தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5953

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல்தளத்தில் உருவப்படங்களை வரைபவர் ஒருவர் உருவங்களை வரைந்துகொண்டிருந்தார். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்க முடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்” என்றார்கள்.

பிறகு (அங்கத் தூய்மை செய்வதற்காகத்) தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி தம் இரு கைகளையும் அக்குள்வரை கழுவினார்கள்.

நான், ‘‘அபூஹுரைரா அவர்களே! இது (அக்குள்வரை கையைக் கழுவுவது), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற விஷயமா?” எனக் கேட்க, அவர்கள், ‘‘(அங்கத் தூய்மை செய்யப்படும் உடலுறுப்புகள் மறுமையில் வெண்மையாகும்போது அக்குள்வரை) வெண்மை பரவும்” (என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்) என்றார்கள்.

அத்தியாயம்: 77

(புகாரி: 5953)

حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا عُمَارَةُ، حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، قَالَ:

دَخَلْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ، دَارًا بِالْمَدِينَةِ، فَرَأَى أَعْلاَهَا مُصَوِّرًا يُصَوِّرُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ يَخْلُقُ كَخَلْقِي، فَلْيَخْلُقُوا حَبَّةً، وَلْيَخْلُقُوا ذَرَّةً»

ثُمَّ دَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَغَسَلَ يَدَيْهِ حَتَّى بَلَغَ إِبْطَهُ، فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، أَشَيْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: مُنْتَهَى الحِلْيَةِ


Bukhari-Tamil-5953.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5953.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • இந்தச் செய்தியை அறிவிக்கும் சிலர் மேற்கண்டது போல் இரு பகுதியையும் அறிவித்துள்ளனர். சிலர் ஒரு பகுதியை மட்டும் அறிவித்துள்ளனர்.

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஸுர்ஆ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

முதல் பகுதி மட்டும் வந்துள்ள செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-606 , 607 , 25211 ,  அஹ்மத்-9082 , புகாரி-7559 , முஸ்லிம்-4292 , முஸ்னத் பஸ்ஸார்-9780 , முஸ்னத் அபீ யஃலா-6101 , 6621 , ஷரஹ் மஆனில் ஆஸார்-6925 , இப்னு ஹிப்பான்-5859 , குப்ரா பைஹகீ-14568 ,


இரண்டாம் பகுதி மட்டும் வந்துள்ள செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-606 ,

இரு பகுதிகளும் வந்துள்ள செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-7166 , புகாரி-5953 , முஸ்னத் அபீ யஃலா-6086 ,


  • அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

முதல் பகுதி மட்டும் வந்துள்ள செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-7521 , 9077 , 9824 , 10819 , முஸ்னத் பஸ்ஸார்-7968 ,


2 . இப்ராஹீம் அன்னகஈ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-605 .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-136 , முஸ்லிம்-420 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.