தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2399

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

2399. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَا يَزَالُ البَلَاءُ بِالمُؤْمِنِ وَالمُؤْمِنَةِ فِي نَفْسِهِ وَوَلَدِهِ وَمَالِهِ حَتَّى يَلْقَى اللَّهَ وَمَا عَلَيْهِ خَطِيئَةٌ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2323.
Tirmidhi-Shamila-2399.
Tirmidhi-Alamiah-2323.
Tirmidhi-JawamiulKalim-2336.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41980-முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா நடுத்தரமானவர்.

பார்க்க: ராவிபெயர்-41980-முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா.


இந்தச் செய்தியை அபூஸலமா அவர்களிடமிருந்து, பலமான அறிவிப்பாளர் அதீ பின் அதீயும் அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான ஹதீஸாகும்.

பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-494.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-7859, 9811, அல்அதபுல் முஃப்ரத்-494, திர்மிதீ-2399, ஷுஅபுல் ஈமான்-9376, …


2 . ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2398.


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-27079,

முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா அல்லைஸீ

محمد بن عمرو بن علقمة بن وقاص

இறப்பு: ஹி 145.

தரம்: ஸதூக்-நடுத்தரமானவர். சில அறிவிப்புகளை தவறாக அறிவித்துள்ளார்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: அம்ர் பின் அல்கமா

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்

குலம்: அல்லைஸீ, அல்மதனீ, அல்ஹிஜாஸீ

இறப்பு: ஹிஜ்ரீ-145

கால கட்டம்: 6.


முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா அவர்களின் அறிவிப்பை புகாரீ இமாம் 2 செய்தியிலும், முஸ்லிம் இமாம் 10 செய்திகளிலும் துணை ஆதாரமாக பதிவு செய்துள்ளனர்.

(பார்க்க: புகாரி-782, 3356, முஸ்லிம்-1452)

மேலும் பல ஹதீஸ்நூல்களின் ஆசிரியர்கள் இவர் இடம்பெறும் செய்திகளை பதிவு செய்துள்ளனர்.

அப்துல்லாஹ் பின் முபாரக், முஹம்மது பின் அப்துல்லாஹ், அபூஹாதிம், திர்மிதீ, நஸாயீ, இப்னு குஸைமா, இப்னு அதீ போன்ற பல அறிஞர்கள் இவரைப்பற்றி சுமாரானவர் என்று கூறியுள்ளனர். இவரின் அறிவிப்புகளை ஆதாரமாக எடுத்துள்ளனர்.

மாலிக் இமாம், யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், இப்ராஹீம் பின் யஃகூப் அல்ஜவ்ஸஜானீ போன்றோர் (இவரின் சில அறிவிப்புகளில் ஏற்பட்ட தவறினால்) இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளனர்.

(யஹ்யா பின் ஸயீத் அவர்கள் ஆரம்பத்தில் இவரை விமர்சித்தாலும் பிறகு இவரிடமிருந்து ஹதீஸை அறிவித்தார் என்று திர்மிதீ இமாம் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜாமிஉ ஃபில்ஜர்ஹி வத்தஃதீல்-4090)

இப்னு மயீன் அவர்கள் இவர் பலமானவர் என்று கூறியதாக அஹ்மத் பின் அபூமர்யம் கூறியுள்ளார்.

இப்னு மயீன் அவர்கள் இவர் அபூஸலமா வழியாக தவறாக அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார். அதாவது இவர் ஒரு நேரம் அபூஸலமா கூறினார் என்றும், மற்றொரு நேரம் அபூஸலமாவிடமிருந்து அபூஹுரைரா (ரலி) வழியாகவும் ஹதீஸை அறிவித்தார். இதனால் மக்கள் இவரிடம் ஹதீஸைக் கேட்பதில்லை என்று இப்னு மயீன் அவர்கள் கூறியதாக அபூபக்ர் பின் அபூகைஸமா அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/30, தஹ்தீபுல் கமால்-26/212, தாரீகுல் இஸ்லாம்-3/973, ஸியரு அஃலாமின் நுபலா-6/136, அல்காஷிஃப்-4/177, தஹ்தீபுத் தஹ்தீப்-3/662)

இப்னு மயீன் அவர்கள் விமர்சித்தது இவர், அபூஸலமா வழியாக அறிவிக்கும் தஃப்ஸீர் குறித்த செய்தியின் விசயத்தில் தான் என்று தெரிகிறது...

