Month: August 2019

Bukhari-1568

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1568. அபூ ஷிஹாப் அறிவித்தார்.

நான் ஹஜ்ஜுடன் உம்ராவையும் (தமத்துஉ)… செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். துல்ஹஜ் பிறை எட்டுக்கு மூன்று நாள்களுக்கு முன்னால் (அதாவது பிறை ஐந்தில்) மக்காவில் நுழைந்தோம். அப்போது மக்காவாசிகளில் சிலர் என்னிடம் வந்து ‘இப்படித் தமத்துஉ – செய்தால் உம்முடைய ஹஜ் மக்காவாசிகளின் ஹஜ்ஜாக ஆகிவிடும்; (குறைந்த நன்மைகளே கிடைக்கும்’) என்றனர்.

நான் அதா இடம் சென்று இதைப் பற்றிக் கேட்டேன். அதா கூறினார்; ‘நபி(ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்தபோது நான் நபி(ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரிரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் அணிந்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி ‘நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஒடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக் கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் இஹ்ராம் அணிந்து, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.

அதற்குத் தோழர்கள் ‘நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் அணிந்து வந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்வது?’ என்று கேட்டனர். அதற்கு

قَدِمْتُ مُتَمَتِّعًا مَكَّةَ بِعُمْرَةٍ، فَدَخَلْنَا قَبْلَ التَّرْوِيَةِ بِثَلاَثَةِ أَيَّامٍ، فَقَالَ لِي أُنَاسٌ مِنْ أَهْلِ مَكَّةَ: تَصِيرُ الآنَ حَجَّتُكَ مَكِّيَّةً، فَدَخَلْتُ عَلَى عَطَاءٍ أَسْتَفْتِيهِ، فَقَالَ: حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّهُ حَجَّ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ سَاقَ البُدْنَ مَعَهُ، وَقَدْ أَهَلُّوا بِالحَجِّ مُفْرَدًا، فَقَالَ لَهُمْ: «أَحِلُّوا مِنْ إِحْرَامِكُمْ بِطَوَافِ البَيْتِ، وَبَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، وَقَصِّرُوا، ثُمَّ أَقِيمُوا حَلاَلًا، حَتَّى إِذَا كَانَ يَوْمُ التَّرْوِيَةِ فَأَهِلُّوا بِالحَجِّ، وَاجْعَلُوا الَّتِي قَدِمْتُمْ بِهَا مُتْعَةً»،

فَقَالُوا: كَيْفَ نَجْعَلُهَا مُتْعَةً، وَقَدْ سَمَّيْنَا الحَجَّ؟ فَقَالَ: «افْعَلُوا مَا أَمَرْتُكُمْ، فَلَوْلاَ أَنِّي سُقْتُ الهَدْيَ لَفَعَلْتُ مِثْلَ الَّذِي أَمَرْتُكُمْ، وَلَكِنْ لاَ يَحِلُّ مِنِّي حَرَامٌ حَتَّى يَبْلُغَ الهَدْيُ مَحِلَّهُ» فَفَعَلُوا قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «أَبُو شِهَابٍ لَيْسَ لَهُ مُسْنَدٌ إِلَّا هَذَا»


Bukhari-1567

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1567. நஸ்ரு இப்னு இம்ரான் அறிவித்தார்.

நான் தமத்துஉ (ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனி இஹ்ராமுடன்) செய்தேன். என்னைச் சிலர் தடுத்தார்கள். எனவே, இதை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் தமத்துஉ செய்யுமாறே கட்டளையிட்டார். பிறகு ஒரு நாள் ஒருவர் என் கனவில் தோன்றி, ‘ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டது; உம்ரா ஒப்புக் கொள்ளப்பட்டது’ எனக் கூறினார். நான் இதையும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறியபோது (‘தமத்துஉவே) நபி(ஸல்) அவர்களின் வழிமுறையாகும்’ என்று கூறி, ‘நீ என்னுடன் தங்கிக் கொள். என்னுடைய செல்வத்திலிருந்து ஒரு பங்கை உனக்குத் தருகிறேன்’ எனக் கூறினார்.

