Month: November 2022

Musannaf-Ibn-Abi-Shaybah-24175

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

24175. முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அருகில் ஒருவர் வந்து அமர்ந்தார். அவரிடம், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீ எங்கிருந்து வருகிறாய்! என்று கேட்டார்கள். அதற்கவர், “ஸம்ஸம் கிணற்றுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன்” என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிக்க வேண்டிய முறைப்படி குடித்தீரா? என்று கேட்டுவிட்டு, “நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிப்பதாக இருந்தால் கஃபா திசையை முன்னோக்க வேண்டும்; பிறகு பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் பெயரால் என்று கூறி, மூன்று முறை மூச்சு விட்டுப் பருக வேண்டும் என்று கூறினார்.


جَلَسَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ، وَقَالَ لَهُ: مِنْ أَيْنَ جِئْتَ؟ قَالَ: شَرِبْتُ مِنْ مَاءِ زَمْزَمَ قَالَ: فَشَرِبْتَ مِنْهَا كَمَا يَنْبَغِي؟ قَالَ: «إِذَا شَرِبْتَ مِنْهَا فَاسْتَقْبِلِ الْكَعْبَةَ، وَاذْكُرِ اسْمَ اللَّهِ، وَتَنَفَّسْ ثَلَاثًا»


Musannaf-Abdur-Razzaq-9111

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9111. அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவரிடம் ஒரு மனிதர் வந்து அருகில் அமர்ந்தார். அவரிடம், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீ எங்கிருந்து வருகிறாய்! என்று கேட்டார்கள். அதற்கவர், “ஸம்ஸம் கிணற்றுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து வருகிறேன்” என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிக்க வேண்டிய முறைப்படி குடித்தீரா? என்று கேட்டார். அதற்கவர், குடிக்கவேண்டிய முறை என்றால் அது எவ்வாறு? என்று வினவினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிப்பதாக இருந்தால் கஃபா திசையை முன்னோக்க வேண்டும்; பிறகு பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் பெயரால் என்று கூறி, மூன்று முறை மூச்சு விட்டுப் பருக வேண்டும். மேலும் வயிறு நிரம்ப அதிகமாகக் குடிக்க வேண்டும்; பிறகு அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.

ஏனெனில், “நமக்கும், நயவஞ்சகர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் அவர்கள், ஸம்ஸம் நீரை வயிறு நிரம்ப குடிக்கமாட்டார்கள். (நாம் வயிறு நிரம்ப குடிப்போம்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று கூறினார்.


كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَجَاءَهُ رَجُلٌ، فَجَلَسَ إِلَى جَنْبِهِ فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ: مِنْ أَيْنَ جِئْتَ؟ قَالَ: شَرِبْتُ مِنْ زَمْزَمَ قَالَ: شَرِبْتَهَا كَمَا يَنْبَغِي؟ قَالَ: وَكَيْفَ يَنْبَغِي يَا ابْنَ عَبَّاسٍ؟ قَالَ: تَسْتَقْبِلُ الْقِبْلَةَ، وَتُسَمِّي اللَّهَ ثُمَّ تَشْرَبُ، وَتَتَنَفَّسُ ثَلَاثَ مَرَّاتٍ، فَإِذَا فَرَغْتَ حَمِدْتَ اللَّهَ تَعَالَى، وَتَتَضَلَّعُ مِنْهَا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ آيَةَ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ أَنَّهُمْ لَا يَتَضَلَّعُونَ مِنْ زَمْزَمَ»


Musannaf-Abdur-Razzaq-9110

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

9110. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸம்ஸம் நீரை குடிக்கும் முறை (என்னவெனில் ஸம்ஸம் நீருள்ள) வாளியை எடுத்து பிறகு கிப்லாவை முன்னோக்கி வயிறு நிரம்ப குடிப்பதாகும். ஏனெனில் நயவஞ்சகர்கள் வயிறு நிரம்ப குடிக்கமாட்டார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் தீனார் (ரஹ்)


«شُرْبُ زَمْزَمَ بِأَخْذِ الدَّلْوِ، ثُمَّ يَسْتَقْبِلُ الْقِبْلَةَ، فَيَشْرَبُ مِنْهَا حَتَّى يَتَضَلَّعَ، فَإِنَّهُ لَا يَتَضَلَّعُ مِنْهَا مُنَافِقٌ»


Kubra-Bayhaqi-9656

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9656. (ஒரு தடவை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீ எங்கிருந்து வருகிறாய்! என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், “ஸம்ஸம் கிணற்றுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து வருகிறேன்” என்று கூறினேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிக்க வேண்டிய முறைப்படி குடித்தீரா? என்று கேட்டார். அதற்கு நான், குடிக்கவேண்டிய முறை என்றால் அது எவ்வாறு இப்னு அப்பாஸ் அவர்களே? என்று வினவினேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிப்பதாக இருந்தால் கஃபா திசையை முன்னோக்க வேண்டும்; பிறகு பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் பெயரால் என்று கூறி, மூன்று முறை மூச்சு விட்டுப் பருக வேண்டும். மேலும் வயிறு நிரம்ப அதிகமாகக் குடிக்க வேண்டும்; பிறகு அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.