(இந்த விமர்சனத்தின்படி அபூஸலமா —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இவர் அறிவித்தால் இவர் போன்று மற்றவர்கள் அறிவித்துள்ளார்களா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு மற்றவர்கள் அறிவித்தால் இவரின் செய்தி ஏற்கப்படும். அவ்வாறு மற்றவர்கள் அறிவிக்காவிட்டால் இவரின் செய்தி மறுக்கப்படும் என்றும் சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இவரின் அறிவிப்புகளை ஆய்வு செய்த நடுநிலையான ஹதீஸ்கலை அறிஞர்களின் பார்வையில் சுமாரானவர் என்று கருதப்படுகிறார். எனவே தான் நவவீ, தஹபீ, இப்னு ஹஜர் போன்ற பல அறிஞர்கள் இவரின் செய்திகள் ஹஸன் தரத்தில் அமைந்தவை என்று கூறுவதாக அல்பானீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-எண்-203)

இவர் அறிவிக்கும் செய்திகள் ஹஸன் தரம் என்பதால் இதே செய்தி, வேறு சரியான அறிவிப்பாளர்தொடரிலோ அல்லது ஹஸன் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்தொடரிலோ வந்தால் இவரின் அறிவிப்பு ஸஹீஹுன் லிகைரிஹீ-துணை சான்றால் சரியானது என்ற தரத்தை அடையும் என்பது ஹதீஸ்கலை விதிப்படி உள்ள சட்டமாகும். எனவே தான் ஒரு செய்தியை முஹம்மது பின் அம்ர் போன்று மற்ற சரியான அறிவிப்பாளர்கள் அறிவித்திருந்தால் இவரின் செய்தியை ஹஸன் ஸஹீஹ் என்று அல்பானீ அவர்கள் கூறுவார்.

இப்னு ஹஜர் அவர்கள் முன்சென்ற அறிஞர்களின் குறை, நிறை விமர்சனத்தின் அடிப்படையில் இவரைப்பற்றி ஸதூக்-நடுத்தரமானவர், என்றாலும் சில அறிவிப்புகளில் தவறுசெய்தவர் என்று கூறியுள்ளார்.

இப்னு ஹஜர் அவர்கள், இவர் நினைவாற்றலில் சிறிது குறையுள்ளவர் என்பதால் இவரின் செய்திகள் ஹஸன் தரம் என்றும், இவர் மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவித்தால் அது ஷாத் ஆகும் என்று கூறியுள்ளார்..

(நூல்கள்: தக்ரீபுத் தஹ்தீப்-1/884, துஹ்ஃபதுல் லபீப்-201, 2/58, அல்மஸாபீஹ்-57)

இன்ஷா அல்லாஹ் இவரைப் பற்றிய கூடுதல் தகவல் பிறகு சேர்க்கப்படும்.

9 comments on Tirmidhi-2399

  1. அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸின் அரபி மூலத்துடைய அடிக்குறிப்பில் «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதன் தரம் பற்றிய தலைப்பில் பலமான செய்தி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஹசன் என்பதற்கும், சஹீஹ் என்பதற்கும் வித்தியாசம் இருப்பதால் இந்த ஹதீஸின் தரத்தை எப்படி புரிந்துக் கொள்வது?

    ஹசன் சஹீஹ் என்றால் ஹசனை விட தரம் கூடியதா?

