ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர், இரவு நேரத்தில் ஓர் அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன இன்ன அத்தியாயங்களிலிருந்து எனக்கு மறக்கவைக்கப்பட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார்” என்று சொன்னார்கள்.
அத்தியாயம்: 66
(புகாரி: 5038)حَدَّثَنَا أَحْمَدُ ابْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَقْرَأُ فِي سُورَةٍ بِاللَّيْلِ، فَقَالَ: «يَرْحَمُهُ اللَّهُ لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا، آيَةً كُنْتُ أُنْسِيتُهَا مِنْ سُورَةِ كَذَا وَكَذَا»
Bukhari-Tamil-5038.
Bukhari-TamilMisc-5038.
Bukhari-Shamila-5038.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-, அஹ்மத்-, புகாரி-5038, 2655, 5037, 5042, 6335, முஸ்லிம்-1442, 1443, அபூதாவூத்- 1331, …
فتح الباري لابن حجر (9/ 86)
كُنْتُ أُنْسِيتُهَا هِيَ مُفَسِّرَةٌ لِقَوْلِهِ أَسْقَطْتُهَا فَكَأَنَّهُ قَالَ أَسْقَطْتُهَا نَسِيَانًا لَا عَمْدًا وَفِي رِوَايَةِ مَعْمَرٍ عَنْ هِشَامٍ عِنْدَ الْإِسْمَاعِيلِيِّ كُنْتُ نَسِيتُهَا بِفَتْحِ النُّونِ لَيْسَ قَبْلَهَا هَمْزَةٌ قَالَ الْإِسْمَاعِيلِيُّ النِّسْيَانُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِشَيْءٍ مِنَ الْقُرْآنِ يَكُونُ عَلَى قِسْمَيْنِ أَحَدُهُمَا نِسْيَانُهُ الَّذِي يَتَذَكَّرُهُ عَنْ قُرْبٍ وَذَلِكَ قَائِمٌ بِالطِّبَاعِ الْبَشَرِيَّةِ وَعَلَيْهِ يَدُلُّ قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَدِيثِ بن مَسْعُودٍ فِي السَّهْوِ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ أَنْسَى كَمَا تَنْسَوْنَ وَالثَّانِي أَنْ يَرْفَعَهُ اللَّهُ عَنْ قَلْبِهِ عَلَى إِرَادَةِ نَسْخِ تِلَاوَتِهِ وَهُوَ الْمُشَارُ إِلَيْهِ بِالِاسْتِثْنَاءِ فِي قَوْلِهِ تَعَالَى سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى إِلَّا مَا شَاءَ الله قَالَ فَأَمَّا الْقِسْمُ الْأَوَّلُ فَعَارِضٌ سَرِيعُ الزَّوَالِ لِظَاهِرِ قَوْلِهِ تَعَالَى إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَأَنا لَهُ لحافظون وَأَمَّا الثَّانِي فَدَاخِلٌ فِي قَوْلِهِ تَعَالَى مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ ننسها عَلَى قِرَاءَةِ مَنْ قَرَأَ بِضَمِّ أَوَّلِهِ مِنْ غَيْرِ هَمْزَةٍ قُلْتُ وَقَدْ تَقَدَّمَ تَوْجِيهُ هَذِهِ الْقِرَاءَةِ وَبَيَانُ مَنْ قَرَأَ بِهَا فِي تَفْسِيرِ الْبَقَرَةِ وَفِي الْحَدِيثِ حُجَّةٌ لِمَنْ أَجَازَ النِّسْيَانَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا لبس طَرِيقُهُ الْبَلَاغَ مُطْلَقًا وَكَذَا فِيمَا طَرِيقُهُ الْبَلَاغُ لَكِنْ بِشَرْطَيْنِ أَحَدُهُمَا أَنَّهُ بَعْدَ مَا يَقَعُ مِنْهُ تَبْلِيغُهُ وَالْآخَرُ أَنَّهُ لَا يَسْتَمِرُّ عَلَى نِسْيَانِهِ بَلْ يَحْصُلُ لَهُ تَذَكُّرُهُ إِمَّا بِنَفْسِهِ وَإِمَّا بِغَيْرِهِ وَهَلْ يُشْتَرَطُ فِي هَذَا الْفَوْرُ قَوْلَانِ فَأَمَّا قَبْلَ تَبْلِيغِهِ فَلَا يَجُوزُ عَلَيْهِ فِيهِ النِّسْيَانُ أَصْلًا وَزَعَمَ بَعْضُ الْأُصُولِيِّينَ وَبَعْضُ الصُّوفِيَّةِ أَنَّهُ لَا يَقَعُ مِنْهُ نِسْيَانٌ أَصْلًا وَإِنَّمَا يَقَعُ مِنْهُ صُورَتُهُ لِيَسُنَّ قَالَ عِيَاضٌ لَمْ يَقُلْ بِهِ مِنَ الْأُصُولِيِّينَ أَحَدٌ إِلَّا أَبَا المظفر الاسفرايني وَهُوَ قَوْلٌ ضَعِيفٌ …
ஹதீஸ் விளக்கம்
“நான் அதை மறக்கடிக்கப்பட்டிருந்தேன்” (كُنْتُ أُنْسِيتُهَا) என்ற வாசகம், வேறு ஹதீஸ்களில் வந்துள்ள “நான் அதை விட்டுவிட்டேன்” (أَسْقَطْتُهَا) என்ற வார்த்தைக்கு விளக்கமாக அமைந்துள்ளது. அதாவது, “நான் அதை வேண்டுமென்றே விடவில்லை, மறதியினால் தான் விட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்றதாகும்.
