🔗

திர்மிதி: 1505

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

سَأَلْتُ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ: كَيْفَ كَانَتِ الضَّحَايَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «كَانَ الرَّجُلُ يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ، فَيَأْكُلُونَ وَيُطْعِمُونَ حَتَّى تَبَاهَى النَّاسُ، فَصَارَتْ كَمَا تَرَى»


1505. அதாஉ பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் குர்பானி எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒருவர் தன் சார்பாகவும், தன் குடும்பத்தார் சார்பாகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் (இதன் மூலம்) பெருமையடித்துக்கொள்வதை நீங்கள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது” என்று விடையளித்தார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதில் இடம்பெறும் உமாரா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் மதீனாவைச் சேர்ந்தவர் ஆவார். இவரிடமிருந்து மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் (ஹதீஸ்களை) அறிவித்துள்ளார்.

அறிஞர்களில் சிலரின் செயல்பாடு இதன் மீதே அமைந்துள்ளது. இதுவே அஹ்மத் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரின் கருத்துமாகும். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுத்துவிட்டு, “இது எனது சமுதாயத்தில் குர்பானி கொடுக்காதவர்களின் சார்பாக ஆகும்” என்று கூறிய ஹதீஸை இவர்கள் இருவரும் ஆதாரமாகக் கொள்கின்றனர்.

வேறு சில அறிஞர்களோ, “ஒரு ஆடு ஒரு நபருக்கு மட்டுமே போதுமானதாகும்” என்று கூறுகின்றனர். இது அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) போன்ற பிற அறிஞர்களின் கருத்தாகும்.