தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

அறிவிப்பாளர் பற்றிய தகவலை தொகுப்பது எப்படி?

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அறிவிப்பாளர் பற்றிய தகவலை (சுருக்கமாக) தொகுப்பது எப்படி?

1 . அறிவிப்பாளின் பெயர், குறிப்புப் பெயர் (குன்னியத்) , பட்டப்பெயர் (லகப்), பிறப்பு, இறப்பு, வமிசம்-வகையரா போன்றவற்றை குறிப்பிடுவது.

2 . பெயரை அரபு உச்சரிப்பின்படி சரியாக குறிப்பிடுவது.

(a . காரணம் ஒருவரே பலபெயரால் குறிப்பிடப்படுவார். இதனால் ஒருவர் பலர் என கருதநேரிடும்.

b . பெயர், குன்னியத்தை தெரிவது அவசியம். ஒரு செய்தியின் ஒரு அறிவிப்பாளர்தொடரில் பெயரும், மற்றொரு அறிவிப்பாளர்தொடரில் குன்னியதும் இடம்பெறும். இதனால் இருவர் என கருதிவிடக்கூடாது.

c . இவ்வாறே பட்டப்பெயர், வமிசம், வகையறா, எந்த நாட்டைச் சேர்ந்தவர், பெயரின் உச்சிப்பு போன்ற குறிப்புகளும் அடங்கும்.

(இதைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் நூல்களில் சில – அல்முஃதலிஃப் வல்முக்தலிஃப்)

d . சிலரின் பெயர், தந்தைப் பெயர், பாட்டனார் பெயர், வமிசம் ஒன்றாக இருக்கும். இவ்வாறே ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றாக இருப்பார்கள். இதைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

(இதைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் நூல்களில் சில – அல்முத்தஃபிக் வல்முஃப்தரிக்)

3 . அறிவிப்பாளரின் காலக்கட்டம், குறைந்த ஆசிரியர்கள், மாணவர்கள் என்றால் அவர்களை குறிப்பிடவேண்டும். அதிகமானவர்கள் என்றால் சிலரை குறிப்பிட்டுவிட்டு இன்னும் பலர் என்று குறிப்பிடவேண்டும்.

4 . அறிவிப்பாளரைப் பற்றிய நிறைகளை தனியாகவும், குறைகளை தனியாகவும் குறிப்பிட வேண்டும். அதைக் கூறும் அறிஞர்களின் கால வரிசை கவனித்து வரிசைப்படுத்த வேண்டும்.

(இதில் குறிப்பிட்டவரிடமிருந்து இவர் அறிவித்தால், அல்லது இவரிடமிருந்து மற்றவர்கள் அறிவித்தால் பலமானதா இல்லையா என்ற தகவல், தத்லீஸ், மூளைக்குழம்பியவர் போன்ற பல தகவல் இருக்க வேண்டும்)

5 . அறிவிப்பாளரின் பிறப்பு, இறப்பு பற்றிய தகவலையும், அதில் கருத்துவேறுபாடு உள்ள தகவலையும் முழுமையாகவும் கூறி எது சரியானது என்று கூறமுடிந்தால் ஆதாரத்துடன் அதைக் குறிப்பிடவேண்டும்.

(இதை வைத்தே இவர் இன்னாரிடம் ஹதீஸைக் கேட்டுள்ளாரா என்று தத்லீஸ், சந்திப்பு, முன்கதிஃ போன்ற பல தகவல் தெரியமுடியும்)


6 . مبهم – مهمل பெயர் மட்டும் கூறப்பட்டு, தந்தைப் பெயர் போன்ற மற்ற தகவல்கள் குறிப்பிடாமல் வரும் அறிவிப்பாளர்கள்; (இவ்வாறே ஒரு மனிதர், இன்னவர் என்று கூறப்பட்டு வரும் அறிவிப்பாளர்கள்) பற்றி எவ்வாறு தெரிவது?

1 . ஒரு ஹதீஸ் நூலின் பல பிரதிகளை பார்ப்பது.

2 . அந்த செய்தி வந்துள்ள அனைத்து நூல்களையும் பார்ப்பது-தக்ரீஜ்

3 . ஹதீஸ் விளக்கவுரை நூல்கள், அத்ஃராப் நூல்களை பார்ப்பது.

4 . பெயர் கூறப்பட்டவரின் ஆசிரியர், மாணவர்களின் பெயரை கவனிப்பது.

5 . குறிப்பிட்ட நூலின் ஆசிரியர் இவரின் பெயரை ஆரம்ப ஹதீஸில் முழுமையாக கூறியிருப்பார். பிறகு சுருக்கமாக கூறுவார் என்பதால் அதை ஆய்வு செய்வது.

6 . இவைகளில் தகவல் கிடைக்காவிட்டால் வேறு சில ஆதாரங்களை பார்க்க வேண்டும். முழு தகவல் கிடைக்காவிட்டால் அவரின் செய்தியை நிறுத்தி வைக்கவேண்டும்.

(ஆதார நூல்:  كيفية الترجمة للراوي ترجمة علمية دقيقة)


இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:

1 . பார்க்க: அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள் .

2 . பார்க்க: ஹதீஸை ஆய்வு செய்யும் முறை .



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.