அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதரே! உங்களுடைய சமுதாயத்தாரில் நீங்கள் பார்த்திராத மக்களை (மறுமை நாளில்) எப்படி அறிந்துகொள்வீர்கள்?” என (நபி-ஸல்-அவர்களிடம்) வினவப்பட்டது.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அங்கத் தூய்மை (உளூ) செய்த உறுப்புகளில் உள்ள அடையாளங்களால் கறுப்பு, வெள்ளை கலந்த (பஞ்ச கல்யாணிக்) குதிரைகள் போன்று பிரகாசமாக அவர்கள் இருப்பார்கள். (அதை வைத்து அவர்களை அறிந்து கொள்வேன்)” என விடையளித்தார்கள்.
(இப்னுமாஜா: 284)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ،
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ تَرَ مِنْ أُمَّتِكَ؟ قَالَ: «غُرٌّ مُحَجَّلُونَ بُلْقٌ مِنْ آثَارِ الْوُضُوءِ»
قَالَ أَبُو الْحَسَنِ الْقَطَّانُ: حَدَّثَنَا أَبُو حَاتِمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، فَذَكَرَ مِثْلَهُ
Ibn-Majah-Tamil-280.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-284.
Ibn-Majah-Alamiah-280.
Ibn-Majah-JawamiulKalim-280.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20386-ஆஸிம் பின் பஹ்தலா சுமாரானவர். இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று சிலர் விமர்சித்திருந்தாலும் இவர் ஸிர்ரு பின் ஹுபைஷ் அவர்கள் வழியாக அறிவிப்பது சரியானது என்றே சில ஹதீஸ்ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்தச் செய்தியை இவர் தனித்து அறிவிக்கவில்லை என்பதால் இந்த அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரமாகும். கருத்து சரியானது என்பதால் இது ஸஹீஹுன் லிஃகைரிஹீ ஆகும்.
2 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-359 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-40 , அஹ்மத்-3820 , 4317 , 4329 , இப்னு மாஜா-284 , முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-,
மேலும் பார்க்க: புகாரி-136 .
சமீப விமர்சனங்கள்