தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-5952

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பொதுவாக ஆரம்பக்காலத்தை விட இறுதிக்காலம் தீயதாகவே இருக்கும் என்று கூறுவோரை-ஹதீஸ்கலையை சரியாக அறியாதோரை-சந்தேகத்தில் ஆழ்த்திய செய்தி பற்றி…

நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், ‘நீங்கள் பொறுமையோடு இருங்கள். ஏனெனில், நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை  உங்களிடம் வரும் நாளோ அல்லது காலமோ அதற்குப் பின்வரும் நாளை விட, காலத்தை விட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)

(இப்னு ஹிப்பான்: 5952)

ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّ آخِرَ الزَّمَانِ عَلَى الْعُمُومِ يَكُونُ شَرًّا مِنْ أَوَّلِهِ

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ سَلْمٍ الْأَصْبَهَانِيُّ، بِالرَّيِّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِصَامِ بْنِ يَزِيدَ، جَبَّرٌ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، قَالَ:

أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ، فَشَكَوْنَا إِلَيْهِ الْحَجَّاجَ، فَقَالَ: «اصْبِرُوا، فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكُمْ يَوْمٌ أَوْ زَمَانٌ إِلَّا وَالَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-5952.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-6078.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41114-முஹம்மது பின் இஸாம் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: புகாரி-7068 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.