தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-136

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3

உளூவின் சிறப்பும் உளூ செய்தோரின் முகம், கை, கால் ஆகியன (மறுமையில்) பிரகாசிப்பதும். 

(மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலின் மேல்புறத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) ‘நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள்.

எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்’ என்றார்கள்’

அறிவிப்பவர்: நுஐம் அல்முஜ்மிர் (ரஹ்)

அத்தியாயம்: 4

(புகாரி: 136)

بَابُ فَضْلِ الوُضُوءِ، وَالغُرُّ المُحَجَّلُونَ مِنْ آثَارِ الوُضُوءِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ نُعَيْمٍ المُجْمِرِ، قَالَ:

رَقِيتُ مَعَ أَبِي هُرَيْرَةَ عَلَى ظَهْرِ المَسْجِدِ، فَتَوَضَّأَ، فَقَالَ: إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ القِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ الوُضُوءِ،

فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ»


Bukhari-Tamil-136.
Bukhari-TamilMisc-136.
Bukhari-Shamila-136.
Bukhari-Alamiah-133.
Bukhari-JawamiulKalim-134.




  • இந்தச் செய்தியின் இறுதிப்பகுதியை சிலர் முத்ரஜ் என்றும், சிலர் முஜ்ரஜ் இல்லை; நபி (ஸல்) அவர்களின் சொல் தான் என்றும் கூறுகின்றனர்.

  • ஃகுர்-ஃகுர்ரத்- முகம் வெண்மையாக-பிரகாசமாக இருத்தல்.
  • முஹஜ்ஜலீன்-தஹ்ஜீல்- கை, கால்கள் வெண்மையாக-பிரகாசமாக இருத்தல்.

அதிகப்படுத்துதல் என்பதற்கு கூறப்படும் விளக்கம்:

  • முகத்தை கழுவுவதுடன் நெற்றிக்கு மேலுள்ள (சிறிது) தலைப்பகுதியையும், கழுத்துப் பகுதியையும் கழுவுதல்.
  • கைகளை முழங்கைகளைத் தாண்டி அக்குள் பகுதிவரை கழுவுதல்.
  • கால்களை கரண்டைக்கு மேலாக முழங்காலுக்கு சற்று கீழாக கழுவுதல். (அதாவது கெண்டை காலின் பாதி அளவாவது கழுவுதல்)

1 . இதை முத்ரஜ் என்று கூறுவோர் மூன்று ஆதாரங்களைக் கூறுகின்றனர்:

“எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்” என்ற வாக்கியம் நபி (ஸல்) அவர்களின் சொல்லா? அல்லது அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களின் சொல்லா? என்பதை நான் அறியவில்லை என்று நுஐம் அல்முஜ்மிர் அவர்கள் சந்தேகமாகக் கூறியதாக வேறு அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.

(பார்க்க: அஹ்மத்-8413

  • 1. இந்த செய்தியை பத்து நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். இந்த செய்திகளில் மேற்கண்ட கூடுதல் வாக்கியம் இடம்பெறவில்லை. அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடமிருந்து நுஐம் அல்முஜ்மிர் அவர்கள் மட்டுமே இவ்வாறு (அதுவும் சந்தேகமாக) அறிவித்துள்ளார் என்ற இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களின் கூற்றை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் குறிப்பிட்டு விட்டு அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடமிருந்து கஅப் என்பவரும் இவ்வாறு அறிவித்துள்ளார். ஆனால் அதில் லைஸ் பின் அபூஸுலைம் வருவதால் அது பலவீனமான அறிவிப்பாளர்தொடர் என்றும் கூறியுள்ளார். மேலும் மேற்கண்ட வாக்கியம் முத்ரஜ் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் கூறியிருப்பதைப் போன்றே அப்துல்அளீம் அல்முன்திரீ, இப்னு தைமியா, இப்னுல் கய்யிம் ஆகியோரும் கூறியுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அள்ளயீஃபா-1030, அத்தர்ஃகீப் வத்தர்ஹீப்-1/91, ஹாதில் அர்வாஹ்-1/201)

