Month: May 2022

Tirmidhi-3634

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வந்தது?

3634. ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

மேலும், ‘கடும் குளிரான நாள்களில் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி (ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்’

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


أَنَّ الحَارِثَ بْنَ هِشَامٍ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَيْفَ يَأْتِيكَ الوَحْيُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْيَانًا يَأْتِينِي مِثْلُ صَلْصَلَةِ الجَرَسِ وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ، وَأَحْيَانًا يَتَمَثَّلُ لِيَ المَلَكُ رَجُلًا فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ».

قَالَتْ عَائِشَةُ: «فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْزِلُ عَلَيْهِ الْوَحْيُ فِي اليَوْمِ الشَّدِيدِ الْبَرْدِ فَيَفْصِمُ عَنْهُ وَإِنَّ جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا»


Musnad-Ahmad-6989

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

6989. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள். மேலும் அவர்கள், “அது முஸ்லிமுக்கு ஒளியாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ نَتْفِ الشَّيْبِ، وَقَالَ: «إِنَّهُ نُورُ الْإِسْلَامِ»


Musnad-Ahmad-6962

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6962. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நரைத்த முடியை நீக்க வேண்டாம்! ஏனேனில் அது முஸ்லிமுக்கு ஒளியாகும். இஸ்லாத்தில் இருக்கும் போது ஒருவருக்கு ஒரு முடி நரைத்து விட்டாலும் அதற்காக அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்; ஒரு பாவத்தை மன்னிக்கிறான்; ஒரு அந்தஸ்தை உயர்த்துகிறான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَا تَنْتِفُوا الشَّيْبَ، فَإِنَّهُ نُورُ الْمُسْلِمِ، مَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ، كَتَبَ اللَّهُ لَهُ بِهَا حَسَنَةً، وَكَفَّرَ عَنْهُ بِهَا خَطِيئَةً، وَرَفَعَهُ بِهَا دَرَجَةً»


Musnad-Ahmad-6937

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6937. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள்.

மேலும் அவர்கள், “அது முஸ்லிமுக்கு ஒளியாகும்” என்று கூறினார்கள்.

மேலும் அவர்கள், “இஸ்லாத்தில் இருக்கும் போது எந்த ஒரு மனிதரின் முடி நரைத்து விட்டாலும் அதற்காக அவருக்கு ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது; அவரை விட்டு ஒரு பாவம் அழிக்கப்படுகிறது; ஒரு நன்மை எழுதப்படுகிறது.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَتْفِ الشَّيْبِ» ،

وَقَالَ: «هُوَ نُورُ الْمُؤْمِنِ» ،

وَقَالَ: «مَا شَابَ رَجُلٌ فِي الْإِسْلَامِ شَيْبَةً، إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَمُحِيَتْ عَنْهُ بِهَا سَيِّئَةٌ، وَكُتِبَتْ لَهُ بِهَا حَسَنَةٌ»

وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا»


Musnad-Ahmad-6924

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6924. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَتْفِ الشَّيْبِ»


Musnad-Ahmad-6675

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6675. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நரைத்த முடியை நீக்க வேண்டாம்! இஸ்லாத்தில் இருக்கும் போது எந்த ஒரு முஸ்லிமின் முடி நரைத்து விட்டாலும் அதற்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது; ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَا تَنْتِفُوا الشَّيْبَ، فَإِنَّهُ مَا مِنْ عَبْدٍ يَشِيبُ فِي الْإِسْلَامِ شَيْبَةً، إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِهَا حَسَنَةً ، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً»


Musnad-Ahmad-6672

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6672. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நரைத்த முடியை நீக்க வேண்டாம்! ஏனேனில் அது முஸ்லிமுக்கு ஒளியாகும். இஸ்லாத்தில் இருக்கும் போது எந்த ஒரு முஸ்லிமின் முடி நரைத்து விட்டாலும் அதற்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது; ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَا تَنْتِفُوا الشَّيْبَ، فَإِنَّهُ نُورُ الْمُسْلِمِ، مَا مِنْ مُسْلِمٍ يَشِيبُ شَيْبَةً فِي الْإِسْلَامِ إِلَّا كُتِبَ لَهُ بِهَا حَسَنَةٌ، وَرُفِعَ بِهَا دَرَجَةً، أَوْ حُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ»


Ibn-Majah-3721

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நரை முடியை நீக்குவது.

3721. நபி (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள். மேலும் அவர்கள், “அது இறைநம்பிக்கையாளருக்கு ஒளியாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَتْفِ الشَّيْبِ، وَقَالَ» هُوَ نُورُ الْمُؤْمِنِ


Abu-Dawood-4202

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நரை முடியை நீக்குவது.

4202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நரைத்த முடியை நீக்க வேண்டாம்! ஏனேனில் இஸ்லாத்தில் இருக்கும் போது எந்த ஒரு முஸ்லிமின் முடி நரைத்து விட்டாலும் மறுமைநாளில் அது அவருக்கு ஒளியாக இருக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

முஹம்மது பின் அஜ்லான் அவர்களிடமிருந்து ஸுஃப்யான் பின் உயைனா இவ்வாறே அறிவிக்கிறார்.

முஹம்மது பின் அஜ்லான் அவர்களிடமிருந்து யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள், “நீங்கள் நரைத்த முடியை நீக்க வேண்டாம்! ஏனேனில் இஸ்லாத்தில் இருக்கும் போது எந்த ஒரு முஸ்லிமின் முடி நரைத்து விட்டாலும் அதற்காக அல்லாஹ் அவருக்கு ஒரு நன்மையை எழுதுகிறான்; அவரை விட்டு ஒரு பாவத்தை மன்னிக்கிறான்” என்று அறிவிக்கிறார்.


لَا تَنْتِفُوا الشَّيْبَ، مَا مِنْ مُسْلِمٍ يَشِيبُ شَيْبَةً فِي الْإِسْلَامِ – قَالَ عَنْ سُفْيَانَ: «إِلَّا كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ»، وَقَالَ فِي حَدِيثِ يَحْيَى – إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِهَا حَسَنَةً، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً


Nasaayi-5068

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நரை முடியை நீக்குவது குறித்து வந்துள்ள தடை.

5068. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ نَتْفِ الشَّيْبِ»


Next Page » « Previous Page