தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2398

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான். ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.

(திர்மிதி: 2398)

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمِ ابْنِ بَهْدَلَةَ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: «الأَنْبِيَاءُ ثُمَّ الأَمْثَلُ فَالأَمْثَلُ، فَيُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ، فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلَاؤُهُ، وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ، فَمَا يَبْرَحُ البَلَاءُ بِالعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الأَرْضِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
وَفِي البَاب عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأُخْتِ حُذَيْفَةَ بْنِ اليَمَانِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سُئِلَ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: «الأَنْبِيَاءُ، ثُمَّ الأَمْثَلُ فَالأَمْثَلُ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2322.
Tirmidhi-Shamila-2398.
Tirmidhi-Alamiah-2322.
Tirmidhi-JawamiulKalim-2335.




إسناده حسن رجاله ثقات عدا عاصم بن أبي النجود الأسدي وهو صدوق حسن الحديث (جوامع الكلم)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20386-ஆஸிம் பின் பஹ்தலா-ஆஸிம் பின் அபுன் நஜூத் அவர்களை, புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இருவரும் வேறு அறிவிப்பாளருடன் இணைத்து, துணை ஆதாரமாகக் கூறியுள்ளனர். இவரின் செய்திகளை தனியாக பதிவு செய்யவில்லை.

(பார்க்க: புகாரி-49764977 , முஸ்லிம்-2175)

  • இவர் குர்ஆனை ஓதும் முறைகளையும், குறிப்பிட்ட இடங்களில் எந்த எழுத்துக்களை வைத்து ஓத வேண்டும் என்பதையும் நன்கு அறிந்தவர் என அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ, இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் கூறியுள்ளனர். (இவரிடமிருந்து ஹஃப்ஸ் அவர்கள் அறிவிக்கும் ஓதும்முறைப்படியே நாம் குர்ஆனை ஓதிவருகிறோம்.)
  • இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அபூஸுர்ஆ போன்றோர் இவரை பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இவர் பலமானவர் என்றாலும் இவரின் செய்தியில் குளறுபடி உள்ளது என யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அவர்கள் கூறியுள்ளார்.
  • நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்கள், இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார்.
  • ஷுஃ-பா, இஸ்மாயீல் பின் உலய்யா, அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    பஸ்ஸார், உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோர் இவர் நினைவாற்றலில் குறையுள்ளவர் என்று கூறியுள்ளனர்.
  • ஹம்மாத் பின் ஸலமா அவர்கள், இவர் கடைசி வருடத்தில் மூளை குழம்பிவிட்டார் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அவர்கள், இவர் கடைசிகாலம் வரை பலமானவராக இருந்தார் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1887, தஹ்தீபுல் கமால்-3002, இக்மாலு தஹ்தீபில் கமால்-2619, தஹ்தீபுத் தஹ்தீப்-2/250, அத்தபகாத்…)

  • இவரைப் பற்றி தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், கிராஅத்தில் இவரை ஆதாரமாக ஏற்கப்படும். ஹதீஸ் விசயத்தில் இவர் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் இஸ்லாம்-3/435)

  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரைப் பற்றி ஸதூகுன் லஹூ அவ்ஹாம்-இவர் நம்பகமானவர் என்றாலும் சில இடங்களில் தவறாக அறிவித்துள்ளார் என்று 12 வகையினரில் 5வது வகையினரில் கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-3071)

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் இந்த தீர்ப்பின் படி இவர் அறிவிக்கும் செய்திகளைப் போன்று மற்றவர்கள் அறிவித்திருந்தால் அது ஏற்கப்படும். இவர் தனித்து அறிவித்திருந்தால் அது பலவீனமாகும் என்று சிலர் கூறுகின்றனர்.

தக்ரீபை ஆய்வு செய்தவர்களில் ஒருவரான ஷுஐப் அர்னாவூத் அவர்கள், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் இந்த விமர்சனம் சரியானதல்ல. இவரைப் பற்றி பல அறிஞர்கள் பலமானவர்கள் என்று கூறியுள்ளனர். இவரிடம் ஹதீஸை அறிவிப்பதில் சிறிய தவறே ஏற்பட்டுள்ளது. எனவே இவர் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்ரீரு தக்ரீபித் தஹ்தீப்-3054)


அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இவரின் செய்திகளை ஹஸன் தரம் என்றே முடிவு செய்துள்ளார்.


