தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-24175

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அருகில் ஒருவர் வந்து அமர்ந்தார். அவரிடம், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீ எங்கிருந்து வருகிறாய்! என்று கேட்டார்கள். அதற்கவர், “ஸம்ஸம் கிணற்றுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன்” என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிக்க வேண்டிய முறைப்படி குடித்தீரா? என்று கேட்டுவிட்டு, “நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிப்பதாக இருந்தால் கஃபா திசையை முன்னோக்க வேண்டும்; பிறகு பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் பெயரால் என்று கூறி, மூன்று முறை மூச்சு விட்டுப் பருக வேண்டும் என்று கூறினார்.

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 24175)

حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ عُثْمَانَ بْنِ الْأَسْوَدِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، قَالَ:

جَلَسَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ، وَقَالَ لَهُ: مِنْ أَيْنَ جِئْتَ؟ قَالَ: شَرِبْتُ مِنْ مَاءِ زَمْزَمَ قَالَ: فَشَرِبْتَ مِنْهَا كَمَا يَنْبَغِي؟ قَالَ: «إِذَا شَرِبْتَ مِنْهَا فَاسْتَقْبِلِ الْكَعْبَةَ، وَاذْكُرِ اسْمَ اللَّهِ، وَتَنَفَّسْ ثَلَاثًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-24175.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர்-அபுஸ்ஸவ்ரைன் என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை. இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/623, தக்ரீபுத் தஹ்தீப்-1/868)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3061 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.