  • 2 . மேலும் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்கள், உளூவின் சில அவயங்களை அதன் எல்லைக்கு அதிகமாகக் கழுவுவதும் (இறைநம்பிக்கையாளரின் உறுப்புகளில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ அங்கெல்லாம் வெண்மை பரவும்) என்ற ஹதீஸில் அடங்கும் என்ற சுயஆய்வின் படியே இவ்வாறு கூறியிருக்க வாய்ப்பு உள்ளது. இவருக்கும், அபூஹாஸிமுக்கும் நடைபெற்ற உரையாடலில் இருந்து இதைத் தெரிந்துக் கொள்ளலாம்.

(பார்க்க: முஸ்லிம்-420)

மேற்கண்ட வாக்கியம் நபியின் கூற்றாக இருந்திருந்தால் அபூஹாஸிமிடம் அதைக் கூறியிருக்கலாம். அவ்வாறு கூறவில்லை என்பதால் மேற்கண்ட வாக்கியம் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களின் கூற்றே என்று புரிந்துக் கொள்ளலாம் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

  • (3 . மேலும் இதில் இடம்பெறும் ஃகுர்ரத் என்ற வார்த்தையின் பொருளைக் குறிப்பிட்டு இதிலிருந்து கூடுதலாக கழுவுவது சரியான வாதம் அல்ல என்று கூறுகின்றனர். ஃகுர்ரத் என்றால் முகம் பிரகாசித்தல் என்ற பொருள் என்பதால் இதை அதிகப்படுத்த தேவையில்லை. ஏனெனில் உளூவில் முழுமுகமும் கழுவப்படும்)

2 . உளூவின் உறுப்புகளை கூடுதலாக கழுவுதல் என்ற வாக்கியம் முத்ரஜ் இல்லை; நபியின் சொல் தான் என்று கூறுவோரின் ஆதாரம்:

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் விமர்சனத்திற்கு முல்லா அலீ காரீ அவர்களின் பதில்:

«مرقاة المفاتيح شرح مشكاة المصابيح» (1/ 350):
وَقَالَ الْعَسْقَلَانِيُّ، قَالَ أَبُو نُعَيْمٍ: لَا أَدْرِي قَوْلَهُ: مَنِ اسْتَطَاعَ إِلَخْ. مِنْ قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَوْ مِنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ، وَلَمْ أَرَ هَذِهِ الْجُمْلَةَ مِنْ رِوَايَةِ أَحْمَدَ مِمَّنْ رَوَى هَذَا الْحَدِيثَ مِنَ الصَّحَابَةِ وَهُمْ عَشْرَةٌ وَلَا مِمَّنْ رَوَاهُ عَنْ أَبِي هُرَيْرَةَ غَيْرَ رِوَايَةِ أَبِي نُعَيْمٍ هَذِهِ 

