தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-928

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

928. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையில் குறைவு செய்தலும் இல்லை. (பிறருக்கு) ஸலாம் கூறுவதும் இல்லை.

அறிவிப்பவர்: (ரலி)

அஹ்மத் இமாம் கூறினார்கள்:

இந்த ஹதீஸின் பொருள் பற்றி என்னுடைய கருத்து என்னவெனில், தொழுகையில் நீங்கள் இருக்கும் போது (பிறருக்கு) ஸலாம் கூறக்கூடாது. பிறரும் உங்களுக்கு ஸலாம் கூறக்கூடாது என்பதாகும்.

ஒருவர் தொழுகையில் குறைவை ஏற்படுத்தி (அதை முழுமையாக நிறைவேற்றினோமா? இல்லையா? என்ற) சந்தேகத்துடன் செல்வது தொழுவதில் குறைவு செய்வதாகும்.

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا غِرَارَ فِي صَلَاةٍ، وَلَا تَسْلِيمٍ»

قَالَ أَحْمَدُ: «يَعْنِي فِيمَا أَرَى أَنْ لَا تُسَلِّمَ، وَلَا يُسَلَّمَ عَلَيْكَ، وَيُغَرِّرُ الرَّجُلُ بِصَلَاتِهِ فَيَنْصَرِفُ وَهُوَ فِيهَا شَاكٌّ»


Abu-Dawood-Tamil-793.
Abu-Dawood-TamilMisc-793.
Abu-Dawood-Shamila-928.
Abu-Dawood-Alamiah-793.
Abu-Dawood-JawamiulKalim-794.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

3 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ

4 . ஸுஃப்யான் ஸவ்ரீ

5 . அபூமாலிக்-ஸஃத் பின் தாரிக்

6 . அபூஹாஸிம்-ஸல்மான்

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


1 . இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் சந்தேகமில்லாமல் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.

2 . ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஆவியா பின் ஹிஷாம் அவர்கள் சந்தேகத்துடன் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார் என்பதுடன் கருத்தையும் மாற்றி அறிவித்துள்ளார்.


1 . அபூமாலிக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.

2 . அபூமாலிக் அவர்களிடமிருந்து அறிவிக்கும், முஹம்மத் பின் ஃபுளைல் அவர்கள் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.


  • இவர்களில் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 65
    அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அவர்களின் ஹதீஸ்களை நன்கு அறிந்தவர் என்பதாலும், முஆவியா பின் ஹிஷாம் அவர்களை விட மிகப்பலமானவர் என்பதாலும் நபியின் சொல் என்பதே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.

(ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் மாணவர்களில் மிகவும் முன்னுரிமை பெற்ற முதல் வகை பலமானவர்கள் 5 பேர். அவர்கள்:
1 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான்
2 . வகீஃ பின் ஜர்ராஹ்
3 . இப்னுல் முபாரக்
4 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ
5 . அபூநுஐம்-ஃபள்ல் பின் துகைன்

என இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் கூறியதாக இப்னு அபூகைஸமா அறிவித்துள்ளார்.

பார்க்க: அல்கமால்-8/149, தஹ்தீபுல் கமால்-23/209, ஷரஹு இலலுத் திர்மிதீ-2/722)

  • இவ்வாறே அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஃபுளைல் அவர்களை விட ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அவர்களே மிகப்பலமானவர் என்பதால் நபியின் சொல் என்பதே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.
  • நபியின் சொல்லாக அறிவிப்பது கூடுதல் தகவல் ஆகும்; பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற விதியை இந்த இடத்தில் ஏற்றுக்கொள்வதற்கு தகுந்த காரணம் உள்ளது.

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 65
    அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்களின் அறிவிப்புகள்:

பார்க்க: அஹ்மத்-9937 , அபூதாவூத்-928 , 929 , முஸ்னத் பஸ்ஸார்-9748 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-1597 , ஹாகிம்-972 , குப்ரா பைஹகீ-3411 ,

  • முஆவியா பின் ஹிஷாம் அவர்களின் அறிவிப்புகள்:

பார்க்க: அபூதாவூத்-929 , முஸ்னத் அபீ யஃலா-6206 , ஹாகிம்-973 , குப்ரா பைஹகீ-3412 ,


ஹதீஸின் கருத்து:

1 . இதில் இடம்பெறும் وَلَا تَسْلِيمٍ என்பது لا غرار  என்பதுடன் சேர்ந்த வார்த்தை என்பதால் வலா தஸ்லீம என்று மொழிவதின்படி தொழுகையில் பிறருக்கு ஸலாம் கூறுவது இல்லை என்ற கருத்து கிடைக்கும்.