இப்னு அப்பாஸ்(ரலி) தம்முடன் தங்கச் சொன்னதன் காரணம் என்ன? என்று நஸ்ர் இப்னு இம்ரானிடம் கேட்டேன். ‘நான் கண்ட கனவே காரணம்’ என அவர் கூறினார் என்று ஷுஉபா கூறுகிறார்.
Book :25


«تَمَتَّعْتُ»، فَنَهَانِي نَاسٌ، فَسَأَلْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَأَمَرَنِي، فَرَأَيْتُ فِي المَنَامِ كَأَنَّ رَجُلًا يَقُولُ لِي: حَجٌّ مَبْرُورٌ، وَعُمْرَةٌ مُتَقَبَّلَةٌ، فَأَخْبَرْتُ ابْنَ عَبَّاسٍ فَقَالَ: «سُنَّةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَقَالَ لِي: أَقِمْ عِنْدِي، فَأَجْعَلَ لَكَ سَهْمًا مِنْ مَالِي، قَالَ شُعْبَةُ: فَقُلْتُ: لِمَ؟ فَقَالَ: لِلرُّؤْيَا الَّتِي رَأَيْتُ


Bukhari-1566

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1566. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர் அவர்களே! உம்ரா செய்துவிட்டு மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபட வில்லையே! என்ன காரணம்?’ என நான் நபி(ஸல்) அவர்களைக் கேட்டேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என்னுடைய முடியைக் களிம்பு தடவிப் படியச் செய்து விட்டேன்; என்னுடைய குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாளம் தொங்கவிட்டு விட்டேன். எனவே, குர்பானி கொடுக்கும் வரை நான் இஹ்ராமைக் களைவது கூடாது’ என்றார்கள்.
Book :25


يَا رَسُولَ اللَّهِ، مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ، وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ؟ قَالَ: «إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ»


Bukhari-1565

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1565. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (நான் குர்பானிப் பிராணி கொண்டு வராததால்.. உம்ராவை முடித்து) இஹராமிலிருந்து விடுபடுமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள்.
Book :25


«قَدِمْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهُ بِالحِلِّ»


Bukhari-1564

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1564. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் என (அறியாமைக்கால) மக்கள் கருதினர்.

(துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போரிடத் தடை செய்யப்பட்ட மாதங்களாகத் தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை ஸஃபருக்கு மாற்றினார்கள். (ஹஜ் பயணத்தில்) ஒட்டகங்களின் முதுகிலுள்ள சுமைகளின் வடு காய்ந்து மறைந்து ஸஃபர் மாதமும் கடந்துவிட்டால் உம்ரா செய்வது கூடும்’ என்று கூறிவந்தனர்.

நபி(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர்களாக மக்கா நகருக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள், மக்களின் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றும்படி கட்டளையிட்டார்கள். இது தோழர்களுக்கு மிகக் கடுமையாகத் தெரிந்தது. இதனால் நபி(ஸல்) அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எச்செயல்கள் அனுமதிக்கப்படும்?’ எனக் கேட்டனர். அதற்கு ‘அனைத்து (விலக்கப்படாத) செயல்களும் அனுமதிக்கப்படும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :25


كَانُوا يَرَوْنَ أَنَّ العُمْرَةَ فِي أَشْهُرِ الحَجِّ مِنْ أَفْجَرِ الفُجُورِ فِي الأَرْضِ، وَيَجْعَلُونَ المُحَرَّمَ صَفَرًا، وَيَقُولُونَ: إِذَا بَرَا الدَّبَرْ، وَعَفَا الأَثَرْ، وَانْسَلَخَ صَفَرْ، حَلَّتِ العُمْرَةُ لِمَنِ اعْتَمَرْ، قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ صَبِيحَةَ رَابِعَةٍ مُهِلِّينَ بِالحَجِّ فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً، فَتَعَاظَمَ ذَلِكَ عِنْدَهُمْ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الحِلِّ؟ قَالَ: «حِلٌّ كُلُّهُ»


Bukhari-1563

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1563. மர்வான் இப்னி ஹகம் அறிவித்தார்.

நான் உஸ்மான்(ரலி) உடனும், அலீ(ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான்(ரலி) ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும் உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்.