وَقَوْلُ ابْنِ حَجَرٍ: وَدَعْوَى أَنَّ: فَمِنْ. . إِلَخْ، مِنْ كَلَامِ أَبِي هُرَيْرَةَ فَلَا يَسُنُّ غُرَّةً وَلَا تَحْجِيلَ، يَرُدُّهَا أَنَّهُ لَمْ يَصِحَّ مَا يَدُلُّ عَلَى الْإِدْرَاجِ وَالْأَصْلُ عَدَمُهُ إِذْ لَوْ كَانَ ثَمَّةَ إِدْرَاجٍ لَبَيَّنَهُ أَبُو هُرَيْرَةَ فِي طَرِيقٍ مِنَ الطُّرُقِ وَاحْتِمَالُهُ لَا يُجْدِي بَلْ لَا بُدَّ مِنْ تَحَقُّقِهِ كَلَامَ مَنْ لَيْسَ عِنْدَهُ تَحَقُّقٌ مِنَ اصْطِلَاحِ الْمُحَقِّقِينَ مِنَ الْمُحَدِّثِينَ وَالْأُصُولِيِّينَ الْمُسْتَدِلِّينَ، أَمَّا أَوَّلًا فَلِأَنَّ كَوْنَ قَوْلِهِ: فَمَنِ اسْتَطَاعَ. . إِلَخْ. مِنْ كَلَامِ أَبِي هُرَيْرَةَ لَا يَلْزَمُ مِنْهُ أَنْ لَا يَسُنَّ غُرَّةً وَلَا تَحْجِيلَ فَإِنَّ اسْتِحْبَابَهُ عُلِمَ مِنْ قَوْلِهِ عليه الصلاة والسلام ( «يُدْعَوْنَ غُرًّا مُحَجَّلِينَ» ) وَيُعْلَمُ إِطَالَتُهُ مِنَ الْحَدِيثِ الْآتِي. وَأَمَا ثَانِيًا فَلِأَنَّ حُفَّاظَ الْحَدِيثِ إِذَا قَالُوا فِي كَلَامٍ أَنَّهُ مُدْرَجٌ أَوْ مَوْقُوفٌ وَجَبَ عَلَى الْفُقَهَاءِ مُتَابَعَتُهُمْ، بَلْ إِذَا تَرَدَّدُوا أَنَّهُ مَوْقُوفٌ أَوْ مَرْفُوعٌ فَلَا يَصِحُّ جَعْلُهُ مَرْفُوعًا مَجْزُومًا بِهِ مُرَتَّبًا عَلَيْهِ الْمَسْأَلَةَ الْفِقْهِيَّةَ، وَأَمَّا ثَالِثًا فَلِأَنَّ قَوْلَهُ: لَبَيَّنَهُ أَبُو هُرَيْرَةَ، غَيْرُ مُتَّجِهٍ إِذِ الْكَلَامُ أَنَّهُ مِنْ قَوْلِهِ، فَكَيْفَ يُبَيِّنُ أَنَّهُ قَوْلُهُ أَوْ قَوْلُ غَيْرِهِ، وَإِنَّمَا بَيَّنَهُ مَنْ بَعْدَهُ، وَيَكْفِي تَرَدُّدُ مَنْ رَوَاهُ عَنْهُ بِغَيْرِ وَاسِطَةٍ وَهُوَ نُعَيْمٌ أَنَّهُ مِنْ قَوْلِهِ مَوْقُوفًا أَوْ مَرْفُوعًا، مَعَ مَا يَدُلُّ عَلَيْهِ مِنْ شُذُوذِهِ وَانْفِرَادِهِ عَمَّنْ رَوَى عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ سَائِرِ الطُّرُقِ الْوَاصِلَةِ إِلَى حَدِّ الْعَشَرَةِ الْكَامِلَةِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

முத்ரஜ் என்றிருந்தால் இந்த செய்தியின் ஏதெனும் ஒரு அறிவிப்பாளர்தொடரில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களே –  قلت  – நான் கூறுகிறேன் போன்ற வார்த்தைகளின் மூலம் விளக்கியிருப்பார்கள். அப்படி எதுவும் வரவில்லை என்பதால் முத்ரஜ் என்பதற்கு ஆதாரம் இல்லாதபோது அஸல் நிலைப்படி முஜ்ரஜ் இல்லாத செய்தி என்றே முடிவு செய்ய வேண்டும்.

முஜ்ரஜ் என்பதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்று கூறுவதில் எந்த பயனும் இல்லை.

ஹதீஸ்கலை அறிஞர்கள் மற்றும் உஸூல் அறிஞர்களின் வழிமுறைப்படி இதை உறுதிப்படுத்தவேண்டும்.