    1. வ அலைக்கும் ஸலாம்.
      1 . திர்மிதீ இமாம் அவர்களின் ஹஸன் ஸஹீஹ் என்ற தரத்தைக் குறித்து பல விளக்கங்களை அறிஞர்கள் கூறியுள்ளனர். இப்னுஸ் ஸலாஹ் அவர்களின் கருத்து ஒரு செய்தியின் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரமாக இருந்து அந்தக் கருத்து வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்தால் திர்மிதீ இமாம் இவ்வாறு கூறுவார் என்பதாகும்.
      2 . அதன்படி நாம் சரியான ஹதீஸ்களுக்கு (ஹஸன், பலமான செய்தி) கருத்தைக் கவனித்து தரம் தருகிறோம். வேறு வழியில் செய்தி சரியாக இருந்து அதன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமாக இருந்தால் அதை இஸ்னாதுஹு ளஈஃப் என்று குறிப்பிடுகிறோம்.
      3 . அனைத்து அறிவிப்பாளர்தொடரும் ஹஸன் தரத்தில் இருக்கும்போது ஹஸன் தரம் என்றே தரம் குறிப்பிடுவோம். (இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்)

  2. ஜஸாக்கல்லாஹு ஹைரன். இந்த திர்மிதீ 2399 – வது ஹதீஸ் ஸஹீஹ் லிஃகைரிஹீ என்று சொல்கிறீர்களா?

    1. ஆம், அல்அதபுல் முஃப்ரத்-494 பலமான செய்தி என்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ.

      1. இதை ஹஸன் லிஃகைரிஹீ என்று சொல்லக்கூடாதா?

        ஸஹீஹ் லிஃகைரிஹீ என்பதற்கும் ஹஸன் லிஃகைரிஹீ என்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை சொல்ல முடியுமா?

  3. குறைந்த அளவு பலவீனமான செய்திகள் இரண்டு வந்தால் அதை ஹஸன் லிஃகைரிஹீ என்று கூறுவார்கள். விரிவான விளக்கத்தை ஹதீஸ்கலை பகுதியில் ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்றால் என்ன? என்ற கட்டுரையை பார்க்கவும்.

    1. இன்ஷா அல்லாஹ் அந்தக் கட்டுரையை படிக்கிறேன். ஆனால் ஸஹீஹ் லிஃகைரிஹீ என்பதற்கும் ஹஸன் லிஃகைரிஹீ என்பதற்கும் உள்ள வித்தியாசம் உள்ளதா அல்லது இரண்டும் ஒன்றுதானா என்பதை மட்டும் தயவுசெய்து சொல்லுங்கள்

      1. இரண்டும் ஒன்று அல்ல. ஹஸன் தர செய்தியை வேறு ஹஸன் தர செய்தி வரும்போது, அல்லது ஸஹீஹ் செய்தி வரும்போது ஸஹீஹ் லிஃகைரிஹீ என்ற வழக்கத்தை நாம் கடைப்பிடிக்கிறோம்.

        (பலவீனமான ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடரில் வந்தாலும் அதற்கு ஹஸன் லிஃகைரீ என்றும், ஸஹீஹ் லிஃகைரிஹீ என்றும் சிலர் கூறுவார்கள். இவ்வாறே ஒரு செய்தி ஸஹீஹான, ஹஸன் தர அறிவிப்பாளர்தொடரில் வந்து அந்த கருத்து பலவீனமான அறிவிப்பாளர்தொடரில் இருந்தால் பலவீனமான அறிவிப்பாளர்தொடருக்கு ஹஸன் லிஃகைரிஹீ என்றும் சிலர் கூறுவார்கள். இந்த வழக்குச் சொல்லை நாம் கடைப்பிடிக்கவில்லை)

        கருத்து பலவீனமானது என்றால் பலவீனமான செய்தி என்றும், கருத்து சரியாக இருந்து பலவீனமான அறிவிப்பாளர்தொடர் என்றால் இஸ்னாதுஹு ளயீஃப் என்றும் குறிப்பிடுவோம்.

        1. அல்ஹம்துலில்லாஹ், இது போதுமான விளக்கம். ஜஸாக்கல்லாஹ் ஹைரன் கஸீரா

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.