இதைக்கண்ட அலீ(ரலி), ஹஜ் உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து ‘லப்பைக் பி உம்ரதின் வ ஹஜ்ஜதின்’ என்று கூறிவிட்டு ‘நபி(ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டு விடமாட்டேன்’ எனக் கூறினார்.
Book :25


شَهِدْتُ عُثْمَانَ، وَعَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَعُثْمَانُ «يَنْهَى عَنِ المُتْعَةِ، وَأَنْ يُجْمَعَ بَيْنَهُمَا»، فَلَمَّا «رَأَى عَلِيٌّ أَهَلَّ بِهِمَا، لَبَّيْكَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ»، قَالَ: «مَا كُنْتُ لِأَدَعَ سُنَّةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِقَوْلِ أَحَدٍ»


Bukhari-1562

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1562. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின்போது நாங்களும் அவர்களுடன் சென்றிருந்தோம். சிலர் உம்ராவிற்கும் சிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்தும் சிலர் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் அணிந்திருந்தனர்.

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்திருந்தார்கள். ஹஜ்ஜுக்காகவோ அல்லது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்காகவும் சேர்த்தோ இஹ்ராம் அணிந்தவர்கள் பிராணியைக் குர்பானி கொடுக்கும் (பத்தாம்) நாள் வரும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.
Book :25


خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ حَجَّةِ الوَدَاعِ، فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجَّةٍ وَعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِالحَجِّ «وَأَهَلَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالحَجِّ»، فَأَمَّا مَنْ أَهَلَّ بِالحَجِّ، أَوْ جَمَعَ الحَجَّ وَالعُمْرَةَ، لَمْ يَحِلُّوا حَتَّى كَانَ يَوْمُ النَّحْرِ


Bukhari-1561

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34 ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டுவது (இஃப்ராத்) ;

ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து இஹ்ராம் கட்டுவது (கிரான்) ;

உம்ராவிற்கு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டுவது (தமத்துஉ);

குர்பானிப்பிராணியைக் கொண்டுவராதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றுதல். 

1561. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு சென்றோம். அவர்கள் ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் செய்ய நாங்கள் காணவில்லை. மக்காவை வந்தடைந்ததும் கஅபாவை வலம் வந்தோம். அதன் பிறகு குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். உடனே பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மனைவியரும் பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். ஆனால் நான் மாதவிடாய்க்காரியாக இருந்ததால் நான் வலம்வரவில்லை. (முஹஸ்ஸப் எனும் இடத்தில் தங்கும்) இரவு வந்தபோது நான் நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! மக்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் முடித்துத் திரும்புகின்றனர்; ஆனால் நானோ ஹஜ்ஜுடன் மட்டும் திரும்புகிறேன் என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘நாம் மக்காவை வந்தடைந்தபோது நீ வலம்வரவில்லையா?’

خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ نُرَى إِلَّا أَنَّهُ الحَجُّ، فَلَمَّا قَدِمْنَا تَطَوَّفْنَا بِالْبَيْتِ، فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَكُنْ سَاقَ الهَدْيَ أَنْ يَحِلَّ، فَحَلَّ مَنْ لَمْ يَكُنْ سَاقَ الهَدْيَ، وَنِسَاؤُهُ لَمْ يَسُقْنَ فَأَحْلَلْنَ، قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: فَحِضْتُ فَلَمْ أَطُفْ بِالْبَيْتِ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ الحَصْبَةِ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، يَرْجِعُ النَّاسُ بِعُمْرَةٍ وَحَجَّةٍ، وَأَرْجِعُ أَنَا بِحَجَّةٍ، قَالَ: «وَمَا طُفْتِ لَيَالِيَ قَدِمْنَا مَكَّةَ؟» قُلْتُ: لاَ، قَالَ: «فَاذْهَبِي مَعَ أَخِيكِ إِلَى التَّنْعِيمِ، فَأَهِلِّي بِعُمْرَةٍ ثُمَّ مَوْعِدُكِ كَذَا وَكَذَا» قَالَتْ صَفِيَّةُ: مَا أُرَانِي إِلَّا حَابِسَتَهُمْ، قَالَ: «عَقْرَى حَلْقَى، أَوَمَا طُفْتِ يَوْمَ النَّحْرِ» قَالَتْ: قُلْتُ: بَلَى، قَالَ: «لاَ بَأْسَ انْفِرِي» قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: فَلَقِيَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُصْعِدٌ مِنْ مَكَّةَ، وَأَنَا مُنْهَبِطَةٌ عَلَيْهَا، أَوْ أَنَا مُصْعِدَةٌ وَهُوَ مُنْهَبِطٌ مِنْهَا


Bukhari-1560

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 ஹஜ்ஜுக்குரிய காலம் அறியப்பட்ட சில மாதங்களாகும். எனவே அவற்றில் எவரேனும் ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, மற்றும் பாவங்களில் ஈடுபடல், சச்சரவு செய்தல் ஆகியவை கூடாது எனும் (2:197ஆவது) இறைவசனம்.