1 . يُدْعَوْنَ غُرًّا مُحَجَّلِينَ என்ற வார்த்தையின் மூலமும், பின்வரும் சில ஹதீஸ்களின் மூலமும் கூடுதலாக கழுவுவது முஸ்தஹப்-விரும்பத்தக்கது என்று தெரிகிறது.

2 . ஹதீஸ்கலை அறிஞர்கள் ஒரு செய்தியை உறுதியாக நபியின் சொல் என்று கூறிவிட்டால் இவ்வாறே ஒரு செய்தியை உறுதியாக நபித்தோழரின் சொல் என்று கூறிவிட்டால் மார்க்க சட்ட நிபுணர்கள் அதன்படியே சட்டம் எடுப்பார்கள்.

அவர்கள், அதை உறுதியாக கூறமுடியாவிட்டால் அதிலிருந்து சட்டம் எடுக்கமாட்டார்கள். இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
இவ்வாறு செய்வது முஸ்தஹப் என்று அறிஞர்கள் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

3 . இது நபியின் சொல் என்பதை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்கள் விளக்கியிருப்பார் என்று கூறுவதும் சரியான வாதம் அல்ல.

இந்த ஹதீஸை அவர் தான் அறிவிக்கிறார். அவர், ஏன் இது என் சொல் என்றோ அல்லது மற்றவர்களின் சொல் என்றோ கூறவேண்டும். இவரிடமிருந்து கேட்டவர்கள் தான் அதைக் குறிப்பிட வேண்டும்.

நுஐம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஃபுலைஹ் மட்டுமே நுஐம் அவர்கள் சந்தேகமாகக் கூறினார் என்று அறிவித்துள்ளார். இந்த செய்திவரும் மற்ற 10 அறிவிப்பாளர்தொடர்களில் இவ்வாறு சந்தேகமாக இது நபியின் சொல்லா? அல்லது அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களின் சொல்லா? என்று சந்தேகமாக கூறப்படவில்லை.

எனவே இரண்டாவது பகுதி நபியின் சொல் என்றே முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.


  • என்றாலும் فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ என்ற பகுதி முல்லா அலீ காரீ அவர்கள் கூறியது போன்று 10 சரியான அறிவிப்பாளர்தொடர்களில் வரவில்லை. 

இந்தப் பகுதியை நுஐம் பின் அப்துல்லாஹ் அல்முஜ்மிர் அவர்களிடமிருந்து அறிவித்தவர்கள்:

1 . ஸயீத் பின் அபூஹுலால்.

2 . உமாரா பின் ஃகஸிய்யா.

3 . ஸயீத் பின் அபுல்ஹுவைரிஸ்.

4 . ஃபுலைஹ் பின் ஸுலைமான்.

  • ஸயீத் பின் அபுல்ஹுவைரிஸ் வரும் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது. இதில் இப்னு ஜுரைஜ் தனது ஆசிரியரான ஸயீத் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை.
  • நுஐம் பின் அப்துல்லாஹ் அல்முஜ்மிர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் அபூஹுலால், உமாரா பின் ஃகஸிய்யா ஆகியோர் நுஐம் அவர்கள் ஹதீஸை அறிவித்த பின் கூறிய தகவலை குறிப்பிடவில்லை.
  • நுஐம் பின் அப்துல்லாஹ் அல்முஜ்மிர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஃபுலைஹ் பின் ஸுலைமான் அவர்கள், நுஐம் அவர்கள் ஹதீஸை அறிவித்த பின் கூறிய தகவலை குறிப்பிட்டுள்ளார்.
  • ஃபுலைஹ் பின் ஸுலைமான் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று சில அறிஞர்கள் விமர்சித்திருந்தாலும் வேறு சிலர் இவரின் செய்திகளை ஆய்வு செய்து அதில் சரியானதை மட்டும் பதிவு செய்துள்ளனர். புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    ஆகியோர் இவரின் சில செய்திகளை பதிவு செய்துள்ளனர். இதனால் தான் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள் இவரின் நிலை பற்றி புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    ஆகியோர் தெளிவுபடுத்திவிட்டனர் என்று கூறியுள்ளார்.  தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவரை ஹஸன் தரம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இவர், நுஐம் அவர்கள் கூறிய தகவலை அறிவித்திருப்பதால் சிலர் இதை மறுக்கவும் செய்யலாம்.

