தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-6899

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நாங்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருந்த போது மதீனாவில் (பெரும்) சப்தத்தைக் கேட்டோம். ‘இது என்ன சப்தம்?’ என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். ‘இது அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் ஒட்டங்களின் சப்தம், அனைத்து விதமான பொருட்களையும் ஏற்றிக் கொண்டு வந்துள்ளது’ என்று சொன்னார்கள். அவர்களுக்கு (அப்போது) எழுநூறு ஒட்டகங்கள் இருந்தன. அவற்றின் சப்தத்தால் மதீனா அதிர்ந்தது.

அப்போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், “நான் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்களை சொர்க்கத்தில் தவழ்ந்து செல்வதைப் பார்த்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்கள்.

இந்த செய்தி அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு எட்டிய போது, ‘நான் நின்றவாறு சொர்க்கத்தில் செல்வேன்’ என்று சொல்லிவிட்டு ஒட்டகச் சேணங்களையும் அவை சுமந்து வந்த பொருட்களையும் அல்லாஹ்வின் பாதையில் வழங்கிவிட்டார்கள்….

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(bazzar-6899: 6899)

حَدَّثنا بِشْر بن آدم، حَدَّثنا عبد الله بن رجاء، حَدَّثنا عُمَارَةُ بْنُ زَاذَانَ، عَنْ ثابتٍ، عَن أَنَسٍ، قال:

جاءت سبع مِئَة بَعِيرٍ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَلَيْهَا مِنْ كُلِّ شَيْءٍ فَتَعَجَّبَ أَهْلُ الْمَدِينَةِ فَقَالَتْ عَائِشَةُ: مَا هَذَا؟ قَالُوا: عِيرٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ تَحْمِلُ كُلَّ شَيْءٍ فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم يَقُولُ: قَدْ رَأَيْتُ عَبْدَ الرَّحْمَنِ وَإِنَّهُ يَدْخُلُ الْجَنَّةِ حَبْوًا. فبلغه ذلك فقال ياعائشة: مَا حَدِيثٌ بَلَغَنِي؟ فَذَكَرَتْهُ لَهُ فَقَالَ: فَإِنِّي أُشْهِدُكِ أَنَّهَا بِأَقْتَابِهَا وَأَحْلَاسِهَا وَأَحْمَالِهَا فِي سَبِيلِ اللَّهِ.

وَهَذَا الْحَدِيثُ لَا أَعْلَمُ رَوَاهُ إلاَّ عُمَارَةُ، عَنْ ثابتٍ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-6899.
Bazzar-Shamila-6899.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2404.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி உமாரா பின் ஸாதான் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-24842 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.