Month: November 2019

Muslim-617

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

617. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்) எனக்கு (தங்களிடம்) ஓர் அலுவல் (குறித்துப் பேச வேண்டியது) இருக்கிறது என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து அவரிடம் (நீண்ட நேரம்) தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். (எந்த அளவுக்கென்றால்) மக்கள் அனைவரும் அல்லது மக்களில் சிலர் (உட்கார்ந்த நிலையிலேயே) உறங்கிவிட்டனர். பிறகு (புதிதாக உளூச் செய்யாமலேயே) தொழுதனர்.

Book : 3


أُقِيمَتْ صَلَاةُ الْعِشَاءِ فَقَالَ رَجُلٌ: لِي حَاجَةٌ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَاجِيهِ حَتَّى نَامَ الْقَوْمُ – أَوْ بَعْضُ الْقَوْمِ – ثُمَّ صَلَّوْا


Muslim-616

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

616. ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் (உட்கார்ந்துகொண்டே) உறங்கிவிட்டு (பிறகு எழுந்து) தொழுவார்கள். (அதற்காகப் புதிதாக) உளூச் செய்யமாட்டார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன் என கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான், இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு கத்தாதா (ரஹ்) அவர்கள், ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! என்று சொன்னார்கள்.

Book : 3


«كَانَ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنَامُونَ ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ» قَالَ: قُلْتُ: سَمِعْتَهُ مِنْ أَنَسٍ قَالَ: إِي وَاللهِ


Muslim-615

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

615. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள் இஷாத் தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டது. ஆனால், நபி (ஸல்) அவர்களோ ஒரு மனிதரிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் (நீண்டநேரம்) பேசிக்கொண்டிருந்ததில் நபித்தோழர்கள் (உட்கார்ந்துகொண்டே) தூங்கிவிட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்து மக்களுக்குத் தொழுவித்தார்கள்.

Book : 3


«أُقِيمَتِ الصَّلَاةُ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَاجِي رَجُلًا فَلَمْ يَزَلْ يُنَاجِيهِ حَتَّى نَامَ أَصْحَابُهُ ثُمَّ جَاءَ فَصَلَّى بِهِمْ»


Muslim-614

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33

உட்கார்ந்துகொண்டு உறங்கினால் உளூ முறியாது என்பதற்கான சான்று.

614. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள் இஷாத் தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டது. (ஆனால்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் (நீண்டநேரம்) தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இறுதியில் மக்கள் (உட்கார்ந்துகொண்டே) தூங்கிவிட்டார்கள். பின்னர்தான் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு (வந்து) நின்றார்கள்.

Book : 3


أُقِيمَتِ الصَّلَاةُ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَجِيٌّ لِرَجُلٍ – وَفِي حَدِيثِ عَبْدِ الْوَارِثِ: وَنَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَاجِي الرَّجُلَ – فَمَا قَامَ إِلَى الصَّلَاةِ حَتَّى نَامَ الْقَوْمُ


Muslim-613

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

32 கழிப்பிடத்திற்குச் செல்லும்போது ஓத வேண்டிய பிரார்த்தனை.

613. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும்போது அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மினல் குப்ஸி வல்கபாயிஸி என்று கூறுவார்கள்.

(பொருள்: இறைவா! ஆண் மற்றும் பெண் ஷைத்தான்களி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (கழிப்பிடம் என்பதைக் குறிக்க அல்கலா எனும் சொல்லுக்கு பதிலாக) அல்கனீஃப் எனும் சொல் காணப்படுகிறது.

– இந்த ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், நபி (ஸல்) அவர்கள் அவூது பில்லாஹி மினல் குப்ஸி வல்கபாயிஸி என்று கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது.

