…பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) ‘நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்’ என்றார்கள்…
அறிவிப்பவர்: நுஐம் அல்முஜ்மிர் (ரஹ்)
“எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்” என்ற வாக்கியம் நபி (ஸல்) அவர்களின் சொல்லா? அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்களின் சொல்லா? என்பதை நான் அறியவில்லை என்று நுஐம் அல்முஜ்மிர் அவர்கள் (சந்தேகமாகக்) கூறினார்.
(முஸ்னது அஹ்மத்: 8413)حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ
أَنَّهُ رَقِيَ إِلَى أَبِي هُرَيْرَةَ عَلَى ظَهْرِ الْمَسْجِدِ وَهُوَ يَتَوَضَّأُ، فَرَفَعَ فِي عَضُدَيْهِ، ثُمَّ أَقْبَلَ عَلَيَّ، فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ هُمُ الْغُرُّ الْمُحَجَّلُونَ مِنْ آثَارِ الْوُضُوءِ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ، فَلْيَفْعَلْ»
فَقَالَ نُعَيْمٌ: لَا أَدْرِي قَوْلُهُ: «مَنِ اسْتَطَاعَ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ» مِنْ قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ مِنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8413.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8212.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26521-ஃபுலைஹ் பின் ஸுலைமான் என்பவர் பற்றி சிலர் இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்றும்; சிலர் இவர் அதிகம் தவறிழைப்பவர் என்றும்; சிலர் இவர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/403, தக்ரீபுத் தஹ்தீப்-1/787)
இவரின் சில செய்திகளை (ஆய்வு செய்து) புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
இவரைப் பற்றி விமர்சனம் இருந்தாலும் வேறு சில ஆதாரங்களின் அடிப்படையில் “எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்” என்ற வாக்கியம் நபி (ஸல்) அவர்களின் சொல்லா? அல்லது அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களின் சொல்லா? என்பதை நான் அறியவில்லை என்று நுஐம் அல்முஜ்மிர் அவர்கள் (சந்தேகமாகக்) கூறினார் என்பது சரியாக இருக்க வாய்ப்புள்ளது
முழு விவரம் பார்க்க: புகாரி-136 .
சமீப விமர்சனங்கள்