தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1987

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

1987. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தையும், இன்னொரு அத்தியாயத்தையும் எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் ‘இது நபிவழியும், உண்மையும் ஆகும்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: (ரஹ்)

தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)

طلحة بن عبد الله بن عوف

இறப்பு: ஹிஜ்ரி 97, மதீனா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அவ்ஃப் பின் அப்து அவ்ஃப் பின் அப்து பின் அல்ஹாரிஸ் பின் ஸுஹ்ரா பின் கிலாப் பின் முர்ரா

தந்தை பெயர்: அப்துல்லாஹ் பின் அவ்ஃப்

வம்சம்: அஸ்ஸுஹ்ரீ

புனைப்பெயர்: அபூ முஹம்மத், அபூ அப்துல்லாஹ், தல்ஹா அன்னதீ

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: ஹிஜ்ரி 25, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 97, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

தல்ஹா பின் அப்துல்லாஹ் ரஹ் ஒரு தாபிஈ ஆவார். இவர் ஹிஜ்ரி 25ல் மதீனாவில் பிறந்தார். இவர் பலமானவர், ஹதீஸ்களை அதிகம் அறிவித்தவர் மற்றும் அறிஞர் ஆவார்.

இவர் மதீனாவின் நீதிபதியாகவும் இருந்தார். இவர் மிகவும் கொடை வள்ளலாக இருந்தார். இவர் ஹிஜ்ரி 97ல் மதீனாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): உஸ்மான் பின் அஃப்பான் ரலி, ஸயீத் பின் ஸைத் ரலி, அப்துர்ரஹ்மான் பின் அம்ர், இப்னு அப்பாஸ் ரலி, அபூ ஹுரைரா ரலி, ஆயிஷா ரலி

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸஃத் பின் இப்ராஹீம், அஸ்ஸுஹ்ரீ, அபூ உபைதா பின் முஹம்மத் பின் அம்மார் பின் யாஸிர், முஹம்மத் பின் ஸைத் பின் அல்முஹாஜிர்

வேறு பெயர்கள்: தல்ஹா அன்னதீ, இப்னு அம் அபீஹி தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அவ்ஃப்


ஆதாரம்: muslimscholars.info (11043) · Should verify


أَخْبَرَنَا الْهَيْثَمُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ وَهُوَ ابْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ:

صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَسُورَةٍ وَجَهَرَ حَتَّى أَسْمَعَنَا، فَلَمَّا فَرَغَ أَخَذْتُ بِيَدِهِ، فَسَأَلْتُهُ فَقَالَ: «سُنَّةٌ وَحَقٌّ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1961.
Nasaayi-Shamila-1987.
Nasaayi-Alamiah-1961.
Nasaayi-JawamiulKalim-1971.



  • ஜனாஸா தொழுகையில் துணை ஸூரா ஓதுவது பற்றி வரும் செய்திகளை பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    போன்ற அறிஞர்கள் ஷாத் என்று கூறியுள்ளனர்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸயீ இமாம்

2 . ஹைஸம் பின் அய்யூப்

3 . இப்ராஹீம் பின் ஸஃத்

4 . ஸஃத் பின் இப்ராஹீம்

5 . தல்ஹா பின் அப்துல்லாஹ்

6 . இப்னு அப்பாஸ் (ரலி)


  • இந்தச் செய்தியை இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர். இவர்களில் சிலர் ஜனாஸாத் தொழுகையில் துணை ஸூராவை கூறாமல் அறிவித்துள்ளனர். சிலர் துணை ஸூராவை கூறி அறிவித்துள்ளனர்.

ஜனாஸாத் தொழுகையில் துணை ஸூராவை கூறாமல் அறிவித்தவர்கள் விவரம்:

1 . ஷாஃபிஈ இமாம்.

பார்க்க: முஸ்னத் ஷாஃபிஈ-586, அல்உம்மு-1798, குப்ரா பைஹகீ-6954,

2 . மன்ஸூர் பின் பஷீர் (மன்ஸூர் பின் அபூமுஸாஹிம்)

பார்க்க: இப்னு ஹிப்பான்-3072,


  • முஸ்னத் ஷாஃபிஈ-586.

مسند الشافعي – ترتيب سنجر (2/ 90):
586 – أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ قَالَ: ‌صَلَّيْتُ ‌خَلْفَ ‌ابْنَ ‌عَبَّاسٍ رضي الله عنه ‌عَلَى ‌جِنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، فَلَمَّا سَلَّمَ سَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ: سُنَّةٌ وَحَقٌّ

  • அல்உம்மு-1798.

1798 – أَخْبَرَنَا بِذَلِكَ إبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ وَجَهَرَ حَتَّى أَسْمَعَنَا، فَلَمَّا فَرَغَ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: سُنَّةٌ وَحَقٌّ.


ஜனாஸாத் தொழுகையில் துணை ஸூராவை கூறி அறிவித்தவர்கள் விவரம்:

1 . ஹைஸம் பின் அய்யூப்

பார்க்க: குப்ரா நஸாயீ-2125, நஸாயீ-1987,

2 . ஸுலைமான் பின் தாவூத்

பார்க்க: அல்முன்தகா-537,

3 . முஹ்ரிஸ் பின் அவ்ன்

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-2661, இப்னு ஹிப்பான்-3071,

4 . இப்ராஹீம் பின் ஸியாத்

பார்க்க: அல்முன்தகா-537,

5 . இப்ராஹீம் பின் ஹம்ஸா

பார்க்க: குப்ரா பைஹகீ-6954,

6 . முஹம்மத் பின் ஜஃபர் அல்வர்கானீ

பார்க்க: அல்அவ்ஸத் ஃபிஸ்ஸுனன்-3163,

7 . அப்துல்லாஹ் பின் அவ்ன்

பார்க்க: அல்அவ்ஸத் ஃபிஸ்ஸுனன்-3164,


  • அல்முன்தகா-537.

المنتقى لابن الجارود (ص: 140)
537 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، قَالَ: ثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْهَاشِمِيُّ، قَالَ: ثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ: ثَنِي أَبِي، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ فَجَهَرَ حَتَّى سَمِعْنَا فَلَمَّا انْصَرَفَ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ: «سُنَّةٌ وَحَقٌّ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: ثَنَا إِبْرَاهِيمُ بْنُ زِيَادٍ قَالَ: ثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ وَقَالَ: وَسُورَةٍ

  • அல்அவ்ஸத் ஃபிஸ்ஸுனன்-3163, 3164.

الأوسط في السنن والإجماع والاختلاف (5/ 437)
3163 – حَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْوَرْكَانِيُّ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ.

3164 – وَقَالَ مُوسَى: ثنا عَبْدُ اللهِ بْنُ عَوْفٍ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَوْفٍ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ، وَجَهَرَ بِهَا حَتَّى أَسْمَعَنَا، فَلَمَّا انْصَرَفَ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ؟ فَقَالَ: «سُنَّةٌ وَحَقِّ عُمَرَ»


இதிலிருந்து இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அதிகமானோர் துணை ஸூராவை கூறி அறிவித்துள்ளனர் என்பதால் இது தான் சரியானது போன்று வெளிப்பார்வையில் தெரிகிறது. ஆனால் இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களை விட மிக பலமானவர்களான ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஆகியோர் இப்ராஹீம் அவர்களின் தந்தை ஸஃத் பின் இப்ராஹீம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் துணை ஸூராவை குறிப்பிடாமல் அறிவித்துள்ளனர்.


இப்ராஹீமின் தந்தை ஸஃத் பின் இப்ராஹீம் அவர்களிடமிருந்து துணை ஸூராவை கூறாமல் அறிவித்தவர்கள்:

1 . ஷுஅபா

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2864, புகாரி-1335, குப்ரா நஸாயீ-2126, நஸாயீ-1988, அல்முன்தகா-534, ஹாகிம்-1324, குப்ரா பைஹகீ-6956,

2 . ஸுஃப்யான் ஸவ்ரீ

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6427, புகாரி-1335, அபூதாவூத்-3198, திர்மிதீ-1027, அல்அவ்ஸத் ஃபிஸ்ஸுனன்-3166, அல்முஃஜமுல் கபீர்-10809 , தாரகுத்னீ-1819 , ஹாகிம்-1425 ,


3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் இதல்லாத வேறு சில அறிவிப்பாளர்தொடர்களிலும் துணை ஸூராவை ஓதியதாக இடம்பெறவில்லை.

மற்ற அறிவிப்பாளர்தொடர்கள் பார்க்க: புகாரி-1335.


ஆய்வின் சுருக்கம்:

1 . இப்ராஹீம் பின் ஸஃத் அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கும் சில செய்திகளில் துணை ஸூரா கூறப்பட்டுள்ளது. சிலவற்றில் துணை ஸூரா பற்றி கூறப்படவில்லை.

2 . இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களை விட மிகவும் பலமானவர்களான ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஆகியோர் இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களின் தந்தையிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் துணை ஸூரா கூறப்படவில்லை.

3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக; மேற்கூறப்பட்டவர்கள் இடம்பெறாத மற்றவர்கள் அறிவிக்கும் செய்திகளிலும் துணை ஸூரா கூறப்படவில்லை.

4 . இந்தக் குறைகளால் தான் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும் இந்தச் செய்தியை பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.

இந்தக் காரணங்களால் தான் ஜனாஸா தொழுகையில் துணை ஸூரா ஓதுவது பற்றி வரும் செய்திகளை பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
போன்ற அறிஞர்கள் ஷாத் என்று கூறியுள்ளனர்.


மேலும் பார்க்க: புகாரி-1335.

நஸயீ இமாம்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹைஸம் பின் அய்யூப்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

இப்ராஹீம் பின் ஸஃத்

إبراهيم بن سعد بن إبراهيم

இறப்பு: ஹிஜ்ரி 183, பக்தாத்

தரம்: பலமானவர், ஆதாரம்


விபரங்கள்

இயற்பெயர்: இப்ராஹீம் பின் ஸஃத் பின் இப்ராஹீம் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் பின் அப்து அவ்ஃப் பின் அப்த் பின் அல்ஹாரிஸ் பின் ஸுஹ்ரா

தந்தை பெயர்: ஸஃத் பின் இப்ராஹீம்

வம்சம்: அல்குரஷீ, அல்அவ்ஃபீ

புனைப்பெயர்: அபூ இஸ்ஹாக்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, பக்தாத்

பிறப்பு: ஹிஜ்ரி 110

இறப்பு: ஹிஜ்ரி 183, பக்தாத்

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

இப்ராஹீம் பின் ஸஃத் பின் இப்ராஹீம் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரஹ் அவர்கள் அபூ இஸ்ஹாக் என்ற குன்யாவுடன் அறியப்பட்டவர். இவர் அஸ்ஸுஹ்ரீ, அல்மதனீ என்ற நிஸ்பாக்களையும் கொண்டவர். இவர் பலமானவர், ஆதாரம் என அறிஞர்களால் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் மதீனாவில் பிறந்து, பின்னர் பக்தாத்தில் வசித்தார். பக்தாத்தின் நீதிபதியாகவும் பணியாற்றினார். ஹிஜ்ரி 183ல் பக்தாத்தில் மரணித்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸஃத் பின் இப்ராஹீம், ஸாலிஹ் பின் கைஸான் அல்மதனீ, அஸ்ஸுஹ்ரீ, ஹிஷாம் பின் உர்வா, ஸஃப்வான் பின் ஸுலைம் அல்மதனீ, இப்னு இஸ்ஹாக், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், யஸீத் பின் அப்துல்லாஹ் பின் அல்ஹாத், அபூ ஸக்ர் ஹுமைத் பின் ஸியாத் அல்மதனீ, அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அகீல், அப்துல்மாலிக் பின் அர்ரபீஃ பின் ஸப்ரா, அல்வலீத் பின் கஸீர்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அல்-லைஸ் பின் ஸஃத், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், அப்துல்லாஹ் பின் முஸ்லிமா அல்கஅனபீ, ஹிஷாம் பின் அப்துல்மாலிக் அத்தயாலஸீ, யஹ்யா பின் யஹ்யா பின் புகைர், ஸஃத் பின் இப்ராஹீம் பின் ஸஃத், யஃகூப் பின் இப்ராஹீம் பின் ஸஃத், அஹ்மத் பின் ஹன்பல், அபூதாவூத் அத்தயாலஸீ, அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, யஸீத் பின் ஹாரூன், வக்கீஃ பின் அல்ஜர்ராஹ்

வேறு பெயர்கள்: இப்ராஹீம் பின் ஸஃத், இப்ராஹீம்


ஆதாரம்: muslimscholars.info (20150) · Should verify

ஸஃத் பின் இப்ராஹீம்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

தல்ஹா பின் அப்துல்லாஹ்

طلحة بن عبد الله بن عوف

இறப்பு: ஹிஜ்ரி 97, மதீனா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அவ்ஃப் பின் அப்து அவ்ஃப் பின் அப்து பின் அல்ஹாரிஸ் பின் ஸுஹ்ரா பின் கிலாப் பின் முர்ரா

தந்தை பெயர்: அப்துல்லாஹ் பின் அவ்ஃப்

வம்சம்: அஸ்ஸுஹ்ரீ

புனைப்பெயர்: அபூ முஹம்மத், அபூ அப்துல்லாஹ், தல்ஹா அன்னதீ

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: ஹிஜ்ரி 25, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 97, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

தல்ஹா பின் அப்துல்லாஹ் ரஹ் ஒரு தாபிஈ ஆவார். இவர் ஹிஜ்ரி 25ல் மதீனாவில் பிறந்தார். இவர் பலமானவர், ஹதீஸ்களை அதிகம் அறிவித்தவர் மற்றும் அறிஞர் ஆவார்.

இவர் மதீனாவின் நீதிபதியாகவும் இருந்தார். இவர் மிகவும் கொடை வள்ளலாக இருந்தார். இவர் ஹிஜ்ரி 97ல் மதீனாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): உஸ்மான் பின் அஃப்பான் ரலி, ஸயீத் பின் ஸைத் ரலி, அப்துர்ரஹ்மான் பின் அம்ர், இப்னு அப்பாஸ் ரலி, அபூ ஹுரைரா ரலி, ஆயிஷா ரலி

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸஃத் பின் இப்ராஹீம், அஸ்ஸுஹ்ரீ, அபூ உபைதா பின் முஹம்மத் பின் அம்மார் பின் யாஸிர், முஹம்மத் பின் ஸைத் பின் அல்முஹாஜிர்

வேறு பெயர்கள்: தல்ஹா அன்னதீ, இப்னு அம் அபீஹி தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அவ்ஃப்


ஆதாரம்: muslimscholars.info (11043) · Should verify

இப்னு அப்பாஸ் (ரலி)

عبد الله بن عباس

இறப்பு: ஹிஜ்ரி 68, தாயிஃப்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்

தந்தை பெயர்: அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப்

வம்சம்: குரைஷீ, ஹாஷிமீ

புனைப்பெயர்: அபூ அப்பாஸ், அல்ஹிப்ர், அல்பஹ்ர்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, தாயிஃப்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 3, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 68, தாயிஃப்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப் ரலி அவர்களின் மகனாவார். ஹிஜ்ரிக்கு முன் 3 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்த இவர், ஹிஜ்ரி 68 ஆம் ஆண்டு தாயிஃபில் மரணமடைந்தார். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு மார்க்க அறிவையும் குர்ஆன் விளக்கத்தையும் அருளுமாறு இருமுறை துஆ செய்தார்கள்.

இவர் தனது பரந்த அறிவின் காரணமாக 'அல்ஹிப்ர்' (அறிஞர்), 'அல்பஹ்ர்' (கடல்) என்று அழைக்கப்பட்டார். இவர் நபித்தோழர்களில் மிகப் பெரும் அறிஞர்களில் ஒருவராவார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப், உம்முல் ஃபழ்ல் லுபாபா பின்த் அல்ஹாரிஸ், மைமூனா பின்த் அல்ஹாரிஸ், அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான், அலீ பின் அபீதாலிப், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப், முஆத் பின் ஜபல், அபூதர் அல்ஃகிஃபாரீ, உபை பின் கஅப்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஜாஹித் பின் ஜப்ர், காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர், அதா பின் அபீரபாஹ், தாவூஸ் பின் கைஸான், வஹ்ப் பின் முனப்பிஹ், ஸயீத் பின் ஜுபைர், அலீ பின் அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அப்துல்லாஹ் பின் உமர், அபூத்துஃபைல் ஆமிர் பின் வாத்திலா, இக்ரிமா, அம்ர் பின் தீனார், நாஃபிஉ

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அபூ அப்பாஸ்


ஆதாரம்: muslimscholars.info (17) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.