Month: February 2022

Muwatta-Malik-399

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

399. பயணத்தை விரும்புவர் தன் ஊரில் (எல்கையில் உள்ள) வீட்டைக் கடக்கும் வரை தொழுகையை ‘கஸ்ர்” செய்யவும் கூடாது. (இது போல்) தன் ஊரின் (எல்லையில் உள்ள) வீட்டில் ஒன்றைத் தூண்டவோ அல்லது நெருங்கவோ செய்யும் வரை பூர்த்தி செய்யவும் கூடாது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: لاَ يَقْصُرُ الَّذِي يُرِيدُ السَّفَرَ الصَّلاَةَ، حَتَّى يَخْرُجَ مِنْ بُيُوتِ الْقَرْيَةِ، وَلاَ يُتِمُّ حَتَّى يَدْخُلَ أَوَّلَ بُيُوتِ الْقَرْيَةِ أَوْ يُقَارِبَ ذَلِكَ.


Muwatta-Malik-403

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

403. கைதியின் தொழுகை பற்றி மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவன், ஊரில் தங்கி உள்ளவன் போலாவான். எனினும் அவன் பயணியாக இருந்தால் தவிர என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن صَلاَةِ الأَسِيرِ؟ فَقَالَ: مِثْلُ صَلاَةِ الْمُقِيمِ، إِلاَّ أَنْ يَكُونَ مُسَافِرًا.


Muwatta-Malik-410

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

410. பயணத்தில் நபில் தொழுவது பற்றிக் கேட்கப்பட்ட போது, இரவானாலும், பகலானாலும் அதனால் குற்றமில்லை. சில அறிஞர்கள் அப்படித் தொழுதுள்ளார்கள் என எனக்கு செய்தி கிட்டியது என மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள் என்று யஹ்யா கூறுகின்றார்கள்.


وَسُئِلَ مالكٌ عَنِ النَّافِلَةِ فِي السَّفَرِ، فَقَالَ: لاَ بَأْسَ بِذَلِكَ، بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَقَدْ بَلَغَنِي أَنَّ بَعْضَ أَهْلِ الْعِلْمِ كَانَ يَفْعَلُ ذَلِكَ.


Muwatta-Malik-496

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

496. பெருநாள் அன்று மக்கள் தொழுது முடித்திருப்பதைக் காணும் ஒருவர் (தணித்து) வீட்டிலோ, தொழுமிடத்திலோ தொழ வேண்டியதில்லை. அப்படியே ஒருவர் வீட்டிலோ, தொழுமிடத்திலோ தொழுது விட்டால் அதை நான் குற்றமாகக் கருதவில்லை. முதல் ரக்அத்தில் கிராஅத் ஓதும் முன் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்திலும் ஓதும் முன் 5 தக்பீர்களும் (அதிகபட்சமாக) கூற வேண்டும் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ فِي رَجُلٍ وَجَدَ النَّاسَ قَدِ انْصَرَفُوا مِنَ الصَّلاَةِ يَوْمَ الْعِيدِ: إِنَّهُ لاَ يَرَى عَلَيْهِ صَلاَةً فِي الْمُصَلَّى، وَلاَ فِي بَيْتِهِ، وَإِنَّهُ إِنْ صَلَّى فِي الْمُصَلَّى، أَوْ فِي بَيْتِهِ، لَمْ أَرَ بِذَلِكَ بَأْسًا، وَيُكَبِّرُ سَبْعًا فِي الأَُولَى قَبْلَ الْقِرَاءَةِ، وَخَمْسًا فِي الثَّانِيَةِ قَبْلَ الْقِرَاءَةِ.


Muwatta-Malik-502

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

502. இமாமுடன் தொழும் ஒருவர், குத்பாவை கேட்கும் முன் வீடு திரும்பலாமா? என கேட்கப்பட்டதற்கு, ‘இமாம் திரும்பும்வரை திரும்பக் கூடாது’ என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


سُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ صَلَّى مَعَ الإِمَامِ يَوْمَ الْفِطْرِ، هَلْ لَهُ أَنْ يَنْصَرِفَ قَبْلَ أَنْ يَسْمَعَ الْخُطْبَةَ؟ فَقَالَ: لاَ يَنْصَرِفُ حَتَّى يَنْصَرِفَ الإِمَامُ.


