Month: April 2021

Kubra-Bayhaqi-13048

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13048. ஹதீஸ் எண்-13047 இல் வரும் செய்தி இதில் ஸாலிஹ் பின் யஹ்யா —> (அவரின் தந்தை) யஹ்யா பின் மிக்தாம் —> மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் (மிக்தாமே! நீ தலைவராகவோ, வரி வசூலிப்பவராகவோ, செயலாளராகவோ இருக்க வேண்டாம்” என்று வந்துள்ளது.


لَمْ يَكُنْ أَمِيرًا وَلَا جَابِيًا وَلَا عَرَّافًا


Kubra-Bayhaqi-13047

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13047. மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய தோளில் அடித்து, “மிக்தாமே! நீ தலைவராகவோ, பொருளாளராகவோ, செயலாளராகவோ இல்லாத நிலையில் மரணமடைந்தால் நீ (மறுமையில்) வெற்றி பெற்றுவிடுவாய்” என்று கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ عَلَى مَنْكِبِهِ ثُمَّ قَالَ: ” أَفْلَحْتَ يَا قَدِيمُ إِنْ مِتَّ وَلَمْ تَكُنْ أَمِيرًا أَوْ كَاتِبًا أَوْ عَرِيفًا


Musnad-Ahmad-17205

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17205. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மிக்தாமே! நீ தலைவராகவோ, வரி வசூலிப்பவராகவோ, செயலாளராகவோ இல்லாத நிலையில் மரணமடைந்தால் நீ (மறுமையில்) வெற்றிபெற்றுவிடுவாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)


أَفْلَحْتَ يَا قُدَيْمُ إِنْ مِتَّ وَلَمْ تَكُنْ أَمِيرًا وَلَا جَابِيًا وَلَاعَرِيفًا


Abu-Dawood-2933

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

செயலாளர்.

2933. மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய தோளில் அடித்து, “மிக்தாமே! நீ தலைவராகவோ, பொருளாளராகவோ, செயலாளராகவோ இல்லாத நிலையில் மரணமடைந்தால் நீ (மறுமையில்) வெற்றிபெற்று விடுவாய்” என்று கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ عَلَى مَنْكِبِهِ، ثُمَّ قَالَ لَهُ: «أَفْلَحْتَ يَا قُدَيْمُ إِنْ مُتَّ وَلَمْ تَكُنْ أَمِيرًا، وَلَا كَاتِبًا وَلَا عَرِيفًا»


Musannaf-Abdur-Razzaq-21592

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

21592. அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு மனிதரிடம், நீ காவலராகவோ, செயலாளராகவோ இருக்க வேண்டாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் அல்ஜுரைரீ (ரஹ்)


قَالَ لِرَجُلٍ: لاَ تَكُونَنَّ شُرْطِيًّا، وَلاَ عَرِيفًا.


Abi-Yala-1115

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1115. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களுக்கு ஒரு காலம் நிச்சயமாக வரும். (அப்போது) உங்களிடத்தில் சில அறிவற்ற தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் மக்களில் தீயவர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள். தொழுகையைத் அதற்குரிய நேரத்தில் தொழுவதை விட்டுவிட்டு, தாமதப்படுத்தித் தொழுவார்கள். எனவே உங்களில் ஒருவர் அவர்கள் காலத்தில் வாழ்ந்தால் அவர்களுக்காக அறங்காவலராகவோ, காவலராகவோ, வரி வசூலிப்பவராகவோ, பொருளாளராகவோ இருக்க வேண்டாம்.

அறிவிப்பவர்கள்: அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி)


«لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ يَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ سُفَهَاءُ يُقَدِّمُونَ شِرَارَ النَّاسِ، وَيَظْهَرُونَ بِخِيَارِهِمْ، وَيُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مَوَاقِيتِهَا، فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ، فَلَا يَكُونَنَّ عَرِيفًا وَلَا شُرْطِيًّا وَلَا جَابِيًا وَلَا خَازِنًا»


Ibn-Hibban-4586

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4586. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பிற்காலத்தில்) உங்களிடத்தில் சில தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் தமக்கருகில் கேடுகெட்டவர்களையே வைத்துக் கொள்வார்கள். தொழுகையைத் தாமதப்படுத்தித் தொழுவார்கள். எனவே உங்களில் ஒருவர் அவர்கள் காலத்தில் வாழ்ந்தால் அவர்களுக்காக அறங்காவலராகவோ, காவலராகவோ, வரி வசூலிப்பவராகவோ, பொருளாளராகவோ இருக்க வேண்டாம்.

அறிவிப்பவர்கள்: அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி)


«لَيَأْتِيَنَّ عَلَيْكُمْ أُمَرَاءُ يُقَرِّبُونَ شِرَارَ النَّاسِ، وَيُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مَوَاقِيتِهَا، فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلَا يَكُونَنَّ عَرِيفًا، وَلَا شُرْطِيًا، وَلَا جَابِيًا، وَلَا خَازِنًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-26719

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

26719. அபூஹுரைரா (ரலி) அவர்கள் மஹ்தியே! நீ வரி வசூலிப்பவராகவோ, செயலாளராகவோ, காவலராகவோ இருக்க வேண்டாம் என்று எனக்கு கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஹ்தீ அல்லது மஹ்ரீ


قَالَ لِي: يَا مَهْدِيُّ لَا تَكُنْ جَابِيًا وَلَا عَرِيفًا وَلَا شُرْطِيًّا


Musannaf-Abdur-Razzaq-3789

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3789.


كَيْفَ أَنْتَ يَا مَهْدِيُّ إِذَا ظُهِرَ بِخِيَارِكُمْ، وَاسْتُعْمِلَ عَلَيْكُمْ أَحْدَاثُكُمْ، وَصُلِّيَتِ الصَّلَاةُ لِغَيْرِ مِيقَاتِهَا؟ قَالَ: قُلْتُ: لَا أَدْرِي قَالَ: «لَا تَكُنْ جَابِيًا، وَلَا عَرِيفًا، وَلَا شُرَطِيًّا، وَلَا بَرِيدًا، وَصَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا»


Almujam-Alkabir-9498

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9498.


«كَيْفَ أَنْتَ يَا مَهْدِيُّ إِذَا ظُهِرَ لِخِيَارِكُمْ وَاسْتُعْمِلَ عَلَيْكُمْ أَحْدَاثُكُمْ، أَوْ أَشْرَارُكُمْ، وَصُلِّيَتِ الصَّلَاةُ لِغَيْرِ مِيقَاتِهَا؟» قُلْتُ: لَا أَدْرِي، قَالَ: «لَا تَكُنْ جَابِيًا، وَلَا عَرِيفًا، وَلَا شُرَطَيًّا، وَلَا بَرِيدًا، وَصَلِّ الصَّلَاةَ لِمِيقَاتِهَا»


Next Page »