Month: August 2023

Ibn-Majah-6

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாருள் ஒரு குழுவினர் (என்றென்றும்) உதவி செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு துரோகம் இழைப்பவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உலக முடிவுநாள் வரை இந்நிலையே நீடிக்கும்.

அறிவிப்பவர்: குர்ரா பின் இயாஸ் (ரலி)


«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُورِينَ، لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ»


Ibn-Majah-5

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5 . (ஒருநாள்) நாங்கள் வறுமை பற்றிப் பேசிக்கொண்டும், வறுமை (ஏற்பட்டுவிடக் கூடாது என்பது) குறித்து அச்சம் தெரிவித்துக் கொண்டுமிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “வறுமை ஏற்பட்டுவிடும் என்பது குறித்தா நீங்கள் அஞ்சுகிறீர்கள்? என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீது ஆணையாக! உங்களுக்கு இவ்வுலகச் செல்வங்கள் தாராளமாக வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால் (அப்போது) அந்தச் செல்வத்தைத் தவிர வேறெதுவும் உங்களின் உள்ளத்தை (நல்வழியிலிருந்து) பிறழச்செய்யாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களை நான் தூய வெண்ணிற மார்க்கத்தில் விட்டுச்செல்கிறேன். அதன் இரவும் பகலும் சமமானவை ஆகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்மையே கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் எங்களை இரவும், பகலும் சமமான தூய வெண்ணிற மார்க்கத்தில் தான் விட்டுச் சென்றார்கள்.

 


خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ نَذْكُرُ الْفَقْرَ وَنَتَخَوَّفُهُ، فَقَالَ: «آلْفَقْرَ تَخَافُونَ؟ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتُصَبَّنَّ عَلَيْكُمُ الدُّنْيَا صَبًّا، حَتَّى لَا يُزِيغَ قَلْبَ أَحَدِكُمْ إِزَاغَةً إِلَّا هِيهْ، وَايْمُ اللَّهِ، لَقَدْ تَرَكْتُكُمْ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ، لَيْلُهَا وَنَهَارُهَا سَوَاءٌ»

قَالَ أَبُو الدَّرْدَاءِ: صَدَقَ وَاللَّهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَرَكَنَا وَاللَّهِ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ، لَيْلُهَا وَنَهَارُهَا سَوَاءٌ»


Ibn-Majah-4

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4 . முஹம்மத் பாக்கிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியைச் செவியுற்றால் அதைத் தாண்டிப் போகவும் மாட்டார்கள்; அதை விடக் குறைத்துவிடவும் மாட்டார்கள்.


كَانَ ابْنُ عُمَرَ «إِذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا لَمْ يَعْدُهُ، وَلَمْ يُقَصِّرْ دُونَهُ»


Ibn-Majah-3

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த நபிமொழி, இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


«مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ»


Nasaayi-2

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 2

இரவில் எழுந்ததும் பல் துலக்குதல்.

2 . ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழும்போது, பல்துலக்கும் குச்சியால் தம் பற்களை நன்கு தேய்த்துத் துலக்குவார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ»


Nasaayi-3

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 3

பல்துலக்குவது எவ்வாறு?

3 . அபூமூஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்கள் பல் துலக்கிக்கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது பல்துலக்கும் குச்சியின் ஒரு பகுதி அவர்கள் நாவில் இருக்க, ‘அவ், அவ்’ என்று சப்தமிட்டார்கள்.


دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَسْتَنُّ وَطَرَفُ السِّوَاكِ عَلَى لِسَانِهِ وَهُوَ يَقُولُ: عَأْ عَأْ


Nasaayi-4

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 4

தலைவர், தமது குடிமக்கள் முன்னிலையில் பல்துலக்கலாமா?

4 . நான் நபி (ஸல்) அவர்களிடம் (எனது) ‘அஷ்அரீ’ குலத்தைச் சார்ந்த இருவரோடு வந்தேன். ஒருவர் என் வலப்புறத்திலும் இன்னொருவர் என் இடப்புறத்திலும் இருந்தனர். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அவ்விருவருமே (நபி-ஸல்) அவர்களிடம் அரசுப்) பதவி தருமாறு கேட்டனர்.

நான், “உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மேல் ஆணையாக! இவ்விருவரும் தம் மனங்களில் கொண்டிருந்த எண்ணத்தை என்னிடம் வெளிப்படுத்தவே இல்லை. இவர்கள் பதவி கேட்டே வருகிறார்கள் என்று நான் நினைக்கவுமில்லை” என்று கூறினேன்.

அப்போது, நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக் கொண்டிருந்த அந்தப் பல்துலக்கும் குச்சியை இப்போதும்கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நாம் பதவியை விரும்புவோருக்கு உதவ (அல்லது உதவவே) மாட்டோம்” என்று கூறிவிட்டு “நீங்கள் செல்லுங்கள்” என்று என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

…(அபூமூஸா (ரலி) அவர்களை ஆளுநராக யமன் (எனும்) நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். பிறகு அவருக்கு துணையாக முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் அனுப்பிவைத்தார்கள்)


أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِي رَجُلَانِ مِنَ الْأَشْعَرِيِّينَ: أَحَدُهُمَا عَنْ يَمِينِي، وَالْآخَرُ عَنْ يَسَارِي. وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ فَكِلَاهُمَا سَأَلَ الْعَمَلَ. قُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ نَبِيًّا مَا أَطْلَعَانِي عَلَى مَا فِي أَنْفُسِهِمَا، وَمَا شَعَرْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتَ شَفَتِهِ قَلَصَتْ. فَقَالَ: «إِنَّا لَا – أَوْ لنْ – نَسْتَعِينَ عَلَى الْعَمَلِ مَنْ أَرَادَهُ، وَلَكِنِ اذْهَبْ أَنْتَ».

فَبَعَثَهُ عَلَى الْيَمَنِ، ثُمَّ أَرْدَفَهُ مُعَاذُ بْنُ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا


Nasaayi-6

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 6

அதிகமாகப் பல்துலக்குதல்.

6 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பல்துலக்குவது குறித்து உங்களுக்கு நான் அதிகமாகவே வலியுறுத்தியிருக்கிறேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«قَدْ أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ»


Nasaayi-8

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 8

எல்லா நேரங்களிலும் பல்துலக்குதல்.

8 . ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

வீட்டில் நுழைந்ததும் நபி (ஸல்) அவர்கள் முதலில் என்ன செய்வார்கள்?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “பல்துலக்குவார்கள்” என்று பதிலளித்தார்கள்.


قُلْتُ لِعَائِشَةَ بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ بَيْتَهُ؟ قَالَتْ: «بِالسِّوَاكِ»


குதுபுஸ் ஸித்தாவின் அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ குதுபுஸ் ஸித்தாவின் அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்கள். குதுபுஸ் ஸித்தா எனும் முக்கிய ஆறு ஹதீஸ் நூல்களான புகாரீ, முஸ்லிம், இப்னுமாஜா, அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள அறிவிப்பாளர்கள் பற்றிய விவரங்களை சில அறிஞர்கள் நூலாக தொகுத்துள்ளனர். அவைகள் பற்றிய விவரங்கள்: 1 . அல்முஃஜமுல் முஷ்தமிலு அலா திக்ரி அஸ்மாஇ ஷுயூஹில் அஇம்மதின் நபல் - المعجم المشتمل على ذكر...
Next Page » « Previous Page