நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் குறைவு செய்தலும் இல்லை. (பிறருக்கு) ஸலாம் கூறுவதும் இல்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அஹ்மத் இமாம் கூறினார்கள்:
இந்த ஹதீஸின் பொருள் பற்றி என்னுடைய கருத்து என்னவெனில், தொழுகையில் நீங்கள் இருக்கும் போது (பிறருக்கு) ஸலாம் கூறக்கூடாது. பிறரும் உங்களுக்கு ஸலாம் கூறக்கூடாது என்பதாகும்.
ஒருவர் தொழுகையில் குறைவை ஏற்படுத்தி (அதை முழுமையாக நிறைவேற்றினோமா? இல்லையா? என்ற) சந்தேகத்துடன் செல்வது தொழுவதில் குறைவு செய்வதாகும்.
(அபூதாவூத்: 928)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا غِرَارَ فِي صَلَاةٍ، وَلَا تَسْلِيمٍ»
قَالَ أَحْمَدُ: «يَعْنِي فِيمَا أَرَى أَنْ لَا تُسَلِّمَ، وَلَا يُسَلَّمَ عَلَيْكَ، وَيُغَرِّرُ الرَّجُلُ بِصَلَاتِهِ فَيَنْصَرِفُ وَهُوَ فِيهَا شَاكٌّ»
Abu-Dawood-Tamil-793.
Abu-Dawood-TamilMisc-793.
Abu-Dawood-Shamila-928.
Abu-Dawood-Alamiah-793.
Abu-Dawood-JawamiulKalim-794.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
3 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ
4 . ஸுஃப்யான் ஸவ்ரீ
5 . அபூமாலிக்-ஸஃத் பின் தாரிக்
6 . அபூஹாஸிம்-ஸல்மான்
7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
1 . இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் சந்தேகமில்லாமல் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.
2 . ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஆவியா பின் ஹிஷாம் அவர்கள் சந்தேகத்துடன் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார் என்பதுடன் கருத்தையும் மாற்றி அறிவித்துள்ளார்.
1 . அபூமாலிக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.
2 . அபூமாலிக் அவர்களிடமிருந்து அறிவிக்கும், முஹம்மத் பின் ஃபுளைல் அவர்கள் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.
- இவர்களில் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் ஹதீஸ்களை நன்கு அறிந்தவர் என்பதாலும், முஆவியா பின் ஹிஷாம் அவர்களை விட மிகப்பலமானவர் என்பதாலும் நபியின் சொல் என்பதே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.
(ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் மாணவர்களில் மிகவும் முன்னுரிமை பெற்ற முதல் வகை பலமானவர்கள் 5 பேர். அவர்கள்:
1 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்கத்தான்
2 . வகீஃ பின் ஜர்ராஹ்
3 . இப்னுல் முபாரக்
4 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ
5 . அபூநுஐம்-ஃபள்ல் பின் துகைன்
என இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் கூறியதாக இப்னு அபூகைஸமா அறிவித்துள்ளார்.
பார்க்க: அல்கமால்-8/149, தஹ்தீபுல் கமால்-23/209, ஷரஹு இலலுத் திர்மிதீ-2/722)
- இவ்வாறே அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஃபுளைல் அவர்களை விட ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களே மிகப்பலமானவர் என்பதால் நபியின் சொல் என்பதே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும். - நபியின் சொல்லாக அறிவிப்பது கூடுதல் தகவல் ஆகும்; பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற விதியை இந்த இடத்தில் ஏற்றுக்கொள்வதற்கு தகுந்த காரணம் உள்ளது.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: அஹ்மத்-9937 , அபூதாவூத்-928 , 929 , முஸ்னத் பஸ்ஸார்-9748 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-1597 , ஹாகிம்-972 , குப்ரா பைஹகீ-3411 ,
- முஆவியா பின் ஹிஷாம் அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: அபூதாவூத்-929 , முஸ்னத் அபீ யஃலா-6206 , ஹாகிம்-973 , குப்ரா பைஹகீ-3412 ,
ஹதீஸின் கருத்து:
1 . இதில் இடம்பெறும் وَلَا تَسْلِيمٍ என்பது لا غرار என்பதுடன் சேர்ந்த வார்த்தை என்பதால் வலா தஸ்லீம என்று மொழிவதின்படி தொழுகையில் பிறருக்கு ஸலாம் கூறுவது இல்லை என்ற கருத்து கிடைக்கும்.
2 . وَلَا تَسْلِيمٍ என்பது في صلاة என்பதுடன் சேர்ந்த வார்த்தை என்பதால் வலா தஸ்லீமின் என்று மொழிவதின்படி ஸலாம் கூறுவதிலும், ஸலாமுக்கு பதில் கூறுவதிலும் குறைவு வைக்கக்கூடாது என்ற கருத்து கிடைக்கும். ஸலாம் கூறியவரின் வார்த்தையை திரும்ப கூறவேண்டும். அல்லது அதைவிட சிறந்தமுறையில் ஸலாம் கூற வேண்டும் என்ற (அல்குர்ஆன்: 4:86) வது இறைவசனத்தின் கருத்து இதில் உள்ளது.
சில அரபுமொழியியல் அறிஞர்கள் இரண்டு வகை கருத்தும் சரியானதே என்று கூறியிருந்தாலும் வேறு சில அறிஞர்கள் முதல் கருத்தே சரியானது என்று கூறியுள்ளனர்.
இந்த செய்தியின் விளக்கத்தை புரிய வைக்கவும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹதீஸின் கருத்து சேர்க்கப்பட்டுள்ளது.
விளக்கம் நன்றாக புரிந்தது
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கும் அருள் புரிவானாக!