தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-13753

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

13753. “உங்களிடம் ஒரு காலம் வந்தால், அது அதற்கு முன்னுள்ள காலத்தைவிட மோசமானதாகவே இருக்கும். இதை நாங்கள் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றோம் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரஹ்)

ஸுபைர் பின் அதீ (ரஹ்)

الزبير بن عدي الهمداني

இறப்பு: ஹிஜ்ரி 131, ரய்

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸுபைர் பின் அதீ அல்ஹம்தானீ

தந்தை பெயர்: அதீ

வம்சம்: அல்ஹம்தானீ, அல்யாமி

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ், அபூ அதீ

ஊர் பெயர்: கூஃபா, ரய்

பயணித்த ஊர்கள்: ஹமதான், கூஃபா, ரய்

இறப்பு: ஹிஜ்ரி 131, ரய்

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸுபைர் பின் அதீ ரஹ் ஒரு மிகப் பலமான தாபிஈ ஆவார். இவர் அபூ அப்துல்லாஹ் அல்லது அபூ அதீ என்ற குன்யாவுடன் அறியப்பட்டார். இவர் கூஃபா மற்றும் ரய் ஆகிய இடங்களில் வாழ்ந்தார்.

இவர் ரய் நகரின் நீதிபதியாகவும் பணியாற்றினார். இவர் ஹிஜ்ரி 131 இல் ரய் நகரில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அனஸ் பின் மாலிக் ரலி, ஷகீக் பின் ஸலமா அல்அஸதீ, முஸ்அப் பின் ஸஅத் பின் அபூ வக்காஸ், குல்தூம் பின் அல்முஸ்தலக், இப்ராஹீம் அன்நகஈ, தல்ஹா பின் மிஸ்ரஃப், ஹாரிஸ் அல்அஃவர், ளஹ்ஹாக் பின் முஸாஹிம், தாரிக் பின் ஷிஹாப், அப்துல்லாஹ் பின் புரைதா, அதா பின் அபூ ரபாஹ், உமைர் பின் ஸயீத் அன்நகஈ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): இஸ்மாயீல் பின் அபூ காலித், அபூ இஸ்ஹாக் அஸ்ஸபாயீ, மாலிக் பின் மஃகூல், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, மஸ்அர் பின் கதாம், அம்ர் பின் அபூ கைஸ், உஸ்மான் பின் ஸாயிதா, பிஷ்ர் பின் அல்ஹுஸைன்

வேறு பெயர்கள்: அபூ அப்துல்லாஹ், அபூ அதீ


ஆதாரம்: muslimscholars.info (11336) · Should verify


حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مَالِكٌ يَعْنِي ابْنَ مِغْوَلٍ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:

«مَا زَمَانٌ يَأْتِي عَلَيْكُمْ إِلَّا أَشَرُّ مِنَ الزَّمَانِ الَّذِي كَانَ قَبْلَهُ، سَمِعْتُ ذَلِكَ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-13753.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-13486.



மேலும் பார்க்க: புகாரி-7068 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.