தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-420

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13

உளூவின் நீர், (உறுப்புகளில்) எங்கெல்லாம் படுகிறதோ அங்கெல்லாம் (மறுமையில்) வெண்மையும் பரவும்.

 அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பின்னால் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தமது கையை அக்குள்வரை நீட்டிக் கழுவினார்கள்.

நான், அபூஹுரைரா (ரலி) அவர்களே! இது என்ன அங்கத் தூய்மை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஃபர்ரூகின் மக்களே! (பாமரர்களான) நீங்கள் இங்குதான் இருந்தீர்களா? நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள் என்று நான் அறிந்திருந்தால் இவ்வாறு அங்கத் தூய்மை செய்திருக்கமாட்டேன். என் உற்ற தோழர் (ஸல்) அவர்கள், இறைநம்பிக்கையாளரின் உறுப்புகளில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ அங்கெல்லாம் வெண்மை பரவும் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

Book : 2

(முஸ்லிம்: 420)

13 – بَابٌ تَبْلُغُ الْحِلْيَةُ حَيْثُ يَبْلُغُ الْوُضُوءُ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا خَلَفٌ يَعْنِي ابْنَ خَلِيفَةَ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ

كُنْتُ خَلْفَ أَبِي هُرَيْرَةَ، وَهُوَ يَتَوَضَّأُ لِلصَّلَاةِ فَكَانَ يَمُدُّ يَدَهُ حَتَّى تَبْلُغَ إِبْطَهُ فَقُلْتُ لَهُ: يَا أَبَا هُرَيْرَةَ مَا هَذَا الْوُضُوءُ؟ فَقَالَ: يَا بَنِي فَرُّوخَ أَنْتُمْ هَاهُنَا؟ لَوْ عَلِمْتُ أَنَّكُمْ هَاهُنَا مَا تَوَضَّأْتُ هَذَا الْوُضُوءَ، سَمِعْتُ خَلِيلِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «تَبْلُغُ الْحِلْيَةُ مِنَ الْمُؤْمِنِ، حَيْثُ يَبْلُغُ الْوَضُوءُ»


Tamil-420
Shamila-250
JawamiulKalim-373




  • இந்தச் செய்தியில் تَبْلُغُ الْحِلْيَةُ مِنَ الْمُؤْمِنِ، حَيْثُ يَبْلُغُ الْوَضُوءُ – என்ற வாக்கியத்துக்கு “இறைநம்பிக்கையாளரின் உறுப்புகளில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ அங்கெல்லாம் வெண்மை பரவும்” என்று பொருள் கூறப்பட்டிருந்தாலும் சிலர் இதற்கு வேறு பொருளையும் கூறியுள்ளனர்.

   اُولٰۤٮِٕكَ لَهُمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِىْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ يُحَلَّوْنَ فِيْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّ يَلْبَسُوْنَ ثِيَابًا خُضْرًا مِّنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَّكِــِٕيْنَ فِيْهَا عَلَى الْاَرَآٮِٕكِ‌ؕ نِعْمَ الثَّوَابُ ؕ وَحَسُنَتْ مُرْتَفَقًا

அவர்களுக்கு நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக் காப்புகள் அவர்களுக்கு அணிவிக்கப்படும். ஸுந்துஸ், இஸ்தப்ரக் எனும் பச்சைப் பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். அதில் உள்ள இருக்கைகளில் அவர்கள் சாய்ந்திருப்பார்கள். இதுவே சிறந்த கூலி. அழகிய தங்குமிடம்.

(அல்குர்ஆன்: 18:31) 

இந்த இறை வசனத்தின் மூலமும், இதுபோன்ற வசனங்களின் மூலமும் சொர்க்கவாசிகளுக்கு சொர்க்கத்தின் ஆபரணங்கள் அணிவிக்கப்படும் என்பதைக் காணலாம்.

அந்த ஆபரணங்கள் உளூவின் உறுப்புகளை கழுவும் அளவுக்கு இருக்கும் என்பதே இந்த ஹதீஸின் கருத்தாகும் என்று சிலர் கூறுகின்றனர்.


இந்தச் செய்தியை அபூமாலிக்-ஸஃத் பின் தாரிக் அவர்களிடமிருந்து அறிவித்தவர்கள் சிறிது வார்த்தைகளை மாற்றி அறிவித்துள்ளனர்…

1 . கலஃப் பின் கலீஃபா.

2 . அப்துல்லாஹ் பின் இத்ரீஸ்.

3 . அலீ பின் முஸ்ஹிர்.

இவ்வாறே அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தவர்கள் சிறிது வார்த்தைகளை மாற்றி அறிவித்துள்ளனர்…

1 . அபூஸுர்ஆ பின் அம்ர்

2 . நுஐம் பின் அப்துல்லாஹ் அல்முஜ்மிர்

3 . அபூஹாஸிம்.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    —> அபூஹாஸிம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-8840 , முஸ்லிம்-420 , முஸ்னத் பஸ்ஸார்-9746 , குப்ரா நஸாயீ-142 , நஸாயீ-149 , முஸ்னத் அபீ யஃலா-6202 , இப்னு குஸைமா-07, இப்னு ஹிப்பான்-1045 , குப்ரா பைஹகீ-257 ,

2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-604 .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-1365953 ,

2 comments on Muslim-420

  1. உளூவின் நீர், (உறுப்புகளில்) எங்கெல்லாம் படுகிறதோ அங்கெல்லாம் (மறுமையில்) வெண்மையும் பரவும்
    இது அனுமதிக்கப்பட்டது தான்
    விரும்பியவர் செய்து கொள்ளலாம்

    சொர்க்கவாசிகளுக்கு சொர்க்கத்தின் ஆபரணங்கள் அணிவிக்கப்படும் என்பதைக் காணலாம்.

    அந்த ஆபரணங்கள் உளூவின் உறுப்புகளை கழுவும் அளவுக்கு இருக்கும் என்பதே இந்த ஹதீஸின் கருத்தாகும் என்று சிலர் கூறுகின்றனர்
    இந்த செய்தியும் ஏற்புடையதாக இருக்கிறது

    1. வெண்மையின் மூலம் மறுமையில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்
      என்று நபி அவர்கள் கூறுகிறார்கள்

      இறைநம்பிக்கையாளரின் உறுப்புகளில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ அங்கெல்லாம் வெண்மை பரவும்

      இறைநம்பிக்கையாளரின் உறுப்புகள் உளூவினால் வெண்மை பரவும்

      எனவே முஃமினைத் தவிர வேறு யாரும் உலூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.