alamiah-1425.
    Tirmidhi-JawamiulKalim-1421

    இப்படி கொடுத்துள்ளீர்கள். இந்த ஹதீஸை எடுத்து பிறருக்கு அனுப்பும்போது நாம் எந்த எண்ணை குறிப்பிட வேண்டும்?

    சிலர் திர்மிதீ 1425 என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இதே எண்ணை இந்த தளத்தில் தேடினால் வேறு ஒரு ஹதீஸ் வருகிறது. இந்த தளத்தில் 1505 என்ற எண்ணில் மட்டுமே இந்த ஹதீஸ் பதிவாகியுள்ளது. இந்தக் குழப்பத்தை தவிர்க்க இதற்கு விளக்கம் தர முடியுமா?

    TamilMisc என்பது என்ன நூல்?

  2. TamilMisc-1425. ஆரம்பத்தில் நமது பயான் குறிப்புகள் இணையதளத்தில் உள்ள எண்களாகும், மேலும் இந்த வகை எண்கள் ஆரம்ப குதுபுத்திஸ்ஆ சாப்ட்வேரின் ஆலமிய்யா எண்களாகும். தற்போது ஹதீஸ் எண் தேடலில் shamila-1505. எண்களே தேடினால் வரும். ஷாமிலா சாப்ட்வேரில் ஒரு ஹதீஸ் நூலுக்கே பல பிரதிகள் இருக்கும். அவற்றிலும் எண்கள் மாறுபடும்.

    (நாம் பெரும்பாலும் ஹதீஸ்ஆய்வாளர்கள் தக்ரீஜ் வகைக்காக அதாவது ஒரு குறிப்பிட்ட செய்தி ஒரு குறிப்பிட்ட நபித்தோழர் வழியாக, பல அறிவிப்பாளர்தொடர்களிலும், பல நூல்களிலும் வந்திருப்பதை குறிப்பிடும் பிரதிகளின் எண்களை பயன்படுத்தியுள்ளோம்)

    முதலில் நீங்கள் இணையதளத்தில் கிடைத்த எண்ணைத் தேடிப்பார்க்கவும், அது கிடைக்கவிட்டால் c-1425. என்று தேடிப்பார்க்கவும். இந்த எண்கள் பெரும்பாலும் குதுபுஸ்ஸித்தா-6 ஹதீஸ்நூல்களில் முஸ்லிம் தவிர்த்து உள்ள மற்ற 5 நூல்களுக்கு பொருந்தும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.