  • தற்கால ஹதீஸ்கலை அறிஞர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் ஸஃத் அவர்களின் கருத்து:

இவரின் ஹதீஸ்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

1 . இவரின் ஆசிரியர்களில் இவருக்கு மிக நெருக்கமான ஆசிரியர்கள் வழியாக இவர் அறிவிக்கும் செய்திகள்.

அந்த அறிவிப்பாளர்தொடரில் வேறு விமர்சனம் இல்லாதபோது இவை பலமானவை; ஹஸன் தரத்தில் அமைந்தவை-சரியானவை. (உதாரணமாக: ஸிர்ரு பின் ஹுபைஷ், அபூவாயில் போன்ற ஆசிரியர்கள்).

2 . மற்றவர்கள் வழியாக அறிவிக்கும் செய்திகள்.

இவை வேறு பலமான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமில்லாமல் வரும் செய்தியாக இருந்து இவரிடம் தவறு ஏற்படவில்லையென்றால் அதுவும் ஹஸன் தரத்தில் உள்ள செய்தி-சரியானவை.

3 . இவர் அபூஸாலிஹ்-தக்வான்-ஸம்மான் வழியாக அறிவிக்கும் செய்திகள்.

இவைகளில் தான் அதிகம் தவறுகள் உள்ளன; அவைகள் ஆய்வுக்குரிய செய்திகள். இந்தக் கருத்தை ஆரம்பகால ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறவில்லையென்றாலும் உண்மை அது தான்.

(நூல்: அல்இமாம் ஆஸிம் இன்தல் முஹத்திஸீன், பக்கம்: 37)


  • என்றாலும் ஹம்மாத் பின் ஸலமா அவர்கள், இவர் காலையில் ஸிர்ரு வழியாகவும், மாலையில் அபூவாயில் வழியாகவும் அறிவிப்பார் என்று விமர்சித்திருப்பதையும், இவர் ஸிர்ருவிடமிருந்தும், அபூவாயிலிடமிருந்தும் மாறி மாறி அறிவிப்பார் என்ற இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் அவர்களின் கூற்றையும் இப்னு ரஜப் அவர்கள் பதிவு செய்து இவர் ஸிர்ரு, அபூவாயிலிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் குளறுபடியானவை என்று கூறியுள்ளார்.

(நூல்: ஷரஹு இலலித் திர்மிதீ-2/788).

  • ஹம்மாத் பின் ஸலமா அவர்களின் இந்த விமர்சனம் குறை அல்ல. காரணம் ஆஸிம் அவர்கள் ஸிர்ரு, அபூவாயில் இருவரிடமும் அடிக்கடி ஹதீஸை கேட்பவராக இருந்துள்ளார். அதனால் இவர் இந்த இருவரிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

இவரின் ஹதீஸ்களை ஆய்வு செய்த சில அறிஞர்கள் இவரிடம் ஏற்பட்ட தவறுகளை மூன்று வகையாக பிரித்துள்ளனர்.

1 . ஸிர்ரு, அபூவாயில் வழியாக மாறி மாறி அறிவித்திருப்பது.

2 . பலவீனமானவர்கள், அறியப்படாதவர்கள் வழியாக ஹதீஸ்களை அறிவித்திருப்பது.

3 . அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த (முன்கதிஃ, முர்ஸல் கஃபீ)  செய்திகளை அறிவித்திருப்பது.

மூன்று தவறுகளில் முதல் தவறு என்பது அது தவறல்ல. மற்ற இரண்டு தவறுகள் உள்ள செய்திகள் பலவீனமானவைகளாகும்.

  • சிலர், இவர் விசயத்தில் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    போன்ற அறிஞர்களின் நடைமுறையின்படி இவரின் அறிவிப்புகளை மற்ற பலமான அறிவிப்பாளர்களுடன், ஒப்பிட்டு பார்த்தே ஏற்கவேண்டும். தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமாகும் என்றும் கூறியுள்ளனர்.

