Month: August 2023

முஸ்லிம் நூலின் முன்னுரை

بسم الله الرحمن الرحيم பாடம்: 1 நம்பத்தகுந்த அறிவிப்பாளர்களிடமிருந்தே ஹதீஸ்களை அறிவிப்பதும், பொய்யர்களின் அறிவிப்புகளைக் கைவிடுவதும் கட்டாயமாகும் என்பது பற்றியும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது (அவர்கள் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப்) பொய்யுரைப்பது தொடர்பாக வந்துள்ள எச்சரிக்கையும். அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக! ஆதாரபூர்வமான அறிவிப்புகள் எவை, பலவீனமான அறிவிப்புகள் எவை, நம்பத்தகுந்த அறிவிப்பாளர் யார், சந்தேகத்திற்குள்ளான அறிவிப்பாளர் யார் எனப் பகுத்தறியும் திறன் யாருக்கு இருக்கிறதோ...

Musannaf-Ibn-Abi-Shaybah-25611

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25611.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –

“முனாபிஃக்கை நீங்கள் மூன்று வழிகளில் அறியலாம், அவன் பேசினால் பொய் பேசுவான், அவன் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற மாட்டான், அவனை நம்மினால் மோசம் செய்வான், மேலும் அவர்கள் (பின்வரும்) இந்த ஆயத்தை ஓதுங்கள், என்று கூறினார்கள்.

وَمِنْهُمْ مَّنْ عَاهَدَ اللّٰهَ لَٮِٕنْ اٰتٰٮنَا مِنْ فَضْلِهٖ لَـنَصَّدَّقَنَّ وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِيْنَ‏

அவர்களில் சிலர், ‘அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்’ என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.

(அல்-குர்ஆன் 9:75)

فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِىْ قُلُوْبِهِمْ اِلٰى يَوْمِ يَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا يَكْذِبُوْنَ‏

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்¢ அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.

(அல்-குர்ஆன் 9:77)


اعْتَبِرُوا الْمُنَافِقَ بِثَلَاثٍ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ “: قَالَ: وَتَلَا هَذِهِ الْآيَةَ: {وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ} [التوبة: 75] إِلَى قَوْلِهِ: {نِفَاقًا فِي قُلُوبِهِمْ} [التوبة: 77] إِلَى قَوْلِهِ: {بِمَا كَانُوا يَكْذِبُونَ} [التوبة: 77]


Musnad-Ahmad-9836

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

9836.

யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அது பொய் பேசியதாக கணக்கிடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


مَنْ قَالَ لِصَبِيٍّ: تَعَالَ هَاكَ، ثُمَّ لَمْ يُعْطِهِ فَهِيَ كَذْبَةٌ


Tirmidhi-652

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஸகாத் பொருளை பெற யாருக்கு அனுமதியில்லை?

652. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செல்வந்தனுக்கும், தெளிவான அறிவுள்ள; ஊனமில்லாத திடகாத்திரமானவனுக்கும் ஸகாத்தைப் பெற அனுமதியில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ، وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ»


Musnad-Ahmad-12301

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12301.

…அல்லாஹ்வின் கட்டளைப்படி அதை மூட வேண்டியது மூடியதும் அது சிவப்பு மாணிக்கங்களாக அல்லது பச்சை மரகதங்களாக அல்லது அவற்றைப் போன்றதாக அது மாறி விட்டது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«انْتَهَيْتُ إِلَى السِّدْرَةِ، فَإِذَا نَبْقُهَا مِثْلُ الْجِرَارِ، وَإِذَا وَرَقُهَا مِثْلُ آذَانِ الْفِيَلَةِ، فَلَمَّا غَشِيَهَا مِنْ أَمْرِ اللَّهِ مَا غَشِيَهَا، تَحَوَّلَتْ يَاقُوتًا، أَوْ زُمُرُّدًا أَوْ نَحْوَ ذَلِكَ»


அறிவிப்பாளர் பற்றிய தகவலை தொகுப்பது எப்படி?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அறிவிப்பாளர் பற்றிய தகவலை (சுருக்கமாக) தொகுப்பது எப்படி? 1 . அறிவிப்பாளின் பெயர், குறிப்புப் பெயர் (குன்னியத்) , பட்டப்பெயர் (லகப்), பிறப்பு, இறப்பு, வமிசம்-வகையரா போன்றவற்றை குறிப்பிடுவது. 2 . பெயரை அரபு உச்சரிப்பின்படி சரியாக குறிப்பிடுவது. (a . காரணம் ஒருவரே பலபெயரால் குறிப்பிடப்படுவார். இதனால் ஒருவர் பலர் என கருதநேரிடும். b . பெயர், குன்னியத்தை தெரிவது அவசியம். ஒரு...