2 . وَلَا تَسْلِيمٍ என்பது في صلاة  என்பதுடன் சேர்ந்த வார்த்தை என்பதால் வலா தஸ்லீமின் என்று மொழிவதின்படி ஸலாம் கூறுவதிலும், ஸலாமுக்கு பதில் கூறுவதிலும் குறைவு வைக்கக்கூடாது என்ற கருத்து கிடைக்கும். ஸலாம் கூறியவரின் வார்த்தையை திரும்ப கூறவேண்டும். அல்லது அதைவிட சிறந்தமுறையில் ஸலாம் கூற வேண்டும் என்ற (அல்குர்ஆன்: 4:86) வது இறைவசனத்தின் கருத்து இதில் உள்ளது.

சில அரபுமொழியியல் அறிஞர்கள் இரண்டு வகை கருத்தும் சரியானதே என்று கூறியிருந்தாலும் வேறு சில அறிஞர்கள் முதல் கருத்தே சரியானது என்று கூறியுள்ளனர்.


 

அபூதாவூத் இமாம்

அபூதாவூத் இமாம்.


இமாம் அபூதாவூத்

முழுப்பெயர்: சுலைமான் இப்னு அஷ்அஸ் இப்னு இஸ்ஹாக் இப்னு பஷீர் இப்னு ஷதாதல் அஸ்தீல் ஸஜிஸ்தானீ (இதில் சில மாற்றங்களுடனும் பெயர் கூறப்படுகிறது) (சுனன் அபூதாவூத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூதாவூத் அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: சுலைமான்

தந்தை பெயர்: அஷ்அஸ்

பிறந்த ஊர்: சஜிஸ்தான் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 202ல் ஷஃபான் மாதம்

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான், இராக்கின் கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஷாம், எகிப்து, ஸஜீரா, ஹிஜாஸ், திமிஷ்க், பல்ஹ் இன்னும் இது போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

சுனன் அபூதாவூத்,

அல்மராஸீல்,

அஸ்ஸுஹ்த் போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.

கஃனபீ, அஹ்மத், யஹ்யா இப்னுல்மதீனீ, சயீத் இப்னு சுலைமானுல் வாஸிதிய்யி, சுலைமான் இப்னு ஹர்ப், சுலைமான் இப்னு அப்துர்ரஹ்மானுத் திமிஷ்கீய்யி, யூசுப் இப்னு மூஸா அல்கதான், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

திர்மிதி, அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு தாவூத் இப்னு சுலைம், ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கர்மானீ, ஜகரிய்யா இப்னு யஹ்யா அஸ்ஸாஜி, அப்துர்ரஹ்மான் இப்னு கல்லாது அர்ராமஹுர்முஸி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 275ல் ஷவ்வால் மாதம் 17ல்இறந்தார். அப்போது அவருக்கு 73 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அஹ்மத் இமாம்

இமாம் அஹ்மத்

முழுப்பெயர் : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர் : அபூஅப்தில்லாஹ்

இயற்பெயர் : அஹ்மத்

தந்தைப்பெயர் : முஹம்மது

பிறந்த ஊர் : பக்தாதில் பிறந்தார்

பிறந்த நாள் :  ஹிஜ்ரி 164ம் ஆண்டு

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற உலகில் உள்ள பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

முஸ்னத் அஹ்மத்

அஸ்ஸுஹுத்

ஃபலாயிலுஸ் ஸஹாபா (ஸஹாபாக்களின் சிறப்பு)

அல்அஷ்ரிபத்

அல்இலல்

அன்னாஸிஹ் வல்மன்ஸுஹ்

அல்மனாசிக்

கிதாபுல் ஃபிதன்

கிதாபுல் ஃபலாயிலி அஹ்லில் பைத்

முஸ்னத் அஹ்லில் பைத்

அல்அஸ்மாவு வல்குனா ( அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது)

கிதாபுத்தாரிக்

அல்முகத்தமு வல்முதஅக்கர் (முந்தியவர்கள் பிந்தியவர்கள்)

இப்ராஹீம் இப்னு காலித் அஸ்ஸன்ஆனி, இஸ்மாயீல் இப்னு உலய்யா, அபூபக்கர் இப்னு அய்யாஷ், இஸ்ஹாக் இப்னு யூசுஃப் அல்அஸ்ரக், ரபிஃ இப்னு உலய்யா, ரவ்ஹ் இப்னு உப்பாதா, சுஃப்யான் இப்னு உஐனா, தல்க் இப்னு நகயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்புகாரி, முஸ்லிம் இப்னு  ஹஜ்ஜாஜ், அபூதாவூத், அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹ்ம்மத் இப்னு ஹானீல்பக்தாதீ, அபூஹாதம் முஹம்மத் இப்னு இத்ரீஸ், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ போன்ற அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 241ஆம் வருடம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமை அன்று மரணித்தார். அப்போது அவருக்கு 77 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ

عبد الرحمن بن مهدي

இறப்பு: ஹிஜ்ரி 198, பஸரா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பின் ஹஸ்ஸான் பின் அப்துர்ரஹ்மான்

தந்தை பெயர்: மஹ்தீ பின் ஹஸ்ஸான்

வம்சம்: அல்அன்பரீ, அல்அஸ்தீ

புனைப்பெயர்: அபூ ஸயீத்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா, அஸ்பஹான்

பிறப்பு: ஹிஜ்ரி 135

இறப்பு: ஹிஜ்ரி 198, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 135ல் பிறந்தார்கள். இவர் பஸராவைச் சேர்ந்த மிகப் பலமான ஹதீஸ் கலை அறிஞர், ஹாஃபிழ் மற்றும் இமாம் ஆவார். ஹதீஸ் மற்றும் ரிஜால் கலையில் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார்.