இந்தக் கருத்தில் இப்னு ஹிப்பான்-2920 எண்ணில் ஸஃத் (ரலி) அவர்களிடமிருந்து முஸய்யிப் பின் ராஃபிஉ அறிவிக்கும் செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (4/ 316)

– وَسُئِلَ عَنْ حَدِيثِ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءٍ الْحَدِيثَ.

فَقَالَ: حَدَّثَ بِهِ الْعَلَاءُ بْنُ الْمُسَيَّبُ، وَاخْتُلِفَ عَنْهُ؛

فَرَوَاهُ خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ.

وَرَوَاهُ الْقَاسِمُ بْنُ مَالِكٍ، وَالْمُحَارِبِيُّ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ.

وَقَالَ ابْنُ الْمُفَضَّلِ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدٍ.

وَالصَّوَابُ عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ.

وَكَذَلِكَ رَوَاهُ شُعْبَةُ، وَزَائِدَةُ، وَحَمَّادُ بْنُ زَيْدٍ، وَإِسْرَائِيلُ، عَنْ عَاصِمٍ.

وَرَوَاهُ ابْنُ عُلَيَّةَ، عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ، عَنْ عَاصِمٍ.
وَحَدَّثَ مُحَمَّدُ بْنُ مُهَاجِرٍ أَخُو حُنَيْفٍ، عَنِ ابْنِ عُلَيَّةَ، عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ، عَنْ عَاصِمٍ.
وَوَهِمَ فِيهِ، وَإِنَّمَا رَوَاهُ ابْنُ عُلَيَّةَ، عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ.
وَرَوَاهُ أَيْضًا سِمَاكُ بْنُ حَرْبٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ
حَدَّثَ بِهِ عَنْ شَرِيكٍ.
وَالْمَحْفُوظُ حَدِيثُ عَاصِمٍ، عَنْ مُصْعَبٍ.

என்றாலும் ஆஸிம் பின் பஹ்தலா அவர்கள், முஸ்அப் பின் ஸஃத் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) என்று அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூள்-முன்னுரிமை பெற்ற செய்தி என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-590)

  • இதன் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரம்.
  • மேற்கண்ட செய்தியின் கருத்து வேறு நபித்தோழர்கள் வழியாக வேறு அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது என்பதால் இது ஸஹீஹுன் லிஃகைரிஹீ ஆகும்.

2 . இந்தக் கருத்தில் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஸ்அப் பின் ஸஃத் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

பார்க்க: தயாலிஸீ-212 , அஹ்மத்-1481 , 1494 , 1555 , 1607 , தாரிமீ-2825 , இப்னு மாஜா-4023 , திர்மிதீ-2398 ,

  • அலாஉ பின் முஸய்யிப் —> முஸய்யிப் பின் ராஃபிஃ —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

பார்க்க: இப்னு ஹிப்பான்-2920 ,

மேலும் பார்க்க: அஹ்மத்-27079

4 comments on Tirmidhi-2398

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஆஸிம் பின் அபுன்நஜூத் பற்றி பெரும்பாலான அறிஞர்கள் ஹஸன்தரத்தில் உள்ளவர் என்று கூறியுள்ளனர். இப்னு ஹஜர் அவர்கள் முன்சென்ற அறிஞர்களின் விமர்சனத்தின் படி இவரை صدوق له اوهام என்ற 5 வது வகையினரில் சேர்த்துள்ளார். சிலர், இந்த வகையினர் தனித்து அறிவித்தால் அது பலவீனமானது. இவரைப் போன்று மற்றவர்கள் அறிவித்திருந்தால் சரியானது என்றும் கூறுகின்றனர். வேறு சிலர், அவர் தவறு செய்த செய்திகள் மட்டுமே தவறானது. மற்றவை சரியானது என்றும் கூறுகின்றனர். இப்னு ஹஜர் அவர்களே இந்த 5வது வகையினரின் ஹதீஸ்களை சில இடத்தில் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

      மேற்கண்ட தகவல்களிலிருந்து இந்த செய்தியை இவர் தனித்து அறிவிக்கவில்லை என்பதால் ஹதீஸ்கலை விதிப்படி இந்த செய்தியை சரியானது-அதாவது ஸஹீஹுன்லிகைரீ என்று கூறலாம். இதைப்பற்றி மாற்றுக்கருத்து இருந்தால் பதிவு செய்யவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.