தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1027

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

தல்ஹா பின் அப்தில்லாஹ் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும்போது ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை (சத்தமாக) ஓதினார்கள். அவர்களிடம் நான் இது பற்றிக் கேட்டபோது, இது நபிவழியில் உள்ளதாகும்’ என்றோ அல்லது ‘நபிவழியை நிறைவாக்குவதாகும்’ என்றோ கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

நபித்தோழர்கள் உள்ளிட்ட அறிஞர்களில் சிலர் இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டும் என்கிறார்கள். ஜனாஸா தொழுகையின் ஆரம்ப தக்பீரில் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை ஓத வேண்டும் என்ற கருத்தை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதுதான் ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரின் கூற்றாகும்.

அறிஞர்களில் வேறுசிலர், “ஜனாஸா தொழுகையில் இறைவனைப் புகழ்தல், நபி (ஸல்) அவர்களுக்காக ‘ஸலவாத்’ ஓதுதல், இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல் ஆகியவைதான் உள்ளன; அதில் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓதலாகாது” என்கின்றனர். இதுவே ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) உள்ளிட்ட கூஃபாவாசிகளின் கூற்றாகும்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான தல்ஹா பின் அப்தில்லாஹ் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் சகோதரரின் மகன் ஆவார். அன்னாரிடமிருந்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

(திர்மிதி: 1027)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ،

أَنَّ ابْنَ عَبَّاسٍ، صَلَّى عَلَى جَنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الكِتَابِ، فَقُلْتُ لَهُ، فَقَالَ: «إِنَّهُ مِنَ السُّنَّةِ، أَوْ مِنْ تَمَامِ السُّنَّةِ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ: يَخْتَارُونَ أَنْ يُقْرَأَ: بِفَاتِحَةِ الكِتَابِ بَعْدَ التَّكْبِيرَةِ الأُولَى، وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ، وَأَحْمَدَ، وَإِسْحَاقَ، وقَالَ بَعْضُ أَهْلِ العِلْمِ: لَا يُقْرَأُ فِي الصَّلَاةِ عَلَى الجَنَازَةِ، إِنَّمَا هُوَ ثَنَاءٌ عَلَى اللَّهِ، وَالصَّلَاةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالدُّعَاءُ لِلْمَيِّتِ، وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ، وَغَيْرِهِ مِنْ أَهْلِ الكُوفَةِ، وَطَلْحَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ هُوَ ابْنُ أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، رَوَى عَنْهُ الزُّهْرِيُّ


Tirmidhi-Tamil-948.
Tirmidhi-TamilMisc-948.
Tirmidhi-Shamila-1027.
Tirmidhi-Alamiah-948.
Tirmidhi-JawamiulKalim-946.




மேலும் பார்க்க: புகாரி-1335 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.