தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-604

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

பாடம்:

ஒருவர் உளூச் செய்யும்போது அக்குள் பகுதிவரை கழுவுதல்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கோடைக் காலத்தில் உளூச் செய்யும் போது சில நேரம் அக்குள் பகுதிவரை (கைகளைக்) கழுவுவார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஃ (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 604)

فِي الرَّجُلُ يَتَبَلَّغُ بِالْوُضُوءِ إِبِطَهُ

حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْعُمَرِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ،

«أَنَّهُ كَانَ رُبَّمَا بَلَغَ بِالْوُضُوءِ إِبِطَهُ فِي الصَّيْفِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-604.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-589.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25179-அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் என்பவர் பற்றி சிலர் பலமானவர் என்றும்; சிலர் சுமாரானவர் என்றும்; சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.

العلل الكبير للترمذي = ترتيب علل الترمذي الكبير (ص: 389)
قَالَ مُحَمَّدٌ: عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْعُمَرِيُّ ذَاهِبٌ لَا أَرْوِي عَنْهُ شَيْئًا.

  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவரை தாஹிபுல் ஹதீஸ்-மிகப் பலவீனமானவர்; இவரிடமிருந்து நான் எதையும் அறிவிக்கமாட்டேன் என்று கூறியதாக திர்மிதீ இமாம் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: இலலுத் திர்மிதீ, பக்கம்: 389, தஹ்தீபுத் தஹ்தீப்-2/388, தக்ரீபுத் தஹ்தீப்-1/528)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

2 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-604 , அத்தஹூர்-அபூஉபைத்-காஸிம் பின் ஸல்லாம்-24 ,


  • அத்தஹூர்-அபூஉபைத்-காஸிம் பின் ஸல்லாம்-24.

الطهور للقاسم بن سلام (ص: 116)
24 – حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: أَخْبَرَنَا أَبُو عُبَيْدٍ ثنا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، عَنِ اللَّيْثِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَتَوَضَّأُ فِي الصَّيْفِ فَرُبَّمَا بَلَغَ فِي الْوُضُوءِ إِبْطَيْهِ

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41097-முஹம்மது பின் அஜ்லான் அவர்கள், நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் குளறுபடி உள்ளது என்று யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    கூறியுள்ளார். இதை உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.
  • இவர், ஸயீத் அல்மக்புரீ அவர்களிடமிருந்து அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) வழியாக அறிவிக்கும் சில செய்திகளிலும் விமர்சனம் உள்ளது.
  • இவ்விரண்டு அறிவிப்பாளர்தொடர்களைத் தவிர மற்றவை சரியானது என்பதே ஹதீஸ்ஆய்வாளர்களின் முடிவாகும்.

(நூல்: அஸ்ஸிகாத்-7/386, அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/49, தஹ்தீபுல் கமால்-26/101, தஹ்தீபுத் தஹ்தீப்-3/646, தக்ரீபுத் தஹ்தீப்-1/877, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/456, தஃரீஃபு அஹ்லித் தக்தீஸ்-1/149, ஸியரு அஃலாமின் நுபலாஃ-6/317)

மேற்கண்ட செய்தியை நஃபிஃ அவர்களிடமிருந்து இவர் அறிவிப்பதால் இது பலவீனமாகும்.


மேலும் பார்க்க: முஸ்லிம்-420 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.