பாடம் : 26 குர்ஆனை மறப்பதும், இன்ன இன்ன வசனங்களை நான் மறந்துவிட்டேன் என்று சொல்லலாமா?என்பதும், (நபியே!) நாம் உம்மை ஓதிடச் செய்வோம். பிறகு நீர் மறக்க மாட்டீர்; ஆனால், அல்லாஹ் நாடியதைத் தவிர எனும் (87:6ஆவது) இறைவசனமும்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
பள்ளிவாசலில் ஒருவர் குர்ஆனை ஓதிக்கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது அவர்கள் ‘அல்லாஹ் அவருக்குக் கருணைபுரியட்டும்! இன்ன அத்தியாயத்தின் இன்ன இன்ன வசனங்களை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்’ என்று கூறினார்கள்.
‘இன்ன அத்தியாயத்தில் நான் மறந்திருந்த இன்ன இன்ன வசனங்களை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் ஹிஷாம்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது. 50
இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 66
(புகாரி: 5037)بَابُ نِسْيَانِ القُرْآنِ، وَهَلْ يَقُولُ: نَسِيتُ آيَةَ كَذَا وَكَذَا
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {سَنُقْرِئُكَ فَلاَ تَنْسَى إِلَّا مَا شَاءَ اللَّهُ}
حَدَّثَنَا رَبِيعُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَقْرَأُ فِي المَسْجِدِ، فَقَالَ: «يَرْحَمُهُ اللَّهُ لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا، آيَةً مِنْ سُورَةِ كَذَا» حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا عِيسَى، عَنْ هِشَامٍ، وَقَالَ: أَسْقَطْتُهُنَّ مِنْ سُورَةِ كَذَا، تَابَعَهُ عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَعَبْدَةُ ، عَنْ هِشَامٍ
சமீப விமர்சனங்கள்