தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-843

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “செல்வச் சீமான்கள் உயர்ந்த பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்)கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும், தங்களின் அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவழிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே!)” என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட (செல்வர்)வர்களை நீங்கள் தொட்டு விடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களைத் தொட இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர (அவர்களால் அச்சிறப்பை அடைய முடியாது).

(அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (ஸுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்; தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.


நாங்கள் இது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர், நாம் ஸுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும்” என்றனர். ஆகவே, நான் (அபூஸாலிஹ்) அவர்களிடமே திரும்பிச் சென்று இதுபற்றி கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன் என்று நான் துதிக்கிறேன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றையும் 33 தடவைக் கூறியதாக ஆகும்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம்: 10

(புகாரி: 843)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

جَاءَ الفُقَرَاءُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: ذَهَبَ أَهْلُ الدُّثُورِ مِنَ الأَمْوَالِ بِالدَّرَجَاتِ العُلاَ، وَالنَّعِيمِ المُقِيمِ يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَلَهُمْ فَضْلٌ مِنْ أَمْوَالٍ يَحُجُّونَ بِهَا، وَيَعْتَمِرُونَ، وَيُجَاهِدُونَ، وَيَتَصَدَّقُونَ، قَالَ: «أَلاَ أُحَدِّثُكُمْ إِنْ أَخَذْتُمْ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ، وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَانَيْهِ إِلَّا مَنْ عَمِلَ مِثْلَهُ تُسَبِّحُونَ وَتَحْمَدُونَ وَتُكَبِّرُونَ خَلْفَ كُلِّ صَلاَةٍ ثَلاَثًا وَثَلاَثِينَ»،

فَاخْتَلَفْنَا بَيْنَنَا، فَقَالَ بَعْضُنَا: نُسَبِّحُ ثَلاَثًا وَثَلاَثِينَ، وَنَحْمَدُ ثَلاَثًا وَثَلاَثِينَ، وَنُكَبِّرُ أَرْبَعًا وَثَلاَثِينَ، فَرَجَعْتُ إِلَيْهِ، فَقَالَ: تَقُولُ: «سُبْحَانَ اللَّهِ، وَالحَمْدُ لِلَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، حَتَّى يَكُونَ مِنْهُنَّ كُلِّهِنَّ ثَلاَثًا وَثَلاَثِينَ»


Bukhari-Tamil-843.
Bukhari-TamilMisc-843.
Bukhari-Shamila-843.
Bukhari-Alamiah-798.
Bukhari-JawamiulKalim-801.




இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . முஹம்மத் பின் அபூபக்ர்-அல்முகத்தமீ

3 . முஃதமிர் பின் ஸுலைமான்-அத்தைமீ

4 . உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ்

5 . ஸுமைய்-அல்குரஷீ

6 . அபூஸாலிஹ்-தக்வான்-அஸ்ஸம்மான்

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்


الكفاية في علم الرواية للخطيب البغدادي (ص223):
أَخْبَرَنِي ابْنُ الْفَضْلِ، أنا دَعْلَجٌ، أنا أَحْمَدُ بْنُ عَلِيٍّ، ثنا مُجَاهِدُ بْنُ مُوسَى ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ ، يَقُولُ: «‌إِذَا ‌حَدَّثَكُمُ ‌الْمُعْتَمِرُ ‌بْنُ ‌سُلَيْمَانَ ‌بِشَيْءٍ ‌فَاعْرِضُوهُ ، فَإِنَّهُ سَيِّءُ الْحِفْظِ»

تهذيب التهذيب (4/ 117):
وعن يحيى بن سعيد القطان قال: ‌إذا ‌حدثكم ‌المعتمر ‌بشيء فاعرضوه فإنه سيئ الحفظ.


 


இந்த புகாரி-843 இல் நபியின் சொல்லுடன் அறிவிப்பாளரின் சொல் முத்ரஜ் ஆக-இடைச்செருகலாக உள்ளதா? இல்லையா?

1 . மேற்கண்ட செய்தியின் கடைசிப் பகுதியின் அரபியை மட்டும் பார்த்தால் இது நபியின் சொல் போன்று இருக்கும். ஆனால் வேறு சில அறிவிப்பாளர்தொடர்களில் பார்க்கும் போது இது நபியின் சொல் அல்ல; இது ஸுமைய் என்ற அறிவிப்பாளரின் சொல்லாகும். சிலர் இதை தவறுதலாக முத்ரஜ் ஆக-இடைச்செருகலாக சேர்த்துவிட்டனர் என்று கருத தோன்றும்.