ஏனெனில், “நமக்கும், நயவஞ்சகர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் அவர்கள், ஸம்ஸம் நீரை வயிறு நிரம்ப குடிக்கமாட்டார்கள். (நாம் வயிறு நிரம்ப குடிப்போம்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தோழர் ஒருவர் கூறினார்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஸ்வத் (ரஹ்)


قَالَ لِي ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ مِنْ أَيْنَ جِئْتَ؟ قُلْتُ: شَرِبْتُ مِنْ زَمْزَمَ , قَالَ: شَرِبْتَ كَمَا يَنْبَغِي؟ قُلْتُ: كَيْفَ أَشْرَبُ؟ قَالَ: إِذَا شَرِبْتَ فَاسْتَقْبِلِ الْقِبْلَةَ ثُمَّ اذْكُرِ اسْمَ اللهِ ثُمَّ تَنَفَّسْ ثَلَاثًا وَتَضَلَّعْ مِنْهَا فَإِذَا فَرَغْتَ فَاحْمَدِ اللهَ فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ: ” آيَةُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ أَنَّهُمْ لَا يَتَضَلَّعُونَ مِنْ زَمْزَمَ


Almujam-Alkabir-11246

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11246. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நமக்கும், நயவஞ்சகர்களுக்கும் இடையில் உள்ள அடையாளம் அவர்கள், ஸம்ஸம் நீரை வயிறு நிரம்ப குடிக்கமாட்டார்கள். (நாம் வயிறு நிரம்ப குடிப்போம்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.


«آيَةُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ أَنَّهُمْ لَا يَتَضَلَّعُونَ مِنْ زَمْزَمَ»


Almujam-Alkabir-10763

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10763. நமக்கும், நயவஞ்சகர்களுக்கும் இடையில் உள்ள அடையாளம் அவர்கள், ஸம்ஸம் நீரை வயிறு நிரம்ப குடிக்கமாட்டார்கள். (நாம் வயிறு நிரம்ப குடிப்போம்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«عَلَامَةُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ أَنَّهُمْ لَا يَتَضَلَّعُونَ مِنْ زَمْزَمَ»


Daraqutni-2736

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2736. அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். அவரிடம், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீ எங்கிருந்து வருகிறாய்! என்று கேட்டார்கள். அதற்கவர், “ஸம்ஸம் கிணற்றுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து வருகிறேன்” என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிக்க வேண்டிய முறைப்படி குடித்தீரா? என்று கேட்டார். அதற்கவர், குடிக்கவேண்டிய முறை என்றால் அது எவ்வாறு இப்னு அப்பாஸ் அவர்களே? என்று வினவினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிப்பதாக இருந்தால் கஃபா திசையை முன்னோக்க வேண்டும்; பிறகு பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் பெயரால் என்று கூறி, மூன்று முறை மூச்சு விட்டுப் பருக வேண்டும். மேலும் வயிறு நிரம்ப அதிகமாகக் குடிக்க வேண்டும்; பிறகு அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.

ஏனெனில், “நமக்கும், நயவஞ்சகர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் அவர்கள், ஸம்ஸம் நீரை வயிறு நிரம்ப குடிக்கமாட்டார்கள். (நாம் வயிறு நிரம்ப குடிப்போம்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று கூறினார்.


جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ , فَقَالَ لَهُ: مِنْ أَيْنَ جِئْتَ؟ , فَقَالَ شَرِبْتُ مِنْ زَمْزَمَ , فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ: أَشَرِبْتَ مِنْهَا كَمَا يَنْبَغِي؟ , قَالَ: وَكَيْفَ ذَاكَ يَا ابْنَ عَبَّاسٍ؟ , قَالَ: إِذَا شَرِبْتَ مِنْهَا فَاسْتَقْبِلِ الْقِبْلَةَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ وَتَنَفَّسَ ثَلَاثًا وَتَضَلَّعْ مِنْهَا , فَإِذَا فَرَغْتَ فَاحْمَدِ اللَّهَ عَزَّ وَجَلَّ , فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «آيَةٌ بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ أَنَّهُمْ لَا يَتَضَلَّعُونَ مِنْ زَمْزَمَ».


Next Page »