தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-8386

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அனஸே! நீ உன்னுடைய வீட்டில் நுழையும் போது உன்னுடைய குடும்பத்தாருக்கு ஸலாம் சொல்லிக் கொள். அதனால் உன்னுடைய வீட்டில் நன்மை அதிகமாகும்.

நீ அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது முழுமையாக செய். அதனால் உனது ஆயுள் அதிகமாகும்.

மக்களை சந்திக்கும்போது ஸலாம் கூறிக் கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும்.

இரவில் உளூவுடனே இரு. அப்போது தான் பாதுகாக்கும் வானவர்கள் உன்னை தூய்மையாகக் காண்பார்கள்.

இரவிலும், பகலிலும் தொழு. லுஹா தொழுகை தொழுதுக் கொள். அது முன்சென்ற நல்லோர்களின் தொழுகையாகும்.

பெரியோர்களை மதித்து நடந்துக் கொள். (உன்னை விட வயதில் குறைந்த) சிறியோர் மீது அன்பு செலுத்து.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(shuabul-iman-8386: 8386)

وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، قَالَ: أنا أَحْمَدُ بْنُ كَامِلٍ الْقَاضِي، نا أَبُو قِلَابَةَ، قَالَ: نا أَبِي، قَالَ: نا عَلِيُّ بْنُ جَعْدٍ الطَّائِفِيُّ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

يَا أَنَسُ، إِذَا دَخَلْتَ بَيْتَكَ فَسَلِّمْ عَلَى أَهْلِكَ يَكْثُرْ خَيْرُ بَيْتِكَ، وَإِذَا تَوَضَّأْتَ فَأَسْبِغْ وُضُوءَكَ يَطُلْ عُمُرُكَ، وَمَنْ لَقِيتَ مِنْ أُمَّتِي فَسَلِّمْ عَلَيْهِمْ تَكْثُرْ حَسَنَاتُكَ، وَلَا تَبِيتَنَّ إِلَّا عَلَى وَضُوءٍ تَرَاكَ الْحَفَظَةُ وَأَنْتَ طَاهِرٌ، وَصَلِّ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَصَلِّ الضُّحَى فَإِنَّهَا صَلَاةُ الْأَوَّابِينَ، وَوَقِّرِ الْكَبِيرَ، وَارْحَمِ الصَّغِيرَ “

قَالَ أَبُو عَبْدِ اللهِ: يُقَالُ: تَفَرَّدَ بِهِ أَبُو قِلَابَةَ، قُلْتُ: وَإِنَّمَا يُعْرَفُ مِنْ حَدِيثِ سَعِيدِ بْنِ زَوْنٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-8386.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-8230.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும்   علي بن الجنيد الطائفي அலி பின் ஜஃத் – ஜனத் – ஜுன்த் – ஜுனத் – தாயிஃபீ  (ஜுனைத் என்பதே சரி) பற்றி புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவர் நிராகரிக்கப்பட்டவர் என்றும், அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் இவரின் செய்திகள் பொய்யானவை என்றும் விமர்சித்துள்ளனர்.

(நூல்: லிஸானுல் மீஸான் 5/508)

وقال البخاري : منكر الحديث
لسان الميزان: (5 / 508)

மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-3624 .

1 comment on Shuabul-Iman-8386

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.