காரணம் இந்தச் செய்தியின் இறுதிபகுதியின் கருத்து கீழ்க்கண்ட முஸ்தக்ரஜ் அபூஅவானா-2086, முஸ்லிம்-1044, குப்ரா பைஹகீ-3024 ஆகியவற்றில் ஸுமைய் அவர்களின் சொல்லாக வந்துள்ளது. லைஸ் பின் ஸஃத் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் குதைபா அவர்களைத் தவிர மற்றவர்களான ஷுஐப் பின் லைஸ், ஸயீத் பின் அபூமர்யம் ஆகியோர் இவ்வாறு ஸுமைய் அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்ற சில அறிஞர்கள் இதன்படி இதில் முத்ரஜ் உள்ளது என்று கூறியுள்ளனர். (ஸுமைய் அவர்கள் கூறியிருக்கும் வாசக அமைப்பை நுணுக்கமாக கவனித்திருக்க வேண்டும்)

2 . ஆனால் முஸ்லிம்-1044 எண்ணில் உள்ள தகவலை விட கூடுதலாக முஸ்தக்ரஜ் அபூஅவானா-2085 வில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களே நபி (ஸல்) அவர்களிடம் சென்றதாகவும், நபி (ஸல்) அவர்களே இந்த விளக்கத்தை கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது. இதன்படி இதில் இடைச்செருகல் இல்லை என்றும், ஸுமைய் அவர்களின் நிகழ்வு வேறு ஒரு நிகழ்வு என்றும் சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இதன்படி முடிவு செய்யும் காரணம் முஃதமிர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இருவர் இவ்வாறு அறிவித்துள்ளனர். 1. ஆஸிம் பின் நள்ர், 2 . ஸவ்வார் பின் அப்துல்லாஹ்.

(என்றாலும் இந்த அறிவிப்பாளர்தொடரில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று இடம்பெற்றிருப்பது தவறாகும்). மேலும் இவர்கள் புகாரி-843, முஸ்தக்ரஜ் அபூஅவானா-2085 ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள வாசக அமைப்பான,

حَتَّى يَكُونَ مِنْهُنَّ كُلِّهِنَّ ثَلاَثًا وَثَلاَثِينَ – என்பது ஒவ்வொன்றையும் தனித்தனியாக கூறுவதை குறிக்கும் என்றும் அதாவது ஸுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்து லில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 33 தடவை என்று விளக்கம் கூறுகின்றனர்.

3 . ஆனால் இந்த விளக்கம் நமக்கு ஏற்புடையதாக தெரியவில்லை. வாசக அமைப்பைப் பார்க்கும் போது 3 திக்ருகளையும் மொத்தமாக சேர்த்து 33 தடவை கூற வேண்டும் என்றே தெரிகிறது.

4 . உபைதுல்லாஹ் பின் உமர் அவர்கள் வழியாக வரும் செய்திகளில் முஃதமிர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் அப்துல்அஃலா அவர்களின் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் 3 திக்ருகளையும் தனித்தனியாக கூறியதாக வந்துள்ளது.

(பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8960)


مستخرج أبي عوانة (1/ 557)
2085 – حَدَّثَنَا فَضْلَكُ الرَّازِيُّ قَالَ: ثَنَا عَاصِمُ بْنُ النَّضْرِ قَالَ: ثَنَا الْمُعْتَمِرُ، ح. وَحَدَّثَنَا أَبُو زُرْعَةَ الدِّمَشْقِيُّ قَالَ: ثَنَا سَوَّارُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: ثَنَا الْمُعْتَمِرُ كِلَاهُمَا قَالَا: ثَنَا عُبَيْدُ اللَّهِ يَعْنِي ابْنَ عُمَرَ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ الْفُقَرَاءُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالدَّرَجَاتِ الْعُلَى وَالنَّعِيمِ الْمُقِيمِ يُصَلُّونَ كَمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَلَهُمْ فُضُولُ أَمْوَالٍ يَحُجُّونَ وَيَعْتَمِرُونَ وَيُجَاهِدُونَ وَيَتَصَدَّقُونَ، فَقَالَ: «أَلَا أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِذَا أَخَذْتُمْ بِهِ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ، وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَانَيْهِ إِلَّا أَحَدٌ عَمِلَ بِمِثْلِ عَمَلِكُمْ، تُسَبِّحُونَ وَتَحْمَدُونَ وَتُكَبِّرُونَ خَلْفَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ» ، فَاخْتَلَفْنَا بَيْنَنَا فَقَالَ بَعْضُنَا: يُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ، قَالَ: فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ حَتَّى يَكُونَ مِنْهُنَّ كُلُّهُنَّ ثَلَاثٌ وَثَلَاثِونَ»


