Month: October 2020

Ibn-Majah-3532

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3532. உம்மு ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாள் (ஹஜ்ஜுப் பெருநாள்) அன்று பத்னுல் வாதியிலிருந்து ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்தை நான் பார்த்தேன். பிறகு திரும்பிச் சென்றார்கள். ஹஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் நபியவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருடன் அவருடைய குழந்தையும் இருந்தது.

அந்தக் குழந்தைக்கு யாருடனும் பேசமுடியாத நோய் இருந்தது. அந்தப் பெண் “அல்லாஹ்வின் தூதரே இவன் என்னுடைய மகன். என்னுடைய குடும்பத்தில் எஞ்சியிருப்பவன். இவனுக்கு (யாருடனும்) பேசமுடியாத நோய் உள்ளது” என்று கூறினார். நபியவர்கள் “என்னிடத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

தன்னுடைய இரண்டு கைகளையும் கழுவி வாய் கொப்பளித்து பிறகு (அதனை) அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்கள். “இதிலிருந்து அவனுக்கு நீ புகட்டு. இதிலிருந்து அவன் மீது ஊற்று, அவனுக்காக அல்லாஹ்விடம் நிவாரணம் தேடு” என்று கூறினார்கள்.

உம்மு ஜுன்துப் (ரலி) கூறுகிறார்: அந்தப் பெண்ணை (பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில்) நான் சந்தித்தேன். அந்தத் தண்ணீரில் இருந்து எனக்குக் கொஞ்சம் தந்தால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர் “அது இந்த நோயாளிக்கு மட்டும்தான்” என்று கூறினார். மேலும்

رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ، مِنْ بَطْنِ الْوَادِي يَوْمَ النَّحْرِ، ثُمَّ انْصَرَفَ وَتَبِعَتْهُ امْرَأَةٌ مِنْ خَثْعَمٍ، وَمَعَهَا صَبِيٌّ لَهَا بِهِ بَلَاءٌ لَا يَتَكَلَّمُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذَا ابْنِي وَبَقِيَّةُ أَهْلِي، وَإِنَّ بِهِ بَلَاءً لَا يَتَكَلَّمُ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْتُونِي بِشَيْءٍ مِنْ مَاءٍ» ، فَأُتِيَ بِمَاءٍ فَغَسَلَ يَدَيْهِ وَمَضْمَضَ فَاهُ ثُمَّ أَعْطَاهَا، فَقَالَ: «اسْقِيهِ مِنْهُ، وَصُبِّي عَلَيْهِ مِنْهُ، وَاسْتَشْفِي اللَّهَ لَهُ» . قَالَتْ: فَلَقِيتُ الْمَرْأَةَ فَقُلْتُ: لَوْ وَهَبْتِ لِي مِنْهُ، فَقَالَتْ: إِنَّمَا هُوَ لِهَذَا الْمُبْتَلَى، قَالَتْ: فَلَقِيتُ الْمَرْأَةَ مِنَ الْحَوْلِ فَسَأَلْتُهَا عَنِ الْغُلَامِ، فَقَالَتْ: بَرَأَ وَعَقَلَ عَقْلًا لَيْسَ كَعُقُولِ النَّاسِ


Musnad-Ahmad-2137

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2137. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் தன்னுடைய மரணத்தை நெருங்காத ஒரு நோயாளியை நலம் விசாரிக்கும் போது ஏழு தடவை

அஸ்அலுல்லாஹல் அளீம் ரப்பல் அர்ஷில் அளீம் அய் யஷ்ஃபியக”

(உனக்கு ஆரோக்கியம் அளிக்க வேண்டும் என்று மகத்துவமிக்கவனும், மகத்தான அர்ஷின் இரட்சகனுமான அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்) என்று கூறினால் (கண்டிப்பாக) அவர் ஆரோக்கியம் வழங்கப்படுவார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


 مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَعُودُ مَرِيضًا لَمْ يَحْضُرْ أَجَلُهُ، فَيَقُولُ سَبْعَ مَرَّاتٍ: أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ، رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ، إِلا عُوفِيَ


Shuabul-Iman-8386

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8386. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அனஸே! நீ உன்னுடைய வீட்டில் நுழையும் போது உன்னுடைய குடும்பத்தாருக்கு ஸலாம் சொல்லிக் கொள். அதனால் உன்னுடைய வீட்டில் நன்மை அதிகமாகும்.

நீ அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது முழுமையாக செய். அதனால் உனது ஆயுள் அதிகமாகும்.

மக்களை சந்திக்கும்போது ஸலாம் கூறிக் கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும்.

இரவில் உளூவுடனே இரு. அப்போது தான் பாதுகாக்கும் வானவர்கள் உன்னை தூய்மையாகக் காண்பார்கள்.

இரவிலும், பகலிலும் தொழு. லுஹா தொழுகை தொழுதுக் கொள். அது முன்சென்ற நல்லோர்களின் தொழுகையாகும்.

