தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2399

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(திர்மிதி: 2399)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَا يَزَالُ البَلَاءُ بِالمُؤْمِنِ وَالمُؤْمِنَةِ فِي نَفْسِهِ وَوَلَدِهِ وَمَالِهِ حَتَّى يَلْقَى اللَّهَ وَمَا عَلَيْهِ خَطِيئَةٌ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2323.
Tirmidhi-Shamila-2399.
Tirmidhi-Alamiah-2323.
Tirmidhi-JawamiulKalim-2336.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41980-முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா நடுத்தரமானவர்.

பார்க்க: ராவிபெயர்-முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா.


இந்தச் செய்தியை அபூஸலமா அவர்களிடமிருந்து, பலமான அறிவிப்பாளர் அதீ பின் அதீயும் அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான ஹதீஸாகும்.

பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-494.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-7859, 9811, அல்அதபுல் முஃப்ரத்-494, திர்மிதீ-2399, ஷுஅபுல் ஈமான்-9376, …


2 . ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2398.


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-27079,

9 comments on Tirmidhi-2399

  1. அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸின் அரபி மூலத்துடைய அடிக்குறிப்பில் «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதன் தரம் பற்றிய தலைப்பில் பலமான செய்தி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஹசன் என்பதற்கும், சஹீஹ் என்பதற்கும் வித்தியாசம் இருப்பதால் இந்த ஹதீஸின் தரத்தை எப்படி புரிந்துக் கொள்வது?

    ஹசன் சஹீஹ் என்றால் ஹசனை விட தரம் கூடியதா?

    1. வ அலைக்கும் ஸலாம்.
      1 . திர்மிதீ இமாம் அவர்களின் ஹஸன் ஸஹீஹ் என்ற தரத்தைக் குறித்து பல விளக்கங்களை அறிஞர்கள் கூறியுள்ளனர். இப்னுஸ் ஸலாஹ் அவர்களின் கருத்து ஒரு செய்தியின் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரமாக இருந்து அந்தக் கருத்து வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்தால் திர்மிதீ இமாம் இவ்வாறு கூறுவார் என்பதாகும்.
      2 . அதன்படி நாம் சரியான ஹதீஸ்களுக்கு (ஹஸன், பலமான செய்தி) கருத்தைக் கவனித்து தரம் தருகிறோம். வேறு வழியில் செய்தி சரியாக இருந்து அதன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமாக இருந்தால் அதை இஸ்னாதுஹு ளஈஃப் என்று குறிப்பிடுகிறோம்.
      3 . அனைத்து அறிவிப்பாளர்தொடரும் ஹஸன் தரத்தில் இருக்கும்போது ஹஸன் தரம் என்றே தரம் குறிப்பிடுவோம். (இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்)

  2. ஜஸாக்கல்லாஹு ஹைரன். இந்த திர்மிதீ 2399 – வது ஹதீஸ் ஸஹீஹ் லிஃகைரிஹீ என்று சொல்கிறீர்களா?

    1. ஆம், அல்அதபுல் முஃப்ரத்-494 பலமான செய்தி என்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ.

      1. இதை ஹஸன் லிஃகைரிஹீ என்று சொல்லக்கூடாதா?

        ஸஹீஹ் லிஃகைரிஹீ என்பதற்கும் ஹஸன் லிஃகைரிஹீ என்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை சொல்ல முடியுமா?

  3. குறைந்த அளவு பலவீனமான செய்திகள் இரண்டு வந்தால் அதை ஹஸன் லிஃகைரிஹீ என்று கூறுவார்கள். விரிவான விளக்கத்தை ஹதீஸ்கலை பகுதியில் ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்றால் என்ன? என்ற கட்டுரையை பார்க்கவும்.

    1. இன்ஷா அல்லாஹ் அந்தக் கட்டுரையை படிக்கிறேன். ஆனால் ஸஹீஹ் லிஃகைரிஹீ என்பதற்கும் ஹஸன் லிஃகைரிஹீ என்பதற்கும் உள்ள வித்தியாசம் உள்ளதா அல்லது இரண்டும் ஒன்றுதானா என்பதை மட்டும் தயவுசெய்து சொல்லுங்கள்

      1. இரண்டும் ஒன்று அல்ல. ஹஸன் தர செய்தியை வேறு ஹஸன் தர செய்தி வரும்போது, அல்லது ஸஹீஹ் செய்தி வரும்போது ஸஹீஹ் லிஃகைரிஹீ என்ற வழக்கத்தை நாம் கடைப்பிடிக்கிறோம்.

        (பலவீனமான ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடரில் வந்தாலும் அதற்கு ஹஸன் லிஃகைரீ என்றும், ஸஹீஹ் லிஃகைரிஹீ என்றும் சிலர் கூறுவார்கள். இவ்வாறே ஒரு செய்தி ஸஹீஹான, ஹஸன் தர அறிவிப்பாளர்தொடரில் வந்து அந்த கருத்து பலவீனமான அறிவிப்பாளர்தொடரில் இருந்தால் பலவீனமான அறிவிப்பாளர்தொடருக்கு ஹஸன் லிஃகைரிஹீ என்றும் சிலர் கூறுவார்கள். இந்த வழக்குச் சொல்லை நாம் கடைப்பிடிக்கவில்லை)

        கருத்து பலவீனமானது என்றால் பலவீனமான செய்தி என்றும், கருத்து சரியாக இருந்து பலவீனமான அறிவிப்பாளர்தொடர் என்றால் இஸ்னாதுஹு ளயீஃப் என்றும் குறிப்பிடுவோம்.

        1. அல்ஹம்துலில்லாஹ், இது போதுமான விளக்கம். ஜஸாக்கல்லாஹ் ஹைரன் கஸீரா

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.