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே! தேய்ந்து வளரும்) பிறையைப் பற்றி உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும் ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பவையாகவும் உள்ளன. (2:189)

ஷவ்வால், துல்கஅதா மற்றும் துல்ஹஜ்ஜில் முந்திய பத்து நாட்கள் ஆகியவை ஹஜ்ஜுடைய மாதங்களாகும் என இப்னு உமர் (ரலி)அவர்கள் கூறுகின்றார்கள்.

ஹஜ் செய்வதற்காக ஹஜ்ஜுடைய மாதங்களில் மட்டுமே இஹ்ராம் கட்டுவது தான் நபி வழியாகும்என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

குராசான் அல்லது கர்மான் ஆகிய இடங்களிலிருந்து இஹ்ராம் கட்டுவதை உஸ்மான்(ரலி) அவர்கள் வெறுத்துள்ளார்கள்.

1560. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு ஹஜ் மாதத்தில், ஹஜ் இரவுகளில், ஹஜ் காலத்தில் புறப்பட்டு ஸரிஃப் எனுமிடத்தில் இறங்கினோம். நபி(ஸல்) அவர்கள் (தம் கூடாரத்திலிருந்து) புறப்பட்டு தம் தோழர்களிடம் வந்து, ‘யாருடன் குர்பானிப் பிராணி இல்லையோ அவர் தம் இஹ்ராமை உம்ராவுக்காக ஆக்கிக் கொள்ள விரும்பினால் அவ்வாறே ஆக்கிக்

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَشْهُرِ الحَجِّ، وَلَيَالِي الحَجِّ، وَحُرُمِ الحَجِّ، فَنَزَلْنَا بِسَرِفَ، قَالَتْ: فَخَرَجَ إِلَى أَصْحَابِهِ، فَقَالَ: «مَنْ لَمْ يَكُنْ مِنْكُمْ مَعَهُ هَدْيٌ، فَأَحَبَّ أَنْ يَجْعَلَهَا عُمْرَةً فَلْيَفْعَلْ، وَمَنْ كَانَ مَعَهُ الهَدْيُ فَلاَ» قَالَتْ: فَالْآخِذُ بِهَا، وَالتَّارِكُ لَهَا مِنْ أَصْحَابِهِ قَالَتْ: فَأَمَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجَالٌ مِنْ أَصْحَابِهِ، فَكَانُوا أَهْلَ قُوَّةٍ وَكَانَ مَعَهُمُ الهَدْيُ، فَلَمْ يَقْدِرُوا عَلَى العُمْرَةِ، قَالَتْ: فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي، فَقَالَ: «مَا يُبْكِيكِ يَا هَنْتَاهُ؟» قُلْتُ: سَمِعْتُ قَوْلَكَ لِأَصْحَابِكَ فَمُنِعْتُ العُمْرَةَ، قَالَ: «وَمَا شَأْنُكِ؟» قُلْتُ: لاَ أُصَلِّي، قَالَ: «فَلاَ يَضِيرُكِ، إِنَّمَا أَنْتِ امْرَأَةٌ مِنْ بَنَاتِ آدَمَ، كَتَبَ اللَّهُ عَلَيْكِ مَا كَتَبَ عَلَيْهِنَّ، فَكُونِي فِي حَجَّتِكِ، فَعَسَى اللَّهُ أَنْ يَرْزُقَكِيهَا» قَالَتْ: فَخَرَجْنَا فِي حَجَّتِهِ حَتَّى قَدِمْنَا مِنًى، فَطَهَرْتُ، ثُمَّ خَرَجْتُ مِنْ مِنًى، فَأَفَضْتُ بِالْبَيْتِ، قَالَتْ: ثُمَّ خَرَجَتْ مَعَهُ فِي النَّفْرِ الآخِرِ، حَتَّى نَزَلَ المُحَصَّبَ، وَنَزَلْنَا مَعَهُ، فَدَعَا عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ، فَقَالَ: «اخْرُجْ بِأُخْتِكَ مِنَ الحَرَمِ، فَلْتُهِلَّ بِعُمْرَةٍ، ثُمَّ افْرُغَا، ثُمَّ ائْتِيَا هَا هُنَا، فَإِنِّي أَنْظُرُكُمَا حَتَّى تَأْتِيَانِي» قَالَتْ: فَخَرَجْنَا، حَتَّى إِذَا فَرَغْتُ، وَفَرَغْتُ مِنَ الطَّوَافِ، ثُمَّ جِئْتُهُ بِسَحَرَ، فَقَالَ: «هَلْ فَرَغْتُمْ؟» فَقُلْتُ: نَعَمْ، فَآذَنَ بِالرَّحِيلِ فِي أَصْحَابِهِ، فَارْتَحَلَ النَّاسُ، فَمَرَّ مُتَوَجِّهًا إِلَى المَدِينَةِ

