Month: April 2022

Bazzar-7482

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7482. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், “நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


لا يأتي عليكم زمان إلاَّ والذي بعده شر منه حتى تلقوا ربكم سمعت ذلك من نبيكم صَلَّى الله عَلَيه وَسَلَّم، أو كما قال قال: إن كان كذلك إن شاء الله.


Almujam-Assaghir-528

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

528. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், உங்களிடம் ஒரு வருடம் வந்தால் அதற்குப் பின்வரும் வருடம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


«لَا يَأْتِي عَامٌ إِلَّا وَالَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ» سَمِعْنَا ذَلِكَ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ


Ibn-Hibban-5952

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பொதுவாக ஆரம்பக்காலத்தை விட இறுதிக்காலம் தீயதாகவே இருக்கும் என்று கூறுவோரை-ஹதீஸ்கலையை சரியாக அறியாதோரை-சந்தேகத்தில் ஆழ்த்திய செய்தி பற்றி…

5952. நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், ‘நீங்கள் பொறுமையோடு இருங்கள். ஏனெனில், நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை  உங்களிடம் வரும் நாளோ அல்லது காலமோ அதற்குப் பின்வரும் நாளை விட, காலத்தை விட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ، فَشَكَوْنَا إِلَيْهِ الْحَجَّاجَ، فَقَالَ: «اصْبِرُوا، فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكُمْ يَوْمٌ أَوْ زَمَانٌ إِلَّا وَالَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Abi-Yala-4037

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4037.  நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், ‘நீங்கள் பொறுமையோடு இருங்கள். ஏனெனில், நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை  உங்களிடம் வரும் வருடமோ அல்லது நாளோ அதற்குப் பின்வரும் வருடத்தை விட, நாளை விட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


شَكَوْنَا إِلَى أَنَسٍ مَا نَلْقَى مِنَ الْحَجَّاجِ فَقَالَ: «اصْبِرُوا فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكُمْ عَامٌ، أَوْ يَوْمٌ، إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبِّكُمْ»، سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Abi-Yala-4036

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4036. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களிடம் ஒரு நாள் வந்தால், அதற்குப் பின்வரும் நாள் அதைவிட மோசமானதாகவே இருக்கும். இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றோம்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


«مَا مِنْ يَوْمٍ إِلَّا وَالَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ»، سَمِعْنَا ذَلِكَ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musnad-Ahmad-13753

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13753. “உங்களிடம் ஒரு காலம் வந்தால், அது அதற்கு முன்னுள்ள காலத்தைவிட மோசமானதாகவே இருக்கும். இதை நாங்கள் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றோம் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


«مَا زَمَانٌ يَأْتِي عَلَيْكُمْ إِلَّا أَشَرُّ مِنَ الزَّمَانِ الَّذِي كَانَ قَبْلَهُ، سَمِعْتُ ذَلِكَ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Musnad-Ahmad-12838

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12838. நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், “உங்களிடம் ஒரு நாள் அல்லது காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ نَشْكُو إِلَيْهِ الْحَجَّاجَ فَقَالَ: «لَا يَأْتِي عَلَيْكُمْ يَوْمٌ أَوْ زَمَانٌ، إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ» ، سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musnad-Ahmad-12817

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12817. நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், ‘நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் அல்லது நாள் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


شَكَوْنَا إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ مَا نَلْقَى مِنَ الْحَجَّاجِ، فَقَالَ: «اصْبِرُوا، فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكُمْ عَامٌ، أَوْ يَوْمٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ، حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ» ، سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musnad-Ahmad-12347

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12347. நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், ‘நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் அல்லது நாள் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


شَكَوْنَا إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ مَا نَلْقَى مِنَ الْحَجَّاجِ فَقَالَ: «اصْبِرُوا، فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكُمْ عَامٌ أَوْ يَوْمٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ، حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ» سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musnad-Ahmad-12162

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12162. “உங்களிடம் ஒரு காலம் வந்தால், அது அதற்கு முன்னுள்ள காலத்தைவிட மோசமானதாகவே இருக்கும். இதை நாங்கள் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றோம் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு தடவை கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


«لَا يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلَّا هُوَ شَرٌّ مِنَ الزَّمَانِ الَّذِي قَبْلَهُ» . سَمِعْنَا ذَلِكَ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتَيْنِ


Next Page »