இஸ்மாயீலி (ரஹ்) அவர்களிடத்தில் பதிவாகியுள்ள மஃமர் பின் ஹிஷாம் (ரஹ்) வழியாக வரும் அறிவிப்பில், ஹம்ஸா (أ) இல்லாமல் “நான் அதை மறந்திருந்தேன்” (كُنْتُ نَسِيتُهَا) என்று இடம்பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் மறதி குறித்த வகைகள்:
இஸ்மாயீலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனில் சிலவற்றை மறப்பது என்பது இரண்டு வகைப்படும்:
இயல்பான மறதி: மனித இயல்பின் காரணமாகச் சிறிது காலத்திற்கு ஏற்பட்டு, பிறகு விரைவாக நினைவுக்கு வந்துவிடுவது. இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்கள் அறிவிக்கும் ‘ஸஹ்வு’ (மறதி) குறித்த ஹதீஸில் வரும், “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறக்கிறேன்” என்ற நபிமொழி இதற்குச் சான்றாகும்.
இறைவனால் மறக்கடிக்கப்படுதல்: ஒரு வசனத்தின் ஓதும் சட்டத்தை (திலாவத்) நீக்க (நஸ்கு செய்ய) அல்லாஹ் நாடி, அதை நபியவர்களின் உள்ளத்திலிருந்து அகற்றிவிடுவது. இதுவே அல்குர்ஆனில் (87:6,7) வரும் “நாம் உமக்கு ஓதிக்காட்டுவோம்; நீர் மறக்கமாட்டீர் – அல்லாஹ் நாடினாலன்றி” என்ற வசனத்தில் வரும் விதிவிலக்கைக் குறிக்கும்.
விளக்கவுரை
முதல் வகை: இது தற்காலிகமானது, விரைவிலேயே நீங்கிவிடும். ஏனெனில், “நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.” (அல்குர்ஆன்: 15:9) என்ற இறைவசனம் இதற்கு ஆதாரமாக உள்ளது.
இரண்டாம் வகை: இது, “ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததையோ, அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?” (அல்குர்ஆன்: 2:106) என்ற வசனத்தின் கீழ் வரும்.
நபி (ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்படலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஒரு ஆதாரமாகும். ஆனால் அறிஞர்கள் இதில் இரு நிபந்தனைகளை விதிக்கின்றனர்:
1 . அந்த வசனத்தை அவர்கள் மக்களுக்கு முழுமையாக எத்திவைத்த பிறகுதான் மறதி ஏற்படலாம்.
2 . அந்த மறதி நிலையாகத் தொடராது. அவர்களாகவோ அல்லது பிறர் நினைவுபடுத்துவதன் மூலமோ அவர்களுக்கு மீண்டும் நினைவுக்கு வந்துவிடும்.
எனவே மக்களைச் சென்றடைவதற்கு முன்னரே நபியவர்களுக்கு மறதி ஏற்படுவது என்பது எவ்விதத்திலும் சாத்தியமில்லை.
சில உஸூல் அறிஞர்களும், ஸூஃபிக்களும் “நபியவர்களுக்கு மறதியே ஏற்படாது. மற்றவர்கள் மறந்தால் என்ன செய்யவேண்டும் என்ற சட்டங்களைக் கற்றுக்கொடுப்பதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள்” என்று கூறியுள்ளனர். இது பலவீனமான கருத்தாகும் என காழீ இயாள் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்ஸலாமு அலைக்கும் இந்த ஹதீஸின் விளக்கம் ஏதும் உள்ளதா?
நபிகளார் குர்ஆனின் சில வசனங்களை மறந்தார்களா?
https://onlinepj.co.in/videos/?id=896111308