Tirmidhi-2675

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2675. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் ஒரு நல்ல நடைமுறையை உருவாக்கி அது பிறரால் பின்பற்றப்பட்டால் அவருக்கு அதற்குரிய நன்மையும் கிடைக்கும். அவரைப் பின்பற்றுவோருக்குக் கிடைப்பதைப் போன்ற நன்மையும் கிடைக்கும். அதற்காக அ(வர்களைப் பின்தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. ஒருவர் ஒரு தீய நடைமுறையை உருவாக்கி அது பிறரால் பின்பற்றப்பட்டால் அவருக்கு அதற்குரிய பாவமும் உண்டு; அவரைப் பின்பற்றுவோருக்குக் கிடைப்பதைப் போன்ற பாவமும் உண்டு. அதற்காக அ(வர்களைப் பின்தொடர்ந்த)வர்களின் பாவத்தில் எதுவும் குறைந்துவிடாது.

இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இப்பாடப் பொருள் தொடர்பான நபிமொழி, ஹுதைஃபா (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கும் மேற்கண்ட நபிமொழி வேறு அறிவிப்பாளர்தொடர்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கும் மேற்கண்ட நபிமொழி ஜரீர் (ரலி) அவர்களின் புதல்வர் முன்திர் பின் ஜரீர் (ரஹ்) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நபிமொழி ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்து

«مَنْ سَنَّ سُنَّةَ خَيْرٍ فَاتُّبِعَ عَلَيْهَا فَلَهُ أَجْرُهُ وَمِثْلُ أُجُورِ مَنْ اتَّبَعَهُ غَيْرَ مَنْقُوصٍ مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَمَنْ سَنَّ سُنَّةَ شَرٍّ فَاتُّبِعَ عَلَيْهَا كَانَ عَلَيْهِ وِزْرُهُ وَمِثْلُ أَوْزَارِ مَنْ اتَّبَعَهُ غَيْرَ مَنْقُوصٍ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا»


Ibn-Majah-9

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9 . ஷுஐப் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) முஆவியா (ரலி) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது (மக்களிடம்) “உங்கள் அறிஞர்கள் எங்கே? உங்கள் அறிஞர்கள் எங்கே?” என்று கேட்டுவிட்டுப் பிறகு பின்வருமாறு தெரிவித்தார்கள்: “என் சமுதாயத்தாருள் ஒரு குழுவினர் (உண்மைக்கு எதிராகச் செயல்படும்) மக்களைவிட
மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தமக்குத் துரோகமிழைத்தோரையும் கண்டு கொள்ளமாட்டார்கள்; உதவி செய்தோரையும் கண்டு கொள்ளமாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.


قَامَ مُعَاوِيَةُ، خَطِيبًا فَقَالَ: أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا وَطَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى النَّاسِ، لَا يُبَالُونَ مَنْ خَذَلَهُمْ وَلَا مَنْ نَصَرَهُمْ»


Ibn-Majah-8

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரண்டு தொழும் திசை (கிப்லாக்)களையும் முன்னோக்கித் தொழும் வாய்ப்புப் பெற்றவரான அபூஇன்பா அல்கவ்லானீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ், இந்த மார்க்கத்தில் சில புதிய நாற்றுகளை (புதிய மக்களை) ஊன்றி வைத்து, அவர்களைத் தனக்குக் கீழ்ப்படியும் செயல்களில் ஈடுபடுத்திக்கொண்டே இருப்பான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: பக்ர் பின் ஸுர்ஆ (ரஹ்)


سَمِعْتُ أَبَا عِنَبَةَ الْخَوْلَانِيَّ، وَكَانَ قَدْ صَلَّى الْقِبْلَتَيْنِ، مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَزَالُ اللَّهُ يَغْرِسُ فِي هَذَا الدِّينِ غَرْسًا يَسْتَعْمِلُهُمْ فِي طَاعَتِهِ»


Ibn-Majah-7

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையை நன்கு நிலைநிறுத்திய படியே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي قَوَّامَةً عَلَى أَمْرِ اللَّهِ، لَا يَضُرُّهَا مَنْ خَالَفَهَا»


Next Page »