ضَيْرِ: مِنْ ضَارَ يَضِيرُ ضَيْرًا، وَيُقَالُ: ضَارَ يَضُورُ ضَوْرًا، وَضَرَّ يَضُرُّ ضَرًّا


Bukhari-1559

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1559. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் யமன் நாட்டின் ஒரு கூட்டத்தினரிடம் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் (திரும்பி) வந்தபோது அவர்கள் துல்ஹுலைஃபாவில் பத்ஹா எனும் பள்ளத்தாக்கில் இருந்தார்கள். அவர்கள் என்னிடம் ‘நீ எதற்கு இஹ்ராம் அணிந்தாய்? (ஹஜ், உம்ரா இரண்டிற்காகவுமா? உம்ராவிற்கு மட்டுமா?)’ எனக் கேட்டார்கள்.

நான் நபி(ஸல்) அவர்களின் இஹ்ராமைப் போன்றே நான் இஹ்ராம் அணிந்தேன்’ என பதிலளித்தேன். ‘உன்னிடத்தில் குர்பானிப் பிராணி ஏதேனும் உண்டா?’ என்று நபி(ஸல்) கேட்க நான் ‘இல்லை’ என்றேன். அப்போது வலம் வரவும் ஸஃபா, மர்வாவுக்கிடையே தொங்கோட்டம் ஓடவும் அதன் பிறகு இஹ்ராமிலிருந்து விடுபடவும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதன்படி செய்தேன்.

அதன்பின்னர் என் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் வந்தேன். அவள் என் தலையை வாரினாள்; கழுவினாள்.

உமர்(ரலி) (பதவிக்கு) வந்தபோது கூறினார்:

‘நாம் இறைவனுடைய வேதத்தின் படி நடப்பதெனில், ‘ஹஜ்ஜையும், உம்ராவையும் பூர்த்தி செய்யுங்கள்’ என்ற (திருக்குர்ஆன் 02:196) வசனத்தின் படி ‘இரண்டையும் சேர்த்து (ஒரே இஹ்ராமில்) செய்ய வேண்டும்’ என்றே அது நமக்குக் கட்டளையிடுகிறது. நாம் நபிவழியின் படி நடப்பதென்றாலும், அவர்கள் குர்பானிப் பிராணியை அறுக்கும் வரை இஹ்ராமிலிருந்து

بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى قَوْمٍ بِاليَمَنِ، فَجِئْتُ وَهُوَ بِالْبَطْحَاءِ، فَقَالَ: «بِمَا أَهْلَلْتَ؟» قُلْتُ: أَهْلَلْتُ كَإِهْلَالِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «هَلْ مَعَكَ مِنْ هَدْيٍ؟» قُلْتُ: لَا، فَأَمَرَنِي، فَطُفْتُ بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالمَرْوَةِ، ثُمَّ أَمَرَنِي، فَأَحْلَلْتُ، فَأَتَيْتُ امْرَأَةً مِنْ قَوْمِي، فَمَشَطَتْنِي – أَوْ غَسَلَتْ رَأْسِي – فَقَدِمَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ: إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّهُ يَأْمُرُنَا بِالتَّمَامِ، قَالَ اللَّهُ: {وَأَتِمُّوا الحَجَّ وَالعُمْرَةَ لِلَّهِ} [البقرة: 196] وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّهُ «لَمْ يَحِلَّ حَتَّى نَحَرَ الهَدْيَ»


Next Page »