தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-8125

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனையில் மிகச் சிறந்தது, அரஃபா நாளின் போது செய்யும் பிரார்த்தனையாகும்.

நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது, ”லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாரிகலஹு” என்பதாகும்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லா பின் கரீஸ் (ரஹ்)

(musannaf-abdur-razzaq-8125: 8125)

عَنْ مَالِكٍ، عَنْ زِيَادِ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كُرَيْزٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

أَفْضَلُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَأَفْضَلُ مَا قُلْتُهُ أَنَا، وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-8125.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-7907.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி தல்ஹா பின் உபைதுல்லா பின் கரீஸ் நபித்தோழர் அல்ல. தாபிஈ ஆவார். இடையில் நபித்தோழர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது முர்ஸலான செய்தி. எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
    இறப்பு ஹிஜ்ரி 676
    வயது: 45
    இமாம் அவர்கள், சொர்க்கவாசி என்று சுபச்செய்தி கூறப்பட்ட 10 நபித்தோழர்களில் ஒருவரான தல்ஹா பின் உபைதுல்லா என்று நினைத்து விட்டார். இது தவறு என இப்னுல் இராகீ அவர்கள் தனது நூலில் கூறியுள்ளார். (நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/21)

மேலும் பார்க்க: மாலிக்-572 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.