Month: August 2019

Bukhari-1558

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1558. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

யமனிலிருந்து திரும்பிய அலீ(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘எதற்காக இஹ்ராம் அணிந்தீர் (ஹஜ்ஜுடன் உம்ராவிற்கும் சேர்த்தா? உம்ராவிற்கு மட்டுமா)?’ எனக் கேட்டார்கள். அதற்கு அலீ(ரலி) ‘நீங்கள் இஹ்ராம் அணிந்தது போன்றே நானும் இஹ்ராம் அணிந்துள்ளேன்…’ என்று பதிலளித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘என்னுடன் குர்பானிப் பிராணி இல்லையெனில் (உம்ராவை முடித்து) நான் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்’ என்றார்கள்.

இப்னு ஜுரைஜின் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் ‘நீர் இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்த பின்) குர்பானி கொடும்!’ என்று கூறினார்கள் எனக் காணப்படுகிறது.
Book :25


قَدِمَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اليَمَنِ، فَقَالَ: «بِمَا أَهْلَلْتَ؟» قَالَ: بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَوْلاَ أَنَّ مَعِي الهَدْيَ لَأَحْلَلْتُ»


Bukhari-1557

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32 நபி (ஸல்) அவர்களின் இஹ்ராமைப் போன்றே நானும் இஹ்ராம் கட்டுகிறேன் என நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் இஹ்ராம் கட்டுவது.

இது தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள். 

1557. அதாவு அறிவித்தார்.

அலீ(ரலி) அவர்களிடம் (ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து) அவர் அணிந்திருந்த இஹ்ராமிலேயே நீடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என ஜாபிர்(ரலி) கூறினார்.

மேலும் இது தொடர்பாக (‘இது உங்களுக்கு மட்டுமா அல்லது அனைவருக்கும் பொதுவானதா?’ என சுராகா கேட்க. ‘எப்போதைக்கும் உரியதே! (அனைவருக்கும் பொதுவானதே!)’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்த அந்த) செய்தியையும் கூறினார்கள்.
Book : 25


«أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ أَنْ يُقِيمَ عَلَى إِحْرَامِهِ»

وَذَكَرَ قَوْلَ سُرَاقَةَ، وَزَادَ مُحَمَّدُ بْنُ بَكْرٍ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِمَا أَهْلَلْتَ يَا عَلِيُّ؟» قَالَ: بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَأَهْدِ وَامْكُثْ حَرَامًا كَمَا أَنْتَ»


Bukhari-1556

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 உம்ராவின் அவசியமும் அதன் சிறப்பும்.

(வசதிவாய்ப்புடைய) அனைவர்மீதும் ஹஜ்ஜும் உம்ராவும் கடமையாகும் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் குர்ஆனில், அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் பூரணமாக நிறைவேற்றுங்கள்(2:196) என்று ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்தே கூறுகிறான் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். 

1556. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஹஜ்ஜத்துல் வதாவில் நபி(ஸல்) அவர்களோடு சென்றிருந்தபோது உம்ராவிற்காக இஹ்ராம் (ஆடையை) அணிந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவோடு ஹஜ்ஜுக்கும் இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். இன்னும் அவர் இவ்விரண்டையும் நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது’ என்றார்கள். ஆனால் நான் மக்கா வந்தபோது மாதவிடாய்க் காரியானேன். இதனால் கஅபாவைத் தவாஃபும் செய்யவில்லை. இன்னும் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை.

இதை நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள் ‘உன்னுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக் கொள். பிறகு ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் (ஆடையை) அணிந்து உம்ராவைவிட்டு விடு!’ என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்தபோது, (என் சகோதரர்) அப்துர்

خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ فَأَهْلَلْنَا بِعُمْرَةٍ، ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ مَعَهُ هَدْيٌ فَلْيُهِلَّ بِالحَجِّ مَعَ العُمْرَةِ، ثُمَّ لاَ يَحِلَّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيعًا» فَقَدِمْتُ مَكَّةَ وَأَنَا حَائِضٌ، وَلَمْ أَطُفْ بِالْبَيْتِ، وَلاَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، فَشَكَوْتُ ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «انْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي وَأَهِلِّي بِالحَجِّ، وَدَعِي العُمْرَةَ»، فَفَعَلْتُ، فَلَمَّا قَضَيْنَا الحَجَّ أَرْسَلَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ إِلَى التَّنْعِيمِ فَاعْتَمَرْتُ، فَقَالَ: «هَذِهِ مَكَانَ عُمْرَتِكِ»، قَالَتْ: فَطَافَ الَّذِينَ كَانُوا أَهَلُّوا بِالعُمْرَةِ بِالْبَيْتِ، وَبَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، ثُمَّ حَلُّوا، ثُمَّ طَافُوا طَوَافًا آخَرَ بَعْدَ أَنْ رَجَعُوا مِنْ مِنًى، وَأَمَّا الَّذِينَ جَمَعُوا الحَجَّ وَالعُمْرَةَ، فَإِنَّمَا طَافُوا طَوَافًا وَاحِدًا


Bukhari-1555

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30

இஹ்ராம் கட்டியவர் பள்ளத்தாக்கில் இறங்கும் போது தல்பியா கூறுதல். 

1555. முஜாஹித் (ரஹ்) அறிவித்தார்.