Muwatta-Malik-512

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

512. மழைத்தொழுகை (முறை பற்றி) எத்தனை ரக்அத்? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘இரண்டு ரக்அத்’ ஆகும் என்றும் குத்பாவுக்கு முன்பே தொழுகையை இமாம் ஆரம்பித்து இரண்டு ரக்அத் தொழ வைப்பார்கள். பின்பு நின்றவராக உரை (குத்பா) நிகழ்த்துவார். கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வார். இரண்டு ரக்அத்திலும் சப்தமிட்டு ‘கிராஅத்’ ஓதுவார். வலது புறப்பகுதியை இடப்புறத்திலும், இடப்புறத்தில் உள்ளதை வலது புறத்திலுமாக மேலாடையை போடுவதையே இமாம் மேலாடையை புரட்டிப் போட்டுக் கொள்வதாகும். இமாம் மேலாடையைப் புரட்டிப் போட்டுக் கொண்டதும் மக்களும் தங்கள் மேலாடையை புரட்டிப் போட்டுக் கொள்தல் வேண்டும். அவர்களும் உட்கார்ந்தவர்களாக கிப்லாவை முன்னோக்கி இருப்பார்கள் என மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن صَلاَةِ الاِسْتِسْقَاءِ كَمْ هِيَ؟ فَقَالَ: رَكْعَتَانِ، وَلَكِنْ يَبْدَأُ الإِمَامُ بِالصَّلاَةِ قَبْلَ الْخُطْبَةِ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ يَخْطُبُ قَائِمًا وَيَدْعُو، وَيَسْتَقْبِلُ الْقِبْلَةَ، وَيُحَوِّلُ رِدَاءَهُ حِينَ يَسْتَقْبِلُ الْقِبْلَةَ، وَيَجْهَرُ فِي الرَّكْعَتَيْنِ بِالْقِرَاءَةِ، وَإِذَا حَوَّلَ رِدَاءَهُ جَعَلَ الَّذِي عَلَى يَمِينِهِ عَلَى شِمَالِهِ، وَالَّذِي عَلَى شِمَالِهِ عَلَى يَمِينِهِ، وَيُحَوِّلُ النَّاسُ أَرْدِيَتَهُمْ، إِذَا حَوَّلَ الإِمَامُ رِدَاءَهُ، وَيَسْتَقْبِلُونَ الْقِبْلَةَ، وَهُمْ قُعُودٌ.


Muwatta-Malik-515

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

515. மழைத் தொழுகையை தவறவிட்டவர், குத்பாவின் போது வருகிறார். இவர் பள்ளியில், திரும்பி வந்து வீட்டில் தொழலாமா? என்று கேட்ட போது, இது விஷயத்தில் அவர் இஷ்டம் தான். விரும்பினால் செய்வார். அல்லது விட்டு விடுவார் என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


قَالَ مَالِكٌ: فِي رَجُلٍ فَاتَتْهُ صَلاَةُ الاِسْتِسْقَاءِ وَأَدْرَكَ الْخُطْبَةَ، فَأَرَادَ أَنْ يُصَلِّيَهَا فِي الْمَسْجِدِ أَوْ فِي بَيْتِهِ إِذَا رَجَعَ؟ قَالَ مَالِكٌ: هُوَ مِنْ ذَلِكَ فِي سَعَةٍ، إِنْ شَاءَ فَعَلَ أَوْ تَرَكَ.


Muwatta-Malik-521

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 130

மலஜலம் கழிக்க கிப்லாவை முன்னோக்கிட அனுமதி

521. (மலம் கழிக்க) உன் தேவைக்காக உட்கார்ந்தால் கிப்லாவையும், பைத்துல் முகத்தஸையும் முன்னோக்க வேண்டாம் என சிலர் கூறுகின்றார்கள். (ஆனால்) நான் எங்கள் வீட்டு மேற்கூரை மீது ஏறினேன். அதுசமயம் நபி(ஸல்) அவர்கள் கட்டிடத்தில் மலம் கழிக்கும் போது பைத்துல் முகத்திஸை முன்னோக்கி இருப்பதைப் பார்த்தேன் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: மதீனாவில் இருந்து பைத்துல் முகத்திஸை முன்னோக்கினால் கஃபா முதுகுக்குப் பின்புறமாக அமையும் என்பதை நினைவில் கொள்க!) இது புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா வில் இடம் பெற்றுள்ளது).


إِنَّ نَاسًا يَقُولُونَ: إِذَا قَعَدْتَ عَلَى حَاجَتِكَ، فَلاَ تَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلاَ بَيْتَ الْمَقْدِسِ.

قَالَ عَبْدُ اللهِ: لَقَدِ ارْتَقَيْتُ عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا، فَرَأَيْتُ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ عَلَى لَبِنَتَيْنِ، مُسْتَقْبِلاً بَيْتِ الْمَقْدِسِ لِحَاجَتِهِ، ثُمَّ قَالَ: لَعَلَّكَ مِنِ الَّذِينَ يُصَلُّونَ عَلَى أَوْرَاكِهِمْ؟ قَالَ: فَقُلْتُ: لاَ أَدْرِي وَاللَّهِ.

قَالَ مَالِكٌ: يَعْنِي الَّذِي يَسْجُدُ وَلاَ يَرْتَفِعُ عَنِ الأَرْضِ، يَسْجُدُ وَهُوَ لاَصِقٌ بِالأَرْضِ.


Muwatta-Malik-535

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

535. குர்ஆன், ஒரு மரப்பலகையிலோ, ஒரு தலையணையிலோ வைத்து சுத்தமான ஒரு நபரைத் தவிர வேறுயாரும் சுமக்கக் கூடாது. இது சரி என்றால், அவரின் சுத்தமின்மை நிலையிலே அது சுமக்கப்பட்டதாக ஆகிவிடும். குர்ஆனை அசுத்தமாக்கும் ஏதேனும் அதை சுமக்கும் ஒருவரின் கையில் உள்ளது என்பதற்காக இது வெறுக்கப்படவில்லை. எனினும் குர்ஆனின் கண்ணியம், அதன் கவுரவம் ஆகியவற்றை பேணுவதற்காகவே சுத்தமில்லாதவன் அதை சுமப்பது வெறுக்கப்படுகிறது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: وَلاَ يَحْمِلُ أَحَدٌ الْمُصْحَفَ بِعِلاَقَتِهِ، وَلاَ عَلَى وِسَادَةٍ، إِلاَّ وَهُوَ طَاهِرٌ، وَلَوْ جَازَ ذَلِكَ لَحُمِلَ فِي خَبِيئَتِهِ، وَلَمْ يُكْرَهْ ذَلِكَ، لأَنْ يَكُونَ فِي يَدَيِ الَّذِي يَحْمِلُهُ شَيْءٌ يُدَنِّسُ بِهِ الْمُصْحَفَ، وَلَكِنْ إِنَّمَا كُرِهَ ذَلِكَ لِمَنْ يَحْمِلُهُ وَهُوَ غَيْرُ طَاهِرٍ، إِكْرَامًا لِلْقُرْآنِ وَتَعْظِيمًا لَهُ.


Muwatta-Malik-536

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

536. சுத்தமானவர்களே தவிர அதை தொட மாட்டார்கள் என்ற வசனத்தின் விஷயமாக நான் கேள்விப்பட்டதில் மிக அழகானது, இந்த வசனம் அபஸா வதவல்லா என்ற 80வது அத்தியாயத்தில் உள்ள வசனத்தின் அந்தஸ்தில் உள்ளதாகும்.

அந்த அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுவது:-

அவ்வாறல்ல! ஏனெனில் (இக்குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும். எனவே, எவர் விரும்புகிறாரோ அவர்அதை நினைவு கொள்வார். (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது. உயர்வாக்கப்பட்டது. பாரிசுத்தமாக்கப்பட்டது. (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால், (லவ்ஹுல் மஹ்ஃபூழ் லிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கைமிக்கவர்கள், நல்லவர்களாவார்கள். (அல்குர்ஆன் 80:12-16).

இவ்வாறு மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


قَالَ مَالِكٌ: أَحْسَنُ مَا سَمِعْتُ فِي هَذِهِ الآيَةِ: {لاَ يَمَسُّهُ إِلاَّ الْمُطَهَّرُونَ} إِنَّمَا هِيَ بِمَنْزِلَةِ هَذِهِ الآيَةِ، الَّتِي فِي: {عَبَسَ وَتَوَلَّى}، قَوْلُ اللهِ تَبَارَكَ وَتَعَالَى: {كَلاَّ إِنَّهَا تَذْكِرَةٌ فَمَنْ شَاءَ ذَكَرَهُ فِي صُحُفٍ مُكَرَّمَةٍ مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ بِأَيْدِي سَفَرَةٍ كِرَامٍ بَرَرَةٍ}.


Next Page »