தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 4

தலைவர், தமது குடிமக்கள் முன்னிலையில் பல்துலக்கலாமா?

4 . நான் நபி (ஸல்) அவர்களிடம் (எனது) ‘அஷ்அரீ’ குலத்தைச் சார்ந்த இருவரோடு வந்தேன். ஒருவர் என் வலப்புறத்திலும் இன்னொருவர் என் இடப்புறத்திலும் இருந்தனர். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அவ்விருவருமே (நபி-ஸல்) அவர்களிடம் அரசுப்) பதவி தருமாறு கேட்டனர்.

நான், “உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மேல் ஆணையாக! இவ்விருவரும் தம் மனங்களில் கொண்டிருந்த எண்ணத்தை என்னிடம் வெளிப்படுத்தவே இல்லை. இவர்கள் பதவி கேட்டே வருகிறார்கள் என்று நான் நினைக்கவுமில்லை” என்று கூறினேன்.

அப்போது, நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக் கொண்டிருந்த அந்தப் பல்துலக்கும் குச்சியை இப்போதும்கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நாம் பதவியை விரும்புவோருக்கு உதவ (அல்லது உதவவே) மாட்டோம்” என்று கூறிவிட்டு “நீங்கள் செல்லுங்கள்” என்று என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

…(அபூமூஸா (ரலி) அவர்களை ஆளுநராக யமன் (எனும்) நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். பிறகு அவருக்கு துணையாக முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் அனுப்பிவைத்தார்கள்)

(நஸாயி: 4)

بَابُ هَلْ يَسْتَاكُ الْإِمَامُ بِحَضْرَةِ رَعِيَّتِهِ؟

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلَالٍ قَالَ: حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ:

أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِي رَجُلَانِ مِنَ الْأَشْعَرِيِّينَ: أَحَدُهُمَا عَنْ يَمِينِي، وَالْآخَرُ عَنْ يَسَارِي. وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ فَكِلَاهُمَا سَأَلَ الْعَمَلَ. قُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ نَبِيًّا مَا أَطْلَعَانِي عَلَى مَا فِي أَنْفُسِهِمَا، وَمَا شَعَرْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتَ شَفَتِهِ قَلَصَتْ. فَقَالَ: «إِنَّا لَا – أَوْ لنْ – نَسْتَعِينَ عَلَى الْعَمَلِ مَنْ أَرَادَهُ، وَلَكِنِ اذْهَبْ أَنْتَ».

فَبَعَثَهُ عَلَى الْيَمَنِ، ثُمَّ أَرْدَفَهُ مُعَاذُ بْنُ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-.
Nasaayi-Alamiah-4.
Nasaayi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.