தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 2

தூய்மையின் சிறப்பு குறித்து வந்துள்ளவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘முஸ்லிமான’ அல்லது ‘முஃமினான’ (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத்தூய்மை (உளூ) செய்யும் போது தமது முகத்தைக் கழுவினால், கண்களால் நிகழ்ந்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) ‘நீருடன்’ அல்லது ‘நீரின் கடைசித் துளியுடன் அல்லது இது போன்ற (வேறொரு வார்த்தையில் கூறினார்கள். அ)தனுடன் முகத்திலிருந்து வெளியேறி விடுகின்றன.

அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் செய்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) ‘நீருடன்’ அல்லது ‘நீரின் கடைசித் துளியுடன்’ வெளியேறிவிடுகின்றன. இறுதியில் அவர் (கால்களைக் கழுவி முடிக்கும்போது) பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அங்கிருந்து) செல்கிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், ஸுஹைல் பின் அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் வழியாக அறிவிக்கும் இந்த ஹதீஸ், ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.

அறிவிப்பாளர் ஸுஹைல் அவர்களின் தந்தை அபூஸாலிஹ் அஸ்ஸம்மான் ஆவார். இவருடைய இயற்பெயர் ‘தக்வான்’ என்பதாகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்களின் இயற்பெயர் விஷயத்தில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சிலர் அவரது பெயர் ‘அப்து ஷம்ஸ்’ என்றும், வேறுசிலர் ‘அப்துல்லாஹ் பின் அம்ர்’ என்றும் கூறுகின்றனர். இரண்டாவது கருத்தே முஹம்மத் பின் இஸ்மாயீல் அல்புகாரீ (ரஹ்) அவர்களின் கருத்தாகும். இதுவே மிகச் சரியான கருத்தும் ஆகும்.

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), ஸவ்பான் (ரலி), ஸுனாபிஹீ (ரலி), அமர் பின் அபஸா (ரலி), ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி), அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (மேற்கண்ட ஸுனாபிஹீ என்பார் நபித்தோழர் ஆவார்.)

அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களிடமிருந்து நபிமொழிகளை அறிவிக்கும் மற்றொரு ஸுனாபிஹீ என்பவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (நேரடியாக) எதையும் செவியுற்றவர் அல்லர். அப்துர்ரஹ்மான் பின் உஸைலா என்பதே அவரது இயற்பெயராகும்; அபூஅப்தில்லாஹ் என்பது அவரது குறிப்புப் பெயராகும். இவர் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக (மதீனாவுக்கு)ச் சென்று கொண்டிருந்தார். அவர் வழியில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். (அதனால் இவர் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கவில்லை) இவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (எனினும், அவையனைத்தும் அவர் நபியவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றவை அல்ல.)

நபித்தோழரான ஸுனாபிஹ் பின் அல்அஃஸர் அல்அஹ்மஸீ (ரலி) அவர்களுக்கும் ‘ஸுனாபிஹீ’ எனும் பெயர் கூறப்படுகிறது. (ஆனால், இது சரியான தகவல் இல்லை என இப்னு ஹஜர் கூறியுள்ளார்)

நான் “(மற்ற இறைத்தூதர்களைப் பின்பற்றிய மக்களைவிட) அதிக மக்கள் எண்ணிக்கை கொண்டவன் என (மறுமை நாளில்) பெருமிதம் கொள்வேன். எனவே, நீங்கள் எனக்குப் பின்னர் (உங்களிடையே) போரிட்டு (உங்களை மாய்த்து)க் கொள்ளாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள்  கூறியதை நான் செவியேற்றேன் என அறிவிப்பவர் இதே ஸுனாபிஹ் பின் அல்அஃஸர் (ரலி) அவர்கள் தான்.

(திர்மிதி: 2)

بَابُ مَا جَاءَ فِي فَضْلِ الطُّهُورِ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى الْقَزَّازُ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، ح وحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ، أَوِ الْمُؤْمِنُ، فَغَسَلَ وَجْهَهُ خَرَجَتْ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ – أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ، أَوْ نَحْوَ هَذَا – وَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ – أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ – حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنَ الذُّنُوبِ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهُوَ حَدِيثُ مَالِكٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَبُو صَالِحٍ وَالِدُ سُهَيْلٍ هُوَ أَبُو صَالِحٍ السَّمَّانُ، وَاسْمُهُ ذَكْوَانُ، وَأَبُو هُرَيْرَةَ اخْتُلِفَ فِي اسْمِهِ، فَقَالُوا: عَبْدُ شَمْسٍ، وَقَالُوا: عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، وَهَكَذَا قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، وَهَذَا الْأَصَحُّ. وَفِي الْبَابِ عَنْ عُثْمَانَ، وَثَوْبَانَ، وَالصُّنَابِحِيِّ، وَعَمْرِو بْنِ عَبَسَةَ، وَسَلْمَانَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَالصُّنَابِحِيُّ هَذَا الَّذِي رَوَى عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، لَيْسَ لَهُ سَمَاعٌ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُسَيْلَةَ، وَيُكْنَى أَبَا عَبْدِ اللَّهِ، رَحَلَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الطَّرِيقِ، وَقَدْ رَوَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَادِيثَ، وَالصُّنَابِحُ بْنُ الْأَعْسَرِ الْأَحْمَسِيُّ صَاحِبُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُقَالُ لَهُ: الصُّنَابِحِيُّ أَيْضًا، وَإِنَّمَا حَدِيثُهُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: إِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ فَلَا تَقْتَتِلُنَّ بَعْدِي


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2.
Tirmidhi-Alamiah-2.
Tirmidhi-JawamiulKalim-2.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.