இவர் ஹிஜ்ரி 198ல் பஸராவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): மாலிக் இமாம், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா, ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாத் பின் ஸைத், இஸ்ராயீல் பின் யூனுஸ், அபான் பின் யஸீத் அல்அத்தார், மஹ்தீ பின் மைமூன், இக்ரிமா பின் அம்மார், காலித் பின் தீனார், ஹிஷாம் பின் ஸஃத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): மூஸா பின் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, அப்துல்லாஹ் பின் முபாரக், அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹ், யஹ்யா பின் மயீன், யஹ்யா பின் யஹ்யா, அபூ ஸவ்ர் அல்கல்பீ, ஸுஹைர் பின் ஹர்ப், அல்காஸிம் பின் ஸலாம், அபூபக்ர் பின் அபூஷைபா, முஹம்மத் பின் பஷ்ஷார் பிந்தார், முஹம்மத் பின் அல்முஸன்னா

வேறு பெயர்கள்: இப்னு மஹ்தீ


ஆதாரம்: muslimscholars.info (20033) · Should verify

ஸுஃப்யான் ஸவ்ரீ

ஸுஃப்யான் ஸவ்ரீ-அஸ்ஸவ்ரீ (ரஹ்) – Sufyan bin Sa‘id Ath-Thawri

இறப்பு: ஹிஜ்ரி 161, பஸரா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸுஃப்யான் பின் ஸயீத் பின் மஸ்ரூக்

தந்தை பெயர்: ஸயீத் பின் மஸ்ரூக் அஸ்ஸவ்ரீ

வம்சம்: பனூ தவ்ர் பின் அப்து மனாத்

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: கூஃபா, ஹிஜாஸ், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 97, கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 161, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 97 ஆம் ஆண்டு கூஃபாவில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 161 ஆம் ஆண்டு பஸராவில் மரணமடைந்தார்கள். இவர் மிகப் பலமானவர், ஹாஃபிழ், ஃபகீஹ், இமாம், ஹுஜ்ஜத் ஆவார்.

ஹதீஸ் கலையில் 'அமீருல் முஃமினீன்' என்று போற்றப்பட்டார்கள். அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹ் அவர்கள், 'நான் 1100 ஷேக்குகளிடமிருந்து எழுதினேன், ஸுஃப்யான் ரஹ் அவர்களை விட சிறந்த ஒருவரிடமிருந்தும் நான் எழுதவில்லை' என்று கூறினார்கள். இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள், 'இமாம் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

இமாம் ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ ரஹ் அவர்கள்தான். என் இதயத்தில் அவரை விட யாரும் முந்தியதில்லை' என்று கூறினார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸயீத் பின் மஸ்ரூக் அஸ்ஸவ்ரீ, ஸுலைமான் பின் அபூ ஸுலைமான், அபூ இஸ்ஹாக் அஸ்ஸபியீ, அப்துல் மாலிக் பின் உமைர், இஸ்மாயீல் பின் அபூ காலித், ஸலமா பின் கஹைல், ஸுலைமான் அல்அஃமஷ், மன்ஸூர் பின் அல்மஃதமர், ஹம்மாத் பின் அபூ ஸுலைமான், ஸுபைத் பின் அல்ஹாரிஸ், அதா பின் அஸ்ஸாயிப் அஸ்ஸகஃபீ, ஸைத் பின் அஸ்லம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): மாலிக் இமாம், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், அப்துல்லாஹ் பின் முபாரக், ஜரீர் பின் அப்துல் ஹமீத், ஹஃப்ஸ் பின் கியாஸ், ஹம்மாத் பின் உஸாமா, வகீஃ பின் அல்ஜர்ராஹ், யஸீத் பின் ஹாறூன், அபூ நுஐம், உபைதுல்லாஹ் பின் மூஸா, அல்ஃபள்ல் பின் மூஸா அஸ்ஸீனானீ

வேறு பெயர்கள்: ஸுஃப்யான் பின் ஸயீத் அஸ்ஸவ்ரீ, அபூ அப்துல்லாஹ்


ஆதாரம்: muslimscholars.info (20012) · Should verify

அபூமாலிக்-ஸஃத் பின் தாரிக்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபூஹாஸிம்-ஸல்மான்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify

4 comments on Abu-Dawood-928

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஹதீஸின் கருத்து சேர்க்கப்பட்டுள்ளது.

    2. விளக்கம் நன்றாக புரிந்தது
      அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

      1. அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கும் அருள் புரிவானாக!

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.