(பொருள்: ஆண் மற்றும் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ وَفِي حَدِيثِ هُشَيْمٍ، – أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَخَلَ الْكَنِيفَ قَالَ: «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ»

-وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالَا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ: «أَعُوذُ بِاللهِ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ»


Muslim-612

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

612. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டுக் கழிவறையிலிருந்து வந்தார்கள். அப்போது அவர்களுக்கு உணவு கொண்டுவந்து பரிமாறப்பட்டது. அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். ஆனால், தண்ணீரைத் தொடவேயில்லை (உளூச் செய்யவில்லை).

சயீத் பின் அல்ஹுவைரிஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் உளூச் செய்யவில்லையே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நான் எந்தத் தொழுகையையும் நிறைவேற்றப்போக வில்லையே, அவ்வாறிருந்தால்தானே நான் உளூச் செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

Book : 3


«إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى حَاجَتَهُ مِنَ الْخَلَاءِ، فَقُرِّبَ إِلَيْهِ طَعَامٌ فَأَكَلَ وَلَمْ يَمَسَّ مَاءً»، قَالَ: وَزَادَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِيلَ لَهُ: إِنَّكَ لَمْ تَوَضَّأْ؟ قَالَ: «مَا أَرَدْتُ صَلَاةً فَأَتَوَضَّأَ» وَزَعَمَ عَمْرٌو، أَنَّهُ سَمِعَ مِنْ سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ


Muslim-611

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

611. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தபோது அவர்களுக்கு முன்னால் உணவு வைக்கப்பட்டது. அப்போது, நீங்கள் உளூச் செய்துகொள்ள வில்லையே, அல்லாஹ்வின் தூதரே!? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், எதற்கு, தொழுகைக்கா? என்று கேட்டார்கள்.

Book : 3


«ذَهَبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْغَائِطِ، فَلَمَّا جَاءَ قُدِّمَ لَهُ طَعَامٌ»، فَقِيلَ: يَا رَسُولَ اللهِ أَلَا تَوَضَّأُ؟ قَالَ: «لِمَ؟ أَلِلصَّلَاةِ؟»


Muslim-610

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

610. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்று விட்டு வந்தார்கள். மேலும், அவர்களுக்கு உணவு கொண்டுவரப்பட்டது. (அவர்கள் சாப்பிடப் போனபோது) அவர்களிடம், நீங்கள் உளூச் செய்துகொள்ளவில்லையே? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஏன்? நானென்ன தொழவாபோகிறேன், உளூச் செய்து கொள்வதற்கு? என்று கேட்டார்கள்.

Book : 3


«كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ مِنَ الْغَائِطِ، وَأُتِيَ بِطَعَامٍ» فَقِيلَ لَهُ: أَلَا تَوَضَّأُ؟ فَقَالَ: «لِمَ؟ أَأُصَلِّي فَأَتَوَضَّأَ؟»


Muslim-609

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31

சிறு துடக்கு ஏற்பட்டவர் (உளூச் செய்யாமல்) உணவு உட்கொள்ளலாம். அவ்வாறு செய்வது ஓர் அருவருக்கத் தக்க செயலன்று. (துடக்கு ஏற்பட்ட) உடனே உளூச் செய்வது கட்டாயமல்ல.

609. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கழிவறையிலிருந்து வெளியேறியபோது அவர்களுக்கு உணவு கொண்டுவரப்பட்டது. அப்போது மக்கள் உளூச் செய்யுமாறு அவர்களுக்கு நினைவூட்டினர். நபி (ஸல்) அவர்கள், நானென்ன தொழவா போகிறேன்,உளூச் செய்துகொள்வதற்கு? என்று கேட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 3


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنَ الْخَلَاءِ، فَأُتِيَ بِطَعَامٍ»، فَذَكَرُوا لَهُ الْوُضُوءَ فَقَالَ: «أُرِيدُ أَنْ أُصَلِّيَ فَأَتَوَضَّأَ؟»


Muslim-608

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30

பெருந்துடக்கு போன்ற நிலைகளில் அல்லாஹ்வை திக்ர் செய்தல் (துதித்தல்).

608. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை திக்ர் செய்பவர்களாய் இருந்தார்கள்.

இதை உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 3


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ»


Next Page »