مستخرج أبي عوانة (1/ 558)
2086 – حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ قَالَ: ثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ قَالَ: أنبا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ فُقَرَاءَ الْمُهَاجِرِينِ أَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: ذَهَبَ أَهْلُ الدُّثُورِ وَالْأَمْوَالِ بِالدَّرَجَاتِ الْعُلَى وَالنَّعِيمِ الْمُقِيمِ، قَالَ: «وَمَا ذَاكَ؟» قَالُوا: يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَتَصَدَّقُونَ وَلَا نَتَصَدَّقُ، وَيُعْتِقُونَ وَلَا نُعْتِقُ، قَالَ: «أَفَلَا أُعَلِّمُكُمْ شَيْئًا تُدْرِكُونَ بِهِ مَنْ سَبَقَكُمْ وَتَسْبِقُونَ بِهِ مَنْ بَعْدَكُمْ، وَلَا يَكُونُ أَحَدٌ أَفْضَلَ مِنْكُمْ إِلَّا مَنْ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُمْ؟» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «تُسَبِّحُونَ وَتُكَبِّرُونَ وَتَحْمَدُونَ دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ»
وَقَالَ سُمَيٌّ: فَحَدَّثْتُ بِذَلِكَ بَعْضَ أَهْلِي فَقَالَ: وَهِمْتَ إِنَّمَا قَالَ لَكَ: تُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَتَحْمَدُ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتُكَبِّرُ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ،
فَرَجَعْتُ إِلَى أَبِي صَالِحٍ فَقُلْتُ ذَلِكَ لَهُ، فَأَخَذَ بِيَدِي وَقَالَ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ، حَتَّى يَبْلُغَ مِنْ جَمِيعِهِمْ ثَلَاثٌ وَثَلَاثِينَ،
ثُمَّ قَالَ أَبُو صَالِحٍ: فَرَجَعَ فُقَرَاءُ الْمُهَاجِرِينَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ سَمِعَ إِخْوَانُنَا أَهْلُ الْأَمْوَالِ بِمَا فَعَلْنَا فَفَعَلُوا مِثْلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيَهُ مَنْ يَشَاءُ».
فَقَالَ مُحَمَّدُ بْنُ عَجْلَانَ: فَذَكَرْتُ ذَلِكَ لِرَجَاءِ بْنِ حَيْوَةَ فَحَدَّثَنِي بِمِثْلِهَا، عَنْ أَبِي صَالِحٍ وَقَالَ: صَدَقَ سُمَيٌّ

அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்கள் கூறியதாவது:

ஏழை முஹாஜிர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “செல்வந்தர்கள் உயர்ந்த அந்தஸ்துகளையும் நிலையான இன்பங்களையும் தட்டிச் சென்று விடுகிறார்கள்” என்று முறையிட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள்; நாங்கள் நோன்பு நோற்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கிறார்கள்; ஆனால், அவர்கள் தர்மம் செய்கிறார்கள், எங்களால் தர்மம் செய்ய முடிவதில்லை; அவர்கள் அடிமைகளை விடுதலை செய்கிறார்கள், எங்களால் முடிவதில்லை” என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு ஒரு விஷயத்தைக் கற்றுத்தரட்டுமா? அதன் மூலம் உங்களுக்கு முன்னால் சென்றவர்களை நீங்கள் பிடித்துவிடலாம்; உங்களுக்குப் பின்னால் வருபவர்களை நீங்கள் முந்திவிடலாம். நீங்கள் செய்வதைப் போன்று மற்றவர்கள் செய்தாலே தவிர, உங்களை விடச் சிறந்தவர் எவரும் இருக்க முடியாது” என்று கூறினார்கள்.

அதற்கு அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! (கற்றுத் தாருங்கள்)” என்றனர். நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்தி மூன்று முறை சுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர் மற்றும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுங்கள்” என்றார்கள்.


ஸுமைய் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“இதை நான் எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் சொன்னபோது, அவர் ‘நீ தவறாக விளங்கிவிட்டாய். அபூஸாலிஹ் அவர்கள் முப்பத்தி மூன்று முறை ஸுப்ஹானல்லாஹ், முப்பத்தி மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ், முப்பத்தி மூன்று முறை அல்லாஹு அக்பர் என்றே உனக்கு கூறியிருப்பார்’ என்றார். உடனே நான் அபூஸாலிஹ் அவர்களிடம் சென்று இது குறித்துக் கேட்டேன். அவர் எனது கையைப் பிடித்துக் கொண்டு, ‘அல்லாஹு அக்பர், ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் – இவை ஒவ்வொன்றும் முப்பத்தி மூன்று முறை வரும் வரை கூற வேண்டும்’ என்றார்.”

பின்னர் அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“அந்த ஏழை முஹாஜிர்கள் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! செல்வந்தர்களான எம் சகோதரர்கள் நாங்கள் செய்வதைக் கேள்விப்பட்டு, அவர்களும் அவ்வாறே செய்கிறார்களே!’ என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அது அல்லாஹ்வின் அருளாகும்; அவன் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான்’ என்று கூறினார்கள்.”

முஹம்மத் பின் அஜ்லான் (ரஹ்) கூறுகிறார்கள்:

“நான் இது குறித்து ரஜாஉ பின் ஹைவா அவர்களிடம் குறிப்பிட்டேன். அவரும் அபூஸாலிஹ் வழியாக இதே போன்றே எனக்கு அறிவித்தார். மேலும், ஸுமைய் அவர்கள் உண்மையைத்தான் கூறினார் என்றும் குறிப்பிட்டார்.


மேலும் பார்க்க: முஸ்லிம்-1044.

1 comment on Bukhari-843

  1. புஹாரி 843 ஹதீஸ் படி சுபானல்லாஹ்,அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் என்று சேர்த்து சொல்லவேண்டுமா தனித்தனியா சொல்ல வேண்டுமா?

    https://onlinepj.co.in/videos/?id=950550366

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.