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அங்கிருந்தவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் கூறும்போது ‘அவனுடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் காஃபிர் என எழுதப்பட்டிருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), ‘நான் இதை நபி (ஸல்) அவா்கள் கூறக் கேட்கவில்லை. எனினும் ‘மூஸா (அலை) தல்பியா கூறியவாறு பள்ளத்தாக்கில் இறங்குவதை நான் காண்பது போன்று உள்ளது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்’ என்றார்.
Book : 25


كُنَّا عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَذَكَرُوا الدَّجَّالَ أَنَّهُ قَالَ: مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: لَمْ أَسْمَعْهُ وَلَكِنَّهُ قَالَ: «أَمَّا مُوسَى كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ إِذْ انْحَدَرَ فِي الوَادِي يُلَبِّي»


Bukhari-1554

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1554. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) (ஹஜ், உம்ராவிற்காக) மக்கா செல்ல நாடினால் நறுமணமில்லாத எண்ணெய் தேய்ப்பார். பிறகு துல்ஹுலைஃபா பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுவிட்டு மீண்டும் (காலையில்) புறப்படுவார். தம் வாகனம் நிலைக்கு வந்துவிட்டால் இஹ்ராம் (ஆடையை) அணிவார். ‘இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் செய்ய கண்டேன்’ எனக் கூறுவார்.
Book :25


«إِذَا أَرَادَ الخُرُوجَ إِلَى مَكَّةَ ادَّهَنَ بِدُهْنٍ لَيْسَ لَهُ رَائِحَةٌ طَيِّبَةٌ، ثُمَّ يَأْتِي مَسْجِدَ ذِي الحُلَيْفَةِ فَيُصَلِّي، ثُمَّ يَرْكَبُ، وَإِذَا اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ قَائِمَةً أَحْرَمَ»، ثُمَّ قَالَ: هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ


Bukhari-1553

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29 கிப்லாவை முன்னோக்கித் தல்பியா கூறுவது. 

1553. நாபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) துல்ஹுலைஃபாவில் ஸுப்ஹுத் தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அவரும் புறப்படுவார். வாகனம் நிலைக்கு வரும்போது கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்வார். பின்னர் தல்பியா கூறிக் கொண்டேயிருப்பார்.

பிறகு ஃதூத்துவா எனுமிடத்தை அடையும்போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார். இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்.
Book : 25


«إِذَا صَلَّى بِالْغَدَاةِ بِذِي الحُلَيْفَةِ أَمَرَ بِرَاحِلَتِهِ فَرُحِلَتْ، ثُمَّ رَكِبَ، فَإِذَا اسْتَوَتْ بِهِ اسْتَقْبَلَ القِبْلَةَ قَائِمًا، ثُمَّ يُلَبِّي حَتَّى يَبْلُغَ الحَرَمَ، ثُمَّ يُمْسِكُ حَتَّى إِذَا جَاءَ ذَا طُوًى بَاتَ بِهِ حَتَّى يُصْبِحَ، فَإِذَا صَلَّى الغَدَاةَ اغْتَسَلَ»، وَزَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ ذَلِكَ


Bukhari-1552

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 வாகனம் நிலைக்கு வரும் போது தல்பியா கூறுதல். 

1552. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

வாகனம் நிலைக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தல்பியா கூறினார்கள்.
Book : 25


«أَهَلَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ قَائِمَةً»


Bukhari-1551

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 இஹ்ராம் கட்டுவதற்கு முன்னால் வாகனத்தின் மீதமர்ந்த நிலையிலே அல்ஹம்து லில்லாஹ்,சுப்ஹானல்லாஹ், அல்லாஹ் அக்பர் கூறுவது. 

1551. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள்.

பிறகு விடியும் வரை அங்கேயே தங்கிவிட்டு மீண்டும் வாகனத்தின் மீதமர்ந்து பைதா எனுமிடத்தில் வாகனம் நிலைக்கு வந்தபோது ‘அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்’ எனக் கூறினார்கள். பிறகு ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் அணிந்து, தல்பியா கூறினார்.

நாங்கள் மக்கா வந்து (உம்ராவை முடித்த போது) இஹ்ராமிலிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் அணிந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளில் இரண்டு கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகளை அறுத்தார்கள்.
Book : 25


صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ مَعَهُ بِالْمَدِينَةِ الظُّهْرَ أَرْبَعًا، وَالعَصْرَ بِذِي الحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، ثُمَّ بَاتَ بِهَا حَتَّى أَصْبَحَ، ثُمَّ رَكِبَ حَتَّى اسْتَوَتْ بِهِ عَلَى البَيْدَاءِ، حَمِدَ اللَّهَ وَسَبَّحَ وَكَبَّرَ، ثُمَّ أَهَلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ، وَأَهَلَّ النَّاسُ بِهِمَا، فَلَمَّا قَدِمْنَا أَمَرَ النَّاسَ، فَحَلُّوا حَتَّى كَانَ يَوْمُ التَّرْوِيَةِ أَهَلُّوا بِالحَجِّ، قَالَ: وَنَحَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَدَنَاتٍ بِيَدِهِ قِيَامًا، وَذَبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ كَبْشَيْنِ أَمْلَحَيْنِ


Bukhari-1550

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1550. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் தல்பியா எவ்வாறு இருந்தது என்பதை நான் நன்கறிவேன்.

‘இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! புகழும் அருட்கொடையும் உனக்கே உரியன!’ இதுவே நபி(ஸல்) அவர்களின் தல்பியாவாகும்.
Book :25


إِنِّي لَأَعْلَمُ كَيْفَ ” كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُلَبِّي: لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ


Bukhari-1549

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 தல்பியா கூறுதல். 

1549. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.’
இதுவே நபி(ஸல்) அவர்களின் தல்பியாவாகும்.
Book : 25


أَنَّ تَلْبِيَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ


Next Page » « Previous Page