வேறு சிலர் இவரின் தகவலுக்கு முக்கியத்துவம் தந்து இதில் நுஐம் சந்தேகமாக கூறியுள்ளார் என்பதாலும், இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களிடமிருந்து நுஐம் அல்லாதவர்கள் அறிவிக்கும் செய்திகளையும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்கள் அல்லாத மற்ற நபித்தோழர்கள் அறிவிக்கும் செய்திகளையும் ஆய்வு செய்யும் போது இந்த இரண்டாவது பகுதி இல்லை என்பதாலும் இது முத்ரஜ் என்று முடிவு செய்கின்றனர்.

முல்லா அலீ அவர்கள், تَبْلُغُ الْحِلْيَةُ مِنَ الْمُؤْمِنِ، حَيْثُ يَبْلُغُ الْوَضُوءُ என்ற இந்த வாசகத்தின் அடிப்படையில் கூறியிருந்தால் இதன் கருத்து மேற்கண்ட செய்தியின் இரண்டாவது பகுதியின் கருத்து அல்ல. இந்த வாசகத்தின் மூலம் உளூவின் உறுப்புகள் உளூ செய்வதால் பிரகாசமாக இருக்கும் என்று தான் புரிகிறது. உளூவின் உறுப்புகளை கூடுதலாக கழுவுங்கள் என்ற கருத்து இதில் இல்லை.


இந்தச் செய்தியை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தவர்கள் சிறிது வார்த்தைகளை மாற்றி அறிவித்துள்ளனர்…

1 . அபூஸுர்ஆ பின் அம்ர்

2 . நுஐம் பின் அப்துல்லாஹ் அல்முஜ்மிர்

3 . அபூஹாஸிம்.

இவ்வாறே அபூஹாஸிம் அவர்களின் மாணவரான அபூமாலிக்-ஸஃத் பின் தாரிக் அவர்களிடமிருந்து அறிவித்தவர்கள் சிறிது வார்த்தைகளை மாற்றி அறிவித்துள்ளனர்…

1 . கலஃப் பின் கலீஃபா.

2 . அப்துல்லாஹ் பின் இத்ரீஸ்.

3 . அலீ பின் முஸ்ஹிர்.

ஆய்வுக்காக: إثبات حديث: «من استطاع أن يطيل غرته؛ فليفعل .


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • நுஐம் பின் அப்துல்லாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-8413 , 9195 , 10778 , புகாரி-136 , முஸ்லிம்-415 , இப்னு ஹிப்பான்-1049 , அல்முஃஜமுல் அவ்ஸத்-9214 , குப்ரா பைஹகீ-,

  • உமாரா பின் ஃகஸிய்யா —> நுஐம் பின் அப்துல்லாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்லிம்-414 , ஷரஹ் மஆனில் ஆஸார்-216 , குப்ரா பைஹகீ-362 ,

  • லைஸ் பின் அபூஸுலைம் —> கஅப் அல்மதனீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-8741 , முஸ்னத் அபீ யஃலா-6410 ,

  • லைஸ் பின் அபூஸுலைம் —> தாவூஸ் பின் கைஸான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-1975 ,

 


2 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-284 .

3 . அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-607 .

4 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-2162 .


மேற்கண்ட செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் கீழ்கண்ட நபித்தோழர்கள் வழியாக வரும் செய்திகள் பலவீனமாக உள்ளன.

5 . அபூஸயீத்

6 . அபூஉமாமா

7 . முஆவியா

8 . அபூமாலிக்

9 . அபூதர்

10 . ஆயிஷா

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-5953 , முஸ்லிம்-420 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.