தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-414

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

‘‘யார் சுன்னதான 12 ரக்அத்கள் தொழுவாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான். (அவை) லுஹருக்கு முன்னர் 4 ரக்அத்கள், லுஹருக்குப் பின்னர் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின்னர் 2 ரக்அத்கள், இஷாவுக்குப் பின் 2 ரக்அத்கள், சுப்ஹுக்கு முன்னர் 2 ரக்அத்கள் ஆகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(திர்மதி: 414)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ الرَّازِيُّ قَالَ: حَدَّثَنَا المُغِيرَةُ بْنُ زِيَادٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

مَنْ ثَابَرَ عَلَى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً مِنَ السُّنَّةِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الجَنَّةِ: أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ المَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ العِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الفَجْرِ

وَفِي البَابِ عَنْ أُمِّ حَبِيبَةَ، وَأَبِي هُرَيْرَةَ، وَأَبِي مُوسَى، وَابْنِ عُمَرَ،: «حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ، وَمُغِيرَةُ بْنُ زِيَادٍ قَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَهْلِ العِلْمِ مِنْ قِبَلِ حِفْظِهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-379.
Tirmidhi-Shamila-414.
Tirmidhi-Alamiah-379.
Tirmidhi-JawamiulKalim-379.




இதில் முகீரா பின் ஸியாத் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார்.

تهذيب التهذيب ـ محقق (10/ 232)
وقال عبدالله ابن أحمد عن أبيه مضطرب الحديث منكر الحديث أحاديثه مناكيرஞ்وقال ابن أبي حاتم سألت أبي وأبا زرعة عنه فقالا شيخ قلت يحتج به قالا لا ஞ்وقال الدارقطني ليس بالقوي يعتبر به

முகீரா பின் ஸியாத் என்பவர் குளறுபடியாக ஹதீஸ்களை அறிவிப்பவர். அவருடைய ஹதீஸ்கள் மறுக்கப்பட வேண்டியவை என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹன்பல் குறிப்பிட்டுள்ளார்கள். என் தந்தையிடமும் அபூஸுர்ஆ அவர்களிடமும் ‘இவரை ஆதாரமாகக் கொள்ளலாமா?’ என்றேன். அதற்கு அவ்விருவரும் கூடாது என்று பதிலளித்தரர்கள் என்று இப்னு அபீ ஹாத்திம் குறிப்பிட்டார்கள். இவர் வலிமையானவர் அல்ல என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
குறிப்பிட்டார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்:10, பக்கம்: 232

الضعفاء والمتروكين للنسائي (ص: 226)
562 – مغيرة بن زياد أبو هشام الموصلي يروي عن عطاء ليس بالقوي

முகீரா பின் ஸியாத் என்பவர் வலிமையானவர் அல்ல என்று இமாம் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: அல்லுஅஃபாவுல் மத்ரூகீன், பக்கம்: 226

2 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5975 , இப்னு மாஜா-1140 , திர்மிதீ-414 , குப்ரா நஸாயீ-1471 , நஸாயீ-1794 , 1795 , முஸ்னத் அபீ யஃலா-4525 ,

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5981 ,

மேலும் பார்க்க: முஸ்லிம்-1319

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.