தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-9656

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(ஒரு தடவை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீ எங்கிருந்து வருகிறாய்! என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், “ஸம்ஸம் கிணற்றுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து வருகிறேன்” என்று கூறினேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிக்க வேண்டிய முறைப்படி குடித்தீரா? என்று கேட்டார். அதற்கு நான், குடிக்கவேண்டிய முறை என்றால் அது எவ்வாறு இப்னு அப்பாஸ் அவர்களே? என்று வினவினேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிப்பதாக இருந்தால் கஃபா திசையை முன்னோக்க வேண்டும்; பிறகு பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் பெயரால் என்று கூறி, மூன்று முறை மூச்சு விட்டுப் பருக வேண்டும். மேலும் வயிறு நிரம்ப அதிகமாகக் குடிக்க வேண்டும்; பிறகு அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.

ஏனெனில், “நமக்கும், நயவஞ்சகர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் அவர்கள், ஸம்ஸம் நீரை வயிறு நிரம்ப குடிக்கமாட்டார்கள். (நாம் வயிறு நிரம்ப குடிப்போம்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தோழர் ஒருவர் கூறினார்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஸ்வத் (ரஹ்)

(பைஹகீ-குப்ரா: 9656)

أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْمُقْرِئُ , أنبأ الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ , ثنا يُوسُفُ بْنُ يَعْقُوبَ , ثنا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ , ثنا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ , ثنا عُثْمَانُ بْنُ الْأَسْوَدِ , حَدَّثَنِي جَلِيسٌ لِابْنِ عَبَّاسٍ قَالَ:

قَالَ لِي ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ مِنْ أَيْنَ جِئْتَ؟ قُلْتُ: شَرِبْتُ مِنْ زَمْزَمَ , قَالَ: شَرِبْتَ كَمَا يَنْبَغِي؟ قُلْتُ: كَيْفَ أَشْرَبُ؟ قَالَ: إِذَا شَرِبْتَ فَاسْتَقْبِلِ الْقِبْلَةَ ثُمَّ اذْكُرِ اسْمَ اللهِ ثُمَّ تَنَفَّسْ ثَلَاثًا وَتَضَلَّعْ مِنْهَا فَإِذَا فَرَغْتَ فَاحْمَدِ اللهَ فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ: ” آيَةُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ أَنَّهُمْ لَا يَتَضَلَّعُونَ مِنْ زَمْزَمَ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-9656.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-8940.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் யார் என்ற விவரம் இல்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3061 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.