Month: March 2022

Tirmidhi-2067

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2067. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சமையல் காளான் ‘மன்னு’ வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.

அறிவிப்பவர்: ஸயீத் இப்னு ஸைத் (ரலி)


«الكَمْأَةُ مِنَ المَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ»


Ibn-Majah-3454

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3454. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சமையல் காளான் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கு அல்லாஹ் இறக்கிவைத்த “மன்னு” வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«أَنَّ الْكَمْأَةَ مِنَ الْمَنِّ، الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى بَنِي إِسْرَائِيلَ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ»


Tirmidhi-2069

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2069. கதாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு காளான்களை எடுத்து சாறு பிழிந்து அதை ஒரு கண்ணாடி குடுவையில் எடுத்துக்கொண்டேன். பின்பு அதை (கண்ணோய் ஏற்பட்டிருந்த) என் அடிமைப் பெண்ணின் கண்ணில் இட அவள் குணமடைந்தாள் என்று அபூஹுரைரா (ரலி) கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது.


«أَخَذْتُ ثَلَاثَةَ أَكْمُؤٍ أَوْ خَمْسًا أَوْ سَبْعًا فَعَصَرْتُهُنَّ فَجَعَلْتُ مَاءَهُنَّ فِي قَارُورَةٍ فَكَحَلْتُ بِهِ جَارِيَةً لِي فَبَرَأَتْ»


Tirmidhi-2068

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2068. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்களில் சிலர் காளான் முளைத்து வருவது பூமிக்கு ஏற்படும் அம்மைநோய் என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “சமையல் காளான் (பனூ இஸ்ரவேலர்களுக்கு வழங்கப்பட்ட) மன்னு என்ற வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணம் ஆகும்.

அஜ்வா பேரீத்தம்பழம் சொர்க்கத்தை சேர்ந்ததாகும். அதில் விஷத்திற்கு நிவாரணம் இருக்கிறது” என்று கூறினார்கள்.


أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: الكَمْأَةُ جُدَرِيُّ الأَرْضِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الكَمْأَةُ مِنَ المَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ، وَالعَجْوَةُ مِنَ الجَنَّةِ وَهِيَ شِفَاءٌ مِنَ السُّمِّ»


Ibn-Majah-3455

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3455. …அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சமையல் காளான் (பனூ இஸ்ரவேலர்களுக்கு வழங்கப்பட்ட) மன்னு என்ற வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணம் ஆகும்.

அஜ்வா பேரீத்தம்பழம் சொர்க்கத்தை சேர்ந்ததாகும். அதில் விஷத்திற்கு நிவாரணம் இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


كُنَّا نَتَحَدَّثُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْنَا الْكَمْأَةَ، فَقَالُوا: هُوَ جُدَرِيُّ الْأَرْضِ، فَنُمِيَ الْحَدِيثُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «الْكَمْأَةُ مِنَ الْمَنِّ، وَالْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ، وَهِيَ شِفَاءٌ مِنَ السَّمِّ»


Darimi-2882

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2882. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அஜ்வா பேரீத்தம்பழம் சொர்க்கத்தை சேர்ந்ததாகும். அதில் விஷத்திற்கு நிவாரணம் இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ، وَهِيَ شِفَاءٌ مِنَ السُّمِّ»


Musnad-Ahmad-10639

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10639. …அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சமையல் காளான் (பனூ இஸ்ரவேலர்களுக்கு வழங்கப்பட்ட) மன்னு என்ற வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணம் ஆகும்.

அஜ்வா பேரீத்தம்பழம் சொர்க்கத்தை சேர்ந்ததாகும். அதில் விஷத்திற்கு நிவாரணம் இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَى أَصْحَابِهِ وَهُمْ يَذْكُرُونَ الْكَمْأَةَ، قَالُوا: تُرَاهَا جُدَرِيَّ الْأَرْضِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْكَمْأَةُ مِنَ الْمَنِّ، وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ، وَالْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ، وَهِيَ شِفَاءٌ مِنَ السُّمِّ»


Musnad-Ahmad-10354

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10354. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அஜ்வா பேரீத்தம்பழம் சொர்க்கத்தை சேர்ந்ததாகும். அதில் விஷத்திற்கு நிவாரணம் இருக்கிறது. சமையல் காளான் (பனூ இஸ்ரவேலர்களுக்கு வழங்கப்பட்ட) மன்னு என்ற வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணம் ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ، وَهِيَ شِفَاءٌ مِنَ السُّمِّ، وَالْكَمْأَةُ مِنَ الْمَنِّ، وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ»


Musnad-Ahmad-10335

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10335. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சமையல் காளான் (பனூ இஸ்ரவேலர்களுக்கு வழங்கப்பட்ட) மன்னு என்ற வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணம் ஆகும்.

அஜ்வா பேரீத்தம்பழம் சொர்க்கத்தை சேர்ந்ததாகும். அதில் விஷத்திற்கு நிவாரணம் இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الْكَمْأَةُ مِنَ الْمَنِّ، وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ، وَالْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ، وَهِيَ شِفَاءٌ مِنَ السُّمِّ»


Musnad-Ahmad-9465

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9465. …அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சமையல் காளான் (பனூ இஸ்ரவேலர்களுக்கு வழங்கப்பட்ட) மன்னு என்ற வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணம் ஆகும்.

அஜ்வா பேரீத்தம்பழம் சொர்க்கத்தை சேர்ந்ததாகும். அதில் விஷத்திற்கு நிவாரணம் இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَى أَصْحَابِهِ وَهُمْ يَتَنَازَعُونَ فِي الشَّجَرَةِ الَّتِي اجْتُثَّتْ مِنْ فَوْقِ الْأَرْضِ، مَا لَهَا مِنْ قَرَارٍ، فَقَالَ بَعْضُهُمْ: أَحْسَبُهَا الْكَمْأَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْكَمْأَةُ مِنَ الْمَنِّ، وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ، وَالْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ، وَهِيَ شِفَاءٌ لِلسُّمِّ»


Next Page »