பெரியோர்களை மதித்து நடந்துக் கொள். (உன்னை விட வயதில் குறைந்த) சிறியோர் மீது அன்பு செலுத்து.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


يَا أَنَسُ، إِذَا دَخَلْتَ بَيْتَكَ فَسَلِّمْ عَلَى أَهْلِكَ يَكْثُرْ خَيْرُ بَيْتِكَ، وَإِذَا تَوَضَّأْتَ فَأَسْبِغْ وُضُوءَكَ يَطُلْ عُمُرُكَ، وَمَنْ لَقِيتَ مِنْ أُمَّتِي فَسَلِّمْ عَلَيْهِمْ تَكْثُرْ حَسَنَاتُكَ، وَلَا تَبِيتَنَّ إِلَّا عَلَى وَضُوءٍ تَرَاكَ الْحَفَظَةُ وَأَنْتَ طَاهِرٌ، وَصَلِّ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَصَلِّ الضُّحَى فَإِنَّهَا صَلَاةُ الْأَوَّابِينَ، وَوَقِّرِ الْكَبِيرَ، وَارْحَمِ الصَّغِيرَ “


Tirmidhi-2698

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2698. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் எனக்கு கூறினார்கள்: ”என்னுடைய அருமை மகனே! நீ உன்னுடைய வீட்டாரிடத்தில் நுழையும் போது ஸலாம் சொல்லிக்கொள். அது உனக்கும் உன்னுடைய குடும்பத்தாருக்கும் பரகத்தாக அமையும்.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بُنَيَّ إِذَا دَخَلْتَ عَلَى أَهْلِكَ فَسَلِّمْ يَكُونُ بَرَكَةً عَلَيْكَ وَعَلَى أَهْلِ بَيْتِكَ»


Abu-Dawood-5195

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5195. இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

”நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ”அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று கூறினார். நபியவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ”(இவருக்கு) இருபது (நன்மைகள்)” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் ”(இவருக்கு) முப்பது (நன்மைகள்)” என்று கூறினார்கள்.”


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فَرَدَّ عَلَيْهِ السَّلَامَ، ثُمَّ جَلَسَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَشْرٌ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، فَرَدَّ عَلَيْهِ، فَجَلَسَ، فَقَالَ: «عِشْرُونَ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، فَرَدَّ عَلَيْهِ، فَجَلَسَ، فَقَالَ: «ثَلَاثُونَ»


Abu-Dawood-5197

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5197. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நெருக்கத்திற்குரியவர் அவர்களில் முதலில் ஸலாம் கூறுபவரே ஆவார்”

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)


«إِنَّ أَوْلَى النَّاسِ بِاللَّهِ مَنْ بَدَأَهُمْ بِالسَّلَامِ»


Abu-Dawood-5200

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஒருவருக்கு ஸலாம் கூறிய மனிதர், அவரை விட்டு சற்று பிரிந்த பின் மீண்டும் சந்தித்தால் ஸலாம் கூற வேண்டுமா?

5200. உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ, அல்லது சுவரோ, அல்லது கல்லோ குறிக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தால் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا لَقِيَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإِنْ حَالَتْ بَيْنَهُمَا شَجَرَةٌ أَوْ جِدَارٌ، أَوْ حَجَرٌ ثُمَّ لَقِيَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ أَيْضًا»


Abu-Dawood-3251

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3251. ஸஃத் பின் உபைதா (ரஹ்) கூறுகிறார்:

ஒரு மனிதர் கஃபாவின் மீது சத்தியமாக என்று கூறுவதை கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள், யார் அல்லாஹ் அல்லாதவரின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணைகற்பித்து விட்டார் என்று கூறியதாக (அவருக்கு) விளக்கம் கூறினார்…


قَالَ: سَمِعَ ابْنُ عُمَرَ، رَجُلًا يَحْلِفُ: لَا وَالْكَعْبَةِ، فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ»


முழ்தரிப்

முழ்தரிப் இறுதியாக ஹதீஸ்கலையில் “முழ்தரிப்” என்று ஒரு வகை உண்டு. முழ்தரிப் என்றால், ஒரு செய்தி முரண்பாடாக பல வழிகளில் அறிவிக்கப்படும். ஆனால், அந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் ஷாத் என்ற வகையில் கூறியது போன்று எந்த காரணமும் கூறி அதில் ஒரு அறிவிப்பை மற்ற அறிவிப்புகளை விட உயர்த்தவோ தாழ்த்தவோ முடியாதவாறு முரண்படும். அதாவது, அந்த அறிவிப்புகள் பலத்திலும் சமமானதாக இருக்கும். அல்லது, ஒரு குறிப்பிட்ட அறிவிப்பாளர் ஒரே செய்தியை...

முஸஹ்ஹஃப்

முஸஹ்ஹஃப் நம்பகமான அறிவிப்பாளர், தான் அறிவிக்கும் ஒரு ஹதீஸின் வார்த்தையையோ அல்லது கருத்தையோ அவர் அறிவிக்காத விதத்தில் மாற்றி அறிவிப்பதை ஹதீஸ் கலையில் “முஸஹ்ஹஃப்” என்று சொல்வார்கள். முஸஹ்ஹஃபிற்கு உதாரணம் 18761 – حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى إِلَى عَنَزَةٍ أَوْ شَبَهِهَا، وَالطَّرِيقُ مِنْ...
Next Page »