2920. நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். மக்கள் அவர்களுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவார்கள். ஒருவருடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவருடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். ஒருவருடைய மார்க்கப் பிடிப்பு பலவீனமாக இருந்தால் அவருக்கு ஏற்படும் சோதனைகள் குறைவாக இருக்கும். ஒரு (நம்பிக்கைகொண்ட) மனிதர் மக்களிடம் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவர் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவரை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: «الْأَنْبِيَاءُ، ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ، يُبْتَلَى النَّاسُ عَلَى قَدْرِ دِينِهِمْ، فَمَنْ ثَخُنَ دِينُهُ، اشْتَدَّ بَلَاؤُهُ، وَمَنْ ضَعُفَ دِينُهُ ضَعُفَ بَلَاؤُهُ، وَإِنَّ الرَّجُلَ لِيُصِيبَهُ الْبَلَاءُ حَتَّى يَمْشِيَ فِي النَّاسِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ»
சமீப விமர்சனங்கள்