தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1425

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1425. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். நான் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இது நபிவழியில் உள்ளது என்றோ அல்லது இது முழுமையான நபிவழி என்றோ கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரஹ்)

தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)

طلحة بن عبد الله بن عوف

இறப்பு: ஹிஜ்ரி 97, மதீனா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அவ்ஃப் பின் அப்து அவ்ஃப் பின் அப்து பின் அல்ஹாரிஸ் பின் ஸுஹ்ரா பின் கிலாப் பின் முர்ரா

தந்தை பெயர்: அப்துல்லாஹ் பின் அவ்ஃப்

வம்சம்: அஸ்ஸுஹ்ரீ

புனைப்பெயர்: அபூ முஹம்மத், அபூ அப்துல்லாஹ், தல்ஹா அன்னதீ

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: ஹிஜ்ரி 25, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 97, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

தல்ஹா பின் அப்துல்லாஹ் ரஹ் ஒரு தாபிஈ ஆவார். இவர் ஹிஜ்ரி 25ல் மதீனாவில் பிறந்தார். இவர் பலமானவர், ஹதீஸ்களை அதிகம் அறிவித்தவர் மற்றும் அறிஞர் ஆவார்.

இவர் மதீனாவின் நீதிபதியாகவும் இருந்தார். இவர் மிகவும் கொடை வள்ளலாக இருந்தார். இவர் ஹிஜ்ரி 97ல் மதீனாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): உஸ்மான் பின் அஃப்பான் ரலி, ஸயீத் பின் ஸைத் ரலி, அப்துர்ரஹ்மான் பின் அம்ர், இப்னு அப்பாஸ் ரலி, அபூ ஹுரைரா ரலி, ஆயிஷா ரலி

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸஃத் பின் இப்ராஹீம், அஸ்ஸுஹ்ரீ, அபூ உபைதா பின் முஹம்மத் பின் அம்மார் பின் யாஸிர், முஹம்மத் பின் ஸைத் பின் அல்முஹாஜிர்

வேறு பெயர்கள்: தல்ஹா அன்னதீ, இப்னு அம் அபீஹி தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அவ்ஃப்


ஆதாரம்: muslimscholars.info (11043) · Should verify


أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الْوَاعِظُ بِبُخَارَى، ثنا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ الْوَاسِطِيُّ، ثنا أَحْمَدُ بْنُ سِنَانٍ، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، ثنا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ:

صَلَّى ابْنُ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، فَقُلْتُ لَهُ فَقَالَ: إِنَّهُ مِنَ السُّنَّةِ، أَوْ مِنْ تَمَامِ السُّنَّةِ

«هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِهِمَا، وَلَمْ يُخَرِّجَاهُ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1425.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-.



மேலும் பார்க